நெடுஞ்சாலையில் இதை கவனித்து இருக்கீங்களா? இனி ஞாபகம் வச்சுக்கோங்க!
சாலையில் வரையப்பட்டு இருக்கும் ஒவ்வொரு கோடுக்கும் ஒரு குறிப்பிட்ட அர்த்தம் உள்ளது. சாலையில் வாகனம் ஓட்டும் போது இவற்றை ஞாபகம் வைத்து கொள்ள வேண்டும்.
நமது வாகனத்தில் பயணிக்கும் போது, சாலையின் இருபுறம் அல்லது நடுவில் வெள்ளை மற்றும் மஞ்சள் கோடுகளை பார்த்து இருப்போம். இந்த கோடுகள் சில குறிப்பிட்ட காரணத்திற்காக சாலைகளில் அரசாங்கத்தால் வரையப்படுகின்றன. இதில் உள்ள ஒவ்வொரு வரிக்கும் ஒரு குறிப்பிட்ட அர்த்தம் உள்ளது என்று உங்களுக்கு தெரியுமா? போக்குவரத்து விதிகளை பின்பற்ற இது கோடுகள் உதவுகிறது. நேர் கோடுகளாக இருக்கும் போது ஒரே நேரத்தில் இரண்டு கோடுகளும் வரையப்பட்டு இருக்கும். இதற்கான அர்த்தம் என்ன? ஏன் சாலையில் வரையப்பட்டுள்ளன என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
மேலும் படிக்க | ஆண்ட்ராய்டு மொபைல் வச்சிருக்கீங்களா? அப்போ இந்த எச்சரிக்கை உங்களுக்கு தான்
வெள்ளை கோடு
சாலையின் நடுவில் நேர் வெள்ளைக் கோடு இருந்தால், அந்த திசையில் மட்டுமே பயணிக்க வேண்டும் என்று அர்த்தம். இந்த சாலையில் மற்றொரு பாதைக்கு செல்ல முயன்றால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இந்த கோடுகளுக்கு இடையில் இடைவெளி இருந்தால் மட்டுமே நீங்கள் மற்றொரு பாதையில் பயணிக்கலாம்.
மஞ்சள் கோடு
சாலையில் உள்ள நேரான மஞ்சள் கோடுகள் நீங்கள் மற்ற வாகனங்களை முந்திச் செல்லலாம் என்பதை குறைகிறது. ஆனால் அதன் இருபுறமும் செல்ல முடியாது. மஞ்சள் கோடுகள் சில மாநிலங்களில் வேறு அர்த்தங்களைக் கொண்டுள்ளது. எடுத்துக்காட்டாக தெலுங்கானாவில், மங்கள் கொடுக்கல் இருந்தால் மற்ற வாகனங்களை முந்திச் செல்ல கூடாது. இரண்டு நேரான மஞ்சள் கோடுகள் இருந்தால் நீங்கள் சென்று கொண்டிருக்கும் பாதையில் மட்டுமே பயணிக்க வேண்டும் என்று அர்த்தம்.
இடைவெளிகளுடன் மஞ்சள் கோடு
சில நேரங்களில் சாலையில் இடைவெளிகளுடன் மஞ்சள் கோடு இருப்பதைக் காண முடியும். இந்த சமயத்தில் நீங்கள் மற்ற வாகனங்களை முந்திச் செல்லலாம். ஆனால் நேராக மஞ்சள் கோடுகள் இருந்தால், நீங்கள் பிற வாகனங்களை முந்திச் செல்ல முடியாது.
வெள்ளைக் கோடு காய்ச்சல்
வெள்ளைக் கோடு காய்ச்சல் என்பது நெடுஞ்சாலையில் ஹிப்னாஸிஸுக்குப் பயன்படுத்தப்படும் சொல் ஆகும். சாலையில் நீண்ட நேரம் வாகனம் ஓட்டினால், ஓட்டுநர் சோர்வடைந்து, வாகனம் ஓட்டுவதில் கவனம் செலுத்தும் போது ஏற்படும் ஒரு நிலை இது. நெடுஞ்சாலையில் உள்ள வெள்ளைக் கோடுகளை தொடர்ந்து பார்த்தல் வெள்ளைக் கோடு காய்ச்சலை உண்டாக்கும். காலியான நெடுஞ்சாலையில் சாலையை ஆழமாகப் பார்த்துக் கொண்டிருந்தால், அதில் இருக்கும் வெள்ளைக் கோடு ஹிப்னாஸிஸ் போன்ற சூழ்நிலையை உருவாக்கும். இதனால் விபத்தும் ஏற்பட கூடும். சோர்வு, தூக்கமின்மை, கவனமின்மை, கவனம் செலுத்துவதில் சிரமம் போன்ற பல வெள்ளைக் கோடு காய்ச்சலின் அறிகுறிகளாகும்.
வெள்ளைக் கோடு காய்ச்சலைத் தவிர்ப்பது எப்படி?
வெள்ளைக் கோடு காய்ச்சலைத் தவிர்க்க சில விஷயங்களை பின்பற்றினால் போதும். நீங்கள் நீண்ட தூரம் வாகனம் ஓட்ட வேண்டி இருந்தால் பயணத்திற்கு முன் போதுமான தூக்கம், நல்ல உணவு சாப்பிடுங்கள், வாகனம் ஓட்டும்போது நீரேற்றமாக இருக்க வேண்டும். வனம் சிதறாமல், அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பார்த்துக் கொண்டே வாகனம் ஓட்டுவது நல்லது. சத்தமாக பாட்டு கேட்பது, வேகத்தை கூடுவது அல்லது குறைத்து கொண்டு இருந்தால் இவற்றை தவிர்க்கலாம். வெள்ளைக் கோடு காய்ச்சலின் அறிகுறிகளை நீங்கள் உணர்ந்தால், உடனடியாக காரை நிறுத்திவிட்டு ஓய்வெடுக்கவும்.
மேலும் படிக்க | OpenAI Sora வீடியோக்களை எப்படி உருவாக்குகிறது? நீங்கள் பயன்படுத்துவது எப்படி?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ