திடீரென காணாமல் போகும் நெட்வொர்க்: வோடாஃபோன் ஐடியா வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி

வோடாபோன் ஐடியா நெட்வொர்க் திடீரென காணாமல் போவதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.   

Written by - S.Karthikeyan | Last Updated : Sep 30, 2022, 01:32 PM IST
  • வோடாஃபோன் ஐடியா நிறுவனத்துக்கு சிக்கல்
  • கடனில் தத்தளிப்பதால் டவர் பிரச்சனை
  • விரைவில் நெட்வொர்க் பிரச்சனை ஏற்படலாம்
திடீரென காணாமல் போகும் நெட்வொர்க்: வோடாஃபோன் ஐடியா வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி title=

Vodafone-Idea: வோடபோன்-ஐடியா வாடிக்கையாளர்களுக்கு ஒரு மோசமான செய்தி. அதிக கடனில் சிக்கித் அந்த நிறுவனம் சிக்கித் தவிப்பதால், நெட்வொர்க் பிரச்சனை ஏற்பட்டு வருகிறது. முறையான தவணை செலுத்தவில்லை என்றால் வோடாபோன் ஐடியா நிறுவனத்தின் 255 கோடி வாடிக்கையாளர்கள் எதிர்காலத்தில் இன்னும் சிரமங்களை சந்திக்க நேரிடும். 

வோடாஃபோன் ஐடியா நிறுவனம், இண்டஸ் டவர்ஸ் நிறுவனத்திற்கு சுமார் 7000 கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ளது. மேலும், இந்த கடனை விரைவில் திருப்பிச் செலுத்தாவிட்டால், நவம்பர் மாதத்திற்குள் டவர்களைப் பயன்படுத்த அனுமதிப்பதை நிறுத்துவதாகவும் அந்த நிறுவனம் வோடாஃபோன் ஐடியாவுக்கு மிரட்டல் விடுத்துள்ளது. இந்த சூழல் ஏற்படும்பட்சத்தில் வோடபோன்-ஐடியா வாடிக்கையாளர்களின் மொபைல் நெட்வொர்க் உடனடியாக துண்டிக்கப்படும்.

மேலும் படிக்க | Diwali Festival Offers: டிவி வாங்கினால் ஸ்மார்ட்ஃபோன் இலவசம்..50% தள்ளுபடி கொடுக்கும் சாம்சங்
 
இண்டஸ் டவர்ஸ் எச்சரிக்கை

இண்டஸ் டவர்ஸிடமிருந்து வோடபோன்-ஐடியாவுக்கு இது குறித்து எச்சரிக்கை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இண்டஸ் டவர்ஸின் இயக்குநர்கள் குழு திங்கள்கிழமை கூடி வோடாபோன் ஐடியா குறித்து ஆலோசனை நடத்தியது. அப்போது, இண்டஸ் நிறுவனத்தின் நிதி குறித்து பேசிய இயக்குநர்கள், வோடாஃபோன் ஐடியா நிறுவனத்திடம் இருந்து 7 ஆயிரம் கோடி ரூபாய் கடனை வசூலிப்பது குறித்து முடிவெடுத்துள்ளனர்.

Vi 5G பற்றிய அறிவிப்பு 

ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல்லுக்குப் பிறகு நாட்டின் மூன்றாவது பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாக வோடபோன் ஐடியா உள்ளது. இருப்பினும் அண்மைக்காலமாக அந்த நிறுவனத்தின் நிதி நிலை நன்றாக இல்லை. பெரும் கடனில் சிக்கித் தவிக்கும் அவர்கள், 5ஜி பற்றிய எந்த அறிவிப்பும் இதுவரை வெளியிடாமல் உள்ளனர். ஏர்டெல் மற்றும் ஜியோ ஏற்கனவே 5ஜி சேவை குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | Shopping Tips: சரியான ஆஃபர் தேர்ந்தெடுங்கள்; உங்க பணத்தை மிச்சப்படுத்துங்க!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News