நாடு முழுவதும் 5ஜி சேவையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்திருக்கும் நிலையில், ஜியோ 5ஜி சேவைகள் எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. முதற்கட்டமாக, முதல்கட்டமாக தனது சேவையை டெல்லி-மும்பை போன்ற மெட்ரோ நகரங்களில் தொடங்கும் ஜியோ, 5ஜி தொலைபேசியையும் மலிவு விலையில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதன்படி ஜியோ போன் 5ஜி விலை 12 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. பிராண்ட் நிறுவனத்தின் ஒரு 5ஜி மொபைல் இந்த விலையில் வந்தால், அது மலிவான 5ஜி ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக இருக்கும். அதேநேரத்தில் இந்த பட்ஜெட்டில் 5G ஸ்மார்ட்போன்கள் வரத் தொடங்கியுள்ளதால், இதற்கு வேறு ஏதேனும் பிரத்யேக ஆஃபர்களை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அண்மையில் அந்த நிறுவனம் அறிமுகப்படுத்திய ஜியோ ஃபோன் நெக்ஸ்ட் நல்ல வரவேற்பைப் பெறவில்லை.


மேலும் படிக்க | திடீரென காணாமல் போகும் நெட்வொர்க்: வோடாஃபோன் ஐடியா வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி


மார்க்கெட்ங்கில் புதிய யுக்தி


அதனால், விரைவில் களமிறக்க இருக்கும் 5ஜி ஸ்மார்ட்போன்களுக்கு வித்தியாசமான மார்க்கெட்டிங் உத்தியை கையில் எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது ஜியோ. கவுண்டர்பாயிண்ட் அறிக்கையின்படி, ஜியோ 5ஜி மொபைல் அறிமுகப்படுத்தும் என்றாலும், அது எப்போது? என்ற தகவல் தங்களிடம் இல்லை எனக் கூறியுள்ளது. எக்னாமிஸ் டைம்ஸின்படி, ஜியோ மொபைலின் விலை ரூ.8 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரத்துக்குள் இருக்கலாம் எனத் தெரிவித்துள்ளது. 2024க்குள், ஜியோ 5G mm Wave + sub-6GHz ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்த வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. 


ஜியோ 5ஜி போனின் அம்சம்


மேலதிக தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை என்றாலும், 6.5 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி திரையை கொண்டிருக்கும் என தகவல்கள் கூறுகின்றன. டிஸ்ப்ளே 60Hz புதுப்பிப்பு வீத ஆதரவுடன் வரும். ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 5ஜி செயலியில் இயங்கும் இந்த மொபைல், 4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி சேமிப்பகத்துடன் வர வாய்ப்பிருக்கிறது. டூயல் கேமரா இருக்கும் என்றும் கூறப்படுகிறது.


மேலும் படிக்க | விடிய விடிய பயன்படுத்தலாம்.. பேட்டரியே போகாது; குறைவான விலையில் பெஸ்ட் 12 ஜிபி RAM மொபைல்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ