HERO MotoCorp நிறுவனத்தின் Electric Bike அடுத்த ஆண்டு அறிமுகம்!

நிறுவனம் தனது சொந்த தயாரிப்பு தயாரிக்க ஜெய்ப்பூர் (ராஜஸ்தான்) மற்றும் ஸ்டிஃபென்ஸ்கிர்ச்சென் (ஜெர்மனி) ஆகிய நாடுகளில் உள்ள தனது ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்களைப் பயன்படுத்துகிறது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 16, 2021, 06:11 PM IST
HERO MotoCorp நிறுவனத்தின் Electric Bike அடுத்த ஆண்டு அறிமுகம்! title=

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் எப்போது என்பது பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. நிறுவனத்தின் முதல் மின்சார வாகனம் வருகின்ற 2022ம் ஆண்டு ஜனவரி தொடங்கி மார்ச் மாதத்திற்குள் அறிமுகமாகிவிடும். 

அடுத்த ஆண்டின் முதல் காலாண்டு பகுதிக்குள் ஹீரோ மோட்டோகார்ப் (Hero MotoCorp) நிறுவனம் முதல் மின்சார வாகனத்தின் (Electric vehicle) அதிகாரப்பூர்வ அறிமுகம் அரங்கேறிவிடும் என தெரிய வந்துள்ளது. இதுகுறித்த தகவலை மணிகன்ட்ரோல் ஆங்கில செய்தி தளம் வெளியிட்டுள்ளது. ஹீரோ நிறுவனத்தின் நெறுங்கிய தொடர்புகளின் வாயிலாக இத்தகவல் வெளிவந்திருப்பதாக கூறப்படுகின்றது.

ALSO READ | Hero அளித்த good news: கொரோனா காலத்தில் வீட்டிலிருந்தே பைக், ஸ்கூட்டரை வாங்கலாம்

ஹீரோ எலெக்ட்ரிக் எனும் பெயரில் ஏற்கனவே இந்திய சந்தையில் மின்சார இருசக்கர வாகனங்கள் விற்பனைக்கு உள்ளது. ஆனால் இது ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் நேரடி தொடர்பு கொண்டு நிறுவனம் அல்ல என்பது கவனித்தக்கத்து.

ஆய்வாளர்களுக்கு அளித்த பேட்டியில், ஹீரோ மோட்டோகார்ப் தலைமை நிதி அதிகாரி (சி.எஃப்.ஓ) நிரஞ்சன் குப்தா, 2021-22-ல் மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்த முயற்சிக்கிறோம் என்று கூறினார். இந்த விஷயத்தில் நீங்கள் பல செயல்பாடுகளைப் பார்ப்பீர்கள். நாங்கள் எங்கள் சொந்த தயாரிப்பைக் கொண்டு வருவோம் அல்லது தயாரிப்புகளை பரிமாறிக்கொள்ளலாம் அல்லது கோகோரோவுடன் தயாரிப்புகளை கொண்டு வரலாம்.

மின்சார வாகனங்களுக்கான நிறுவனத்தின் மூலோபாயம் குறித்து, குப்தா, ஜெர்மனி மற்றும் ஜெய்ப்பூரில் உள்ள நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்கள் நிலையான சார்ஜிங் முறைகளின் அடிப்படையில் தயாரிப்புகளை உருவாக்க வேலை செய்கின்றன என்றார். மறுபுறம் கோகோரோ கூட்டாட்சியின் கீழ், நாங்கள் பரிமாற்ற முறை குறித்து கவனம் செலுத்தி வருகிறோம் என்று அவர் கூறினார்.

அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News