இந்திய திரைத்துறையில் மிகவும் பிரலமானவராக இருக்கும் ஷாருக்கான், என்ன செய்தாலும் அன்றைய நாளில் அது தான் டிரெண்டிங். சினிமாவைக் கடந்து தொழிலதிபராகவும் இருக்கும் அவரின் ஒவ்வொரு அசைவும் அன்றைய நாள் செய்திதான். அதனால், அவர் பயன்படுத்தும் கார் முதல் அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ள ஆர்வமாக ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் அவர், என்ன போன் பயன்படுத்துகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஷாருக்கான் எந்த ஸ்மார்ட்போன் பயன்படுத்துகிறார்?


இந்தியாவில் மிகவும் விலையுயர்ந்த போன்களில் ஒன்றை தான் அவர் பயன்படுத்துகிறார். அவர் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன் iPhone 13 Pro Max. கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்தியாவில் அதிகம் விற்பனையான போன்களில் ஒன்றாக இருக்கும் ஆப்பிள் ஐபோன் புரோ மேக்ஸின் விலையைக் கேட்டால் உங்களின் தலை கிறுகிறுத்துவிடும். அந்த போனின் விலை ரூ.1,79,900. ஆப்பிளின் சமீபத்திய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் சீரிஸின் டாப் மாடல் போன் இது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். 


மேலும் படிக்க | ரூ.374 -க்கு விற்பனையாகும் Realme ஸ்மார்ட்போன் - உடனே முந்துங்கள்!


எப்படி தெரியவந்தது? 


ஷாருக்கான் பயன்படுத்தும் போன் குறித்த தகவல் எப்படி வெளியானது? என நீங்கள் யோசிக்கலாம். அந்த தகவலை அவரே இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். பாலிவுட்டில் 30 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதையொட்டி செல்பி எடுத்து டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் வெளியிட்டுள்ளார். அவர் பதிவிட்ட செல்பி புகைப்படத்தின் மூலம் ஷாரூக் பயன்படுத்தும் போன் குறித்த தகவல் தெரியவந்தது. 



ஷாரூக் போனின் அம்சங்கள்


iPhone 13 Pro Max போனைத் தான் ஷாரூக்கான் பயன்படுத்துகிறார். இந்த மொபைல்  A15 பயோனிக் சிப்பில் வேலை செய்கிறது. மூன்று பின்புற கேமரா அமைப்புடன் வருகிறது. இதில் இருக்கும் மூன்று சென்சார்களும் 12MP ஆகும். இந்த மொபைலில், உங்களுக்கு 6.7 இன்ச் சர் ரெடினா எக்ஸ்டிஆர் டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது. விரைவான சார்ஜிங் அம்சம் கொண்ட ஆப்பிள் ஐபோன் புரோ மேக்ஸ், 1TB ஸ்டோரேஜ் கொடுக்கப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | இந்தியாவில் அறிமுகமாகும் OnePlus Nord 2T 5G ஸ்மார்ட்போன்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR