iPhone 12 Offer; ஸ்மார்ட்போன்கள் மீது மிகுந்த பிரியம் கொண்டிருப்பவர்களுக்கு ஆப்பிள் ஐபோன் வாங்க வேண்டும் என்பது அலாதி பிரியமாக இருக்கிறது. அவற்றின் அதிகப்படியான விலை காரணமாக ஆப்பிள் ஐபோன் பலருக்கு இன்னும் கனவு போனாகவே இருக்கிறது. ஆனால், லேட்டஸ்டாக அறிவிக்கப்பட்டிருக்கும் தள்ளுபடியில் ஐபோன் கனவை நனவாக்கும் வாய்ப்பு உங்களுக்கு உருவாகியுள்ளது. ஐபோன் 12-ன் 256 ஜிபி வேரியண்ட் ரூ.26 ஆயிரத்திற்கும் அதிகமான தள்ளுபடியில் Flipkart-ல் ஆஃபர் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சலுகையைப் பயன்படுத்திக் iPhone 12 -ஐ வீட்டிற்கு எடுத்துச் செல்லலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | Amazon Prime Day Sale: பொருட்களை வாங்க சூப்பரான டிப்ஸ்! பணத்தை மிச்சப்படுத்துங்கள்


iPhone 12 பெரும் தள்ளுபடி


ஐபோன் 12-ன் 256 ஜிபி வேரியண்ட் ஆப்பிள் நிறுவனத்தால் ரூ.80,900 விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் 17% தள்ளுபடிக்கு பிறகு ரூ.66,999க்கு Flipkart-ல் விற்கப்படுகிறது, அதாவது ரூ.13,901 தள்ளுபடிக்குப் பிறகு இந்த விலையில் விற்பனை செய்யப்படும். இவை மட்டும் ஆஃபர் கிடையாது. சில வங்கி கார்டுகளைப் பயன்படுத்தி பணம் செலுத்தினால் கூடுதலாக ஆயிரம் ரூபாய் வரை தள்ளுபடி கிடைக்கும். அதன் மூலம் ஐபோன் 12-ஐ 65,999 ரூபாய்க்கு வாங்கலாம். 


எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் 


மேல் குறிப்பிட்ட சலுகைகளின்படி ஐபோன் 12-ஐ வெறும் ரூ.65,999-க்கு வாங்கலாம். இது தவிர, உங்கள் பழைய ஸ்மார்ட்போனுக்கு மாற்றாக ஐபோன் 12-ஐ வாங்கினால் ரூ.11,500 வரை சேமிக்கலாம். இந்த எக்ஸ்சேஞ்ச் சலுகையின் முழுப் பலனையும் நீங்கள் பெற்றால், ஒட்டுமொத்தமாக ஐபோன் 12-ல் ரூ.26,401 தள்ளுபடி கிடைக்கும். இதன் மூலம் ரூ.54,499-க்கு இந்த ஆப்பிள் போனை வீட்டிற்கு எடுத்துச் செல்ல முடியும்.


ஐபோன் 12-ன் அம்சங்கள்


ஐபோன் 12-ன் 64 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் A14 பயோனிக் சிப்பில் வேலை செய்யும். இந்த ஐபோனில், நீங்கள் டூயல் பின்புற கேமரா அமைப்பைப் பெறுவீர்கள். இவை இரண்டும் 12MP சென்சார்கள். மேலும், செல்ஃபி எடுப்பதற்கும் வீடியோ எடுப்பதற்கும் 12எம்பி முன்பக்க கேமரா உள்ளது. 5ஜி சேவைகளை ஆதரிக்கும். இந்த ஆப்பிள் ஐபோன் 6.1 இன்ச் சூப்பர் ரெடினா எக்ஸ்டிஆர் டிஸ்ப்ளேவுடன் வருகிறது. 


மேலும் படிக்க | Vivo T1x Launched: விவோவின் பட்ஜெட் 4ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ