Jio Cinema Premium: ஜியோ நிறுவனம் சமீபத்தில் ஜியோசினிமா ஓடிடி பிரீமியத்தின் சந்தா விலையை ரூ.29 ஆகக் குறைத்தது. இதில் 4K வீடியோ தரத்துடன் சர்வதேச நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களை பார்க்க முடியும். மேலும், நீங்கள் ஜியோ நெட்வொர்க் பயனராக இருந்தால் சில ரீசார்ஜ் திட்டங்களில் ஜியோசினிமா பிரீமியம் சந்தா திட்டத்தை வழங்குகிறது. எனவே தனியாக சந்தா கட்ட தேவையில்லை.  ஜியோ நிறுவனம் தற்போது ஜியோடிவி பிரீமியம் திட்டங்கள் என கூறப்படும் நான்கு திட்டங்களை வழங்குகிறது. இதில் ஜியோசினிமா பிரீமியம் உட்பட பல்வேறு OTT தளங்களுக்கான அணுகலை இலவசமாக வழங்குகின்றன. இந்த திட்டங்களுடன் ரீசார்ஜ் செய்யும் போது, ​​ஜியோசினிமா பிரீமியம் சந்தாவிற்கு ரிடீம் செய்யப்படலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க - இனி ஐபிஎல் இலவசம் இல்லை? ஜியோ சினிமா கொண்டு வரும் புதிய சந்தா திட்டம்!


ஓடிடி சந்தாவுடன் ஜியோ திட்டங்கள்


ஜியோவின் புதிய திட்டத்தில் மிகவும் மலிவான விலையில் இருப்பது ரூ.148 திட்டமாகும். 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் இந்த திட்டத்தில் டேட்டா மட்டும் வழங்கப்படுகிறது. 10 ஜிபி 4ஜி டேட்டாவுடன் ஜியோ சினிமா பிரீமியம், சோனி எல்ஐவி, ஜீ5, சன் என்எக்ஸ்டி, டிஸ்கவரி+ மற்றும் பலவற்றை உள்ளடக்கிய 12க்கும் மேற்பட்ட ஓடிடி இயங்குதளங்களுக்கான சந்தாவை வழங்குகிறது. இந்த திட்டம் அதிகமாக டேட்டா தேவைப்படுபவர்களுக்கும், சிறிது நாட்களுக்கு பிரபலமான ஓடிடி தளங்களில் படங்களை பார்ப்பவர்களுக்கும் உதவும்.


இதேபோல், ரூ.389க்கு திட்டத்தில் கூடுதல் 5ஜி டேட்டா உடன் அழைப்பு வசதியையும் பெற்று கொள்ள முடியும். இந்த திட்டம் ஒரு நாளைக்கு 2 ஜிபி 4ஜி டேட்டாவை வழங்குகிறது, மேலும் ஜியோசினிமா பிரீமியம் உட்பட 12 ஓடிடி இயங்குதளங்களுக்கான சந்தாவையும் வழங்குகிறது. இது தவிர, 6 ஜிபி கூடுதல் 4ஜி டேட்டாவையும் இந்த திட்டத்தில் பெற்று கொள்ளலாம். மேலும் இந்த திட்டம் வரம்பற்ற 5ஜி நெட்வொர்க்கிற்கான அணுகலையும் வழங்குகிறது. இந்த திட்டத்தின் மூலம் பல OTT இயங்குதளங்களில் உள்ள படங்கள் மற்றும் வெப் சீரிஸ் பார்த்துக்கொள்ள முடியும்.


இதற்கு அடுத்தபடியாக இருக்கும் திட்டத்தின் விலை ரூ.1,198 ஆகும். இந்த திட்டம் 84 நாட்களுக்கு செல்லுபடியாகும். முதல் இரண்டு திட்டங்களில் வழங்கப்படும் 12 OTT சந்தாக்கள் தவிர, இந்த திட்டத்தில் கூடுதலாக பிரைம் வீடியோ மொபைல் சந்தா மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தா ஆகியவற்றை பெறலாம். இந்த திட்டத்தின் கூடுதல் நன்மைகளில் ஒன்று ஒரு நாளைக்கு 2 ஜிபி 4ஜி டேட்டா மற்றும் வரம்பற்ற 5ஜி டேட்டா மற்றும் வரம்பற்ற அழைப்புகள் ஆகியவை அடங்கும்.


கடைசியாக, 365 நாட்களுக்கு வரம்பற்ற 5ஜி மற்றும் 2 ஜிபி 4ஜி டேட்டாவுடன் 14 OTT இயங்குதளங்களுக்கான அணுகலை வழங்கும் வருடாந்திர சந்தா திட்டத்தை ஜியோ அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் விலை ரூ.4,498 ஆகும். இந்த நன்மைகளை தவிர இந்த திட்டத்தில் பயனர்கள் கூடுதலாக 78 ஜிபி 4ஜி டேட்டாவைப் பெற முடியும். ஒருமுறை ரீசார்ஜ் செய்தால், பயனர்கள் இந்த அனைத்து நன்மைகளையும் ஒரு வருடம் முழுவதும் அனுபவித்து கொள்ளலாம்.


மேலும் படிக்க - முகேஷ் அம்பானி மகள் என்றால் சும்மாவா... இஷாவின் மாதம் வருமானம் எவ்வளவு தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ