Jio Phone good news: இனி மிகக்குறைந்த விலையில் இந்த மலிவு விலை போனிலும் WhatsApp Calling செய்யலாம்
ஜியோ தொலைபேசி பயனர்களுக்கு ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. வழக்கமாக ஸ்மார்ட்போன்களுக்காக பல புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தும் WhatsApp, இந்த முறை ஃபீச்சர் தொலைபேசிகளுக்காக ஒரு பெரிய புதுப்பிப்பை வெளியிட்டுள்ளது.
Jio Phone, KaiOS-Whatsapp Calling: ஜியோ தொலைபேசி பயனர்களுக்கு ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. வழக்கமாக ஸ்மார்ட்போன்களுக்காக பல புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தும் WhatsApp, இந்த முறை ஃபீச்சர் தொலைபேசிகளுக்காக ஒரு பெரிய புதுப்பிப்பை வெளியிட்டுள்ளது.
இப்போது ஃபீச்சர் தொலைபேசிகளிலும் பயனர்கள் WhatsApp குரல் அழைப்பு அம்சத்தை (WhatsApp Voice calling) அனுபவிக்க முடியும். அதாவது, இனி நீங்கள் உங்கள் தொகையை செலவழிக்காமல், இணையத்தைப் பயன்படுத்தி, நீங்கள் விரும்பும் வரை இப்போது பேச முடியும். இந்த புதிய அம்சம் வாய்ஸ் ஓவர் இன்டர்நெட் புரோட்டோகால் (VoIP) தொழில்நுட்பத்தில் இயங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Jio Phone, KaiOS -ல் WhatsApp வாய்ஸ் கால் அம்சத்தை இந்த வழியில் பயன்படுத்தலாம்
- நீங்கள் Jio Phone மற்றும் KaiOS அடிப்படையிலான ஃபீச்சர் தொலைபேசியைப் பயன்படுத்தினால், WhatsApp வாய்ஸ் காலையும் பயன்படுத்த முடியும். ஆனால் இதற்கு முதலில் நீங்கள் உங்கள் Jio Phone மற்றும் KaiOS தொலைபேசியில் வாட்ஸ்அப்பின் புதுப்பிக்கப்பட்ட பதிப்பு 2.2110.41 ஐ பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
- பதிவிறக்கிய பிறகு, WhatsApp-ஐத் திறந்து, நீங்கள் அழைக்க விரும்பும் நபருடைய சேட் பாக்சை திறக்க வேண்டும். இதில் ஆப்ஷன்சில் சென்று நீங்கள் வாய்ஸ் கால் அம்சத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
- ஆனால் இந்த அம்சத்தைப் பயன்படுத்த, உங்கள் ஃபீச்சர் தொலைபேசியில் வைஃபை மற்றும் மொபைல் தரவை வைத்திருப்பது அவசியம் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.
ALSO READ: Super Recharge Plans: ரிலையன்ஸ் ஜியோ இந்த திட்டத்தில் 100GB கிடைக்கும்
- ஏனென்றால், WhatsApp வாய்ஸ் காலை இணைவ வழி மூலமாக மட்டுமே பயன்படுத்த முடியும்.
- WhatsApp வாய்ஸ் கால் அம்சத்தை பயனர் ஒரு சாதாரண அழைப்பு போல பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
WhatsApp மற்றும் Jio Phone -ன் கூட்டு
Jio Phone-னில் 2018 ஆம் ஆண்டில் WhatsApp அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்பிறகு 2019 ஆம் ஆண்டில், நிறுவனம் KaiOS அடிப்படையிலான ஃபீச்சர் தொலைபேசியில் WhatsApp-பை அறிமுகப்படுத்தியது.
WhatsApp-பின் உலகப் பிரசித்தி பெற்ற, பிரபலமான, அதிக பயன்பாட்டைக் கொண்ட அம்சம் தற்போது Jio Phone மற்றும் KaiOS அடிப்படையிலான ஃபீச்சர் தொலைபேசிகளில் (Feature Phones) அறிமுகம் ஆகிவிட்டது. இந்த அம்சம் இப்போது வரை ஸ்மார்ட்போனுக்கு மட்டுமே கிடைத்துக்கொண்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO READ: Infinix Note 10, Note 10 pro இந்தியாவில் அட்டகாச அறிமுகம்: விலை, அம்சங்கள் இதோ
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR