புதுடெல்லி: மின்சார வாகனங்களுக்கான தேவையும் உற்பத்தியும் அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் ஜாவா மோட்டார் சைக்கிள்களுக்கு புத்துயிர் அளித்த கிளாசிக் லெஜெண்ட்ஸ் நிறுவனம் தற்போது 2022 ஆம் ஆண்டில் ஒரு மின்சார பைக்கையும் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் கசிந்த வடிவமைப்பு ரெண்டர்கள் மூலம் இந்த செய்தி பற்றி தெரிய வந்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜாவா மோட்டார்சைக்கிள்கள் அறிமுக தேதி அல்லது நேரத்தை இன்னும் உறுதிப்படுத்தவில்லை என்றாலும், நிறுவனம் தற்போது தனது மின்சார பைக் (Electric Bike) தொடர்பான பணிகளில் ஈடுபட்டுள்ளதாக ஊடக அறிக்கைகள் ஊகிக்கின்றன. இந்த பிராண்டுக்கு பெருமை சேர்க்கும் கிளாசிக் ரெட்ரோ வடிவமைப்பில் நிறுவனம் மின்சார பைக்கை வடிவமைக்கக்கூடும் என ஆட்டோகார் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஒட்டுமொத்த வடிவமைப்பு மற்றும் கட்டமைப்பின் அடிப்படையில் ஜாவாவின் மின்சார பைக் ஏற்கனவே இருக்கும் Jawa Forty-Two பெட்ரோல் பைக் போல தோன்றுவதாக டிசைன் ரெண்டர்கள் சுட்டிக்காட்டுகின்றன. வரவிருக்கும் எலக்ட்ரிக் பைக்கிலும் பெட்ரோல்  பைக்கில் இருப்பது போன்ற அதே அப்ரைட் நிலையை ஓட்டுனர்கள் பெற முடியும்.


இருப்பினும், அறிமுகமாகவுள்ள மின்சார பைக் (Electric Vehicle) , எரிபொருள் பைக்குகள் தங்கள் எரிபொருள் தொட்டிகளைக் கொண்டிருக்கும் இடத்திற்கு கீழே ஒரு கேசில் அதன் பேட்டரியை கொண்டிருக்கக்கூடும்.


ALSO READ: Revolt RV 400 மின்சார வாகனத்தின் முன்பதிவு மீண்டும் துவங்கியது: முழு விவரம் உள்ளே


சந்தையில் புதிதாக அறிமுகமாகவுள்ள ஜாவாவின் மின்சார வாகனம், ஒரு விரைவான சார்ஜிங் வசதியுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இதன் மூலம், வாகன ஓட்டிகள் வரம்பு மற்றும் சார்ஜ் பற்றி கவலைப்படாமல், தங்கள் பைக்கை நீண்ட தூர பயணத்துக்கு தாராளமாக எடுத்துச் செல்லலாம்.


ஜாவாவைத் தவிர, ராயல் என்ஃபீல்ட் மற்றும் யமஹாவும் (Yamaha) இந்திய சந்தைகளில் மின்சார பைக்குகளை அறிமுகப்படுத்துவதற்கான முயற்சிகளை இரட்டிப்பாக்கியுள்ளன. உதாரணமாக, ராயல் என்ஃபீல்டின் பேரண்ட் நிறுவனமான Eicher Motors, மின்சார வாகனங்களின் ஒரு புதிய ரேஞ்சிற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளது. இது பலதரப்பட்ட வாடிக்கையாளர்களின் தேவையைப் பூர்த்தி செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதற்கிடையில், யமஹா, இந்தியா மற்றும் பிற உலகளாவிய சந்தைகளுக்கான புதிய மின்சார வாகன தளத்தில் பணியாற்றி வருவதாக ஜப்பானிய இரு சக்கர வாகன மேஜர் இந்த வார தொடக்கத்தில் அறிவித்தது.


ALSO READ:HERO MotoCorp நிறுவனத்தின் Electric Bike அடுத்த ஆண்டு அறிமுகம்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR