Japan-இன் Tanegashima Space Centre-இல் உள்ள விண்வெளி மையத்திலிருந்து ஹெச்-2ஏ ராக்கெட் மூலம் உள்ளூர் நேரப்படி அதிகாலை 1.58 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

”தீப் பிழம்புகளை உமிழ்ந்தவாறு சீறிப் பாய்ந்தது ராக்கெட். அதிலிருந்து  ஒருமணிநேரத்தில் தனியாகப் பிரிந்த விண்கலம், இணைக்கப்பட்டிருந்த சோலார் பேனல்கள் மூலம் சக்தியைப் பெற்று, சிக்னல்களைக் கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பியது” என்று ராக்கெட்டை வடிவமைத்து விண்கலனை ஏவிய Mitsubishi Heavy Industries நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்தது. 


ஜப்பானிய ஏவுதளத்தில் நிலவிய மோசமான வானிலை காரணமாக இரு முறை ஒத்திப் போடப்பட்ட ஐக்கிய அரபு எமிரேட்ஸ்ஸின் விண்கலன் ஏவும் திட்டம் இன்று வெற்றிகரமாக ஏவப்பட்டது.


Dubaiஇல் அமைந்துள்ள Al Khawaneej Space control roomக்கு Hope தொடர்ந்து சிக்னல்களை அனுப்பி வருவதாக UAE தெரிவித்துள்ளது.


ஐக்கிய அரபு அமீரகத்தின் இந்த நம்பிக்கை விண்கலம் விண்வெளியில் 493 மில்லியன் கி.மீ. தொலைவை 200 நாட்களில் கடந்து 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் செவ்வாய் கிரகத்தைச் சென்று சேரும்.


Also Read | செவ்வாய் கிரகத்திற்கான ஐக்கிய அரபு எமிரேட்ஸின் முதல் விண்கலன் திட்டம் ஒத்திவைப்பு!!


இந்த ஆய்வு ஏழு மாதங்கள் எடுக்கும் ஒரு பயணத்தில் 493 மில்லியன் கிலோமீட்டர் விண்வெளியில் பயணிக்கும். செவ்வாய் கிரகத்தில் ஓராண்டு என்பது 687 நாட்களாகும். எனவே அதன் முழு ஆண்டையும் அவதானிப்பதற்காக 687 நாட்கள் வரை செவ்வாய் கிரகத்தைச் சுற்றிவரும் Hope, சிவப்பு கிரகத்தின் காலநிலை, பருவநிலை, பூமிக்கும், செவ்வாய் கிரகத்திற்கும் உள்ள வேறுபாடுகள் என்ன? அதன் செந்நிறத்திற்கு காரணம் என்ன? உள்ளிட்ட பல விஷயங்களை குறித்து ஆய்வு செய்யும். 


2014ஆம் ஆண்டு ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அதிபர் Sheikh Khalifa bin Zayed Al Nahyan Hope Mars Missionஐ அறிவித்தார். இந்தத் விண்வெளித் திட்டம், ஐக்கிய அரபு அமீரகத்தின் மிகப் பெரிய விஞ்ஞான முன்முயற்சியாக கருதப்படுகிறது.


Hope திட்டத்துக்காக 20 கோடி அமெரிக்க டாலர்களைச் செலவிட்டுள்ளது UAE. ஏறக்குறைய 6 ஆண்டுகள் தீவிர முயற்சியில் இந்த விண்கலம் உருவாக்கப்பட்டு, இன்று வெற்றிகரமாக செலுத்தப்பட்டுள்ளது.