Infinix Note 10, Note 10 pro இந்தியாவில் அட்டகாச அறிமுகம்: விலை, அம்சங்கள் இதோ

Infinix Note 10 சீரிசின் இரண்டு ஸ்மார்ட்போன்களான Infinix Note 10 மற்றும் Infinix Note 10 ப்ரோ ஆகியவை இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இவை இரண்டும் நிறுவனத்தின் கேமிங் ஸ்மார்ட்போன்கள் என்பதும் கேமிங் அனுபவத்தை மேம்படுத்த பல சிறப்பு கேமிங் அம்சங்கள் இவற்றில் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதும் இவற்றின் தனிச்சிறப்பாகும். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 7, 2021, 04:49 PM IST
  • Infinix Note 10 சீரிசின் இரண்டு ஸ்மார்ட்போன்களை நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது.
  • Infinix Note 10 ஸ்மார்ட்போனில் 6.95 இன்ச் எஃப்.எச்.டி + எல்சிடி ஐபிஎஸ் டிஸ்ப்ளே உள்ளது.
  • Note 10 Pro-வின் முன்பதிவு ஜூன் 13 ஆம் தேதி தொடங்கும்.
Infinix Note 10, Note 10 pro இந்தியாவில் அட்டகாச அறிமுகம்: விலை, அம்சங்கள் இதோ title=

Infinix Note 10, Note 10 pro Launch: Infinix Note 10 சீரிசின் இரண்டு ஸ்மார்ட்போன்களான Infinix Note 10 மற்றும் Infinix Note 10 ப்ரோ ஆகியவை இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இவை இரண்டும் நிறுவனத்தின் கேமிங் ஸ்மார்ட்போன்கள் என்பதும் கேமிங் அனுபவத்தை மேம்படுத்த பல சிறப்பு கேமிங் அம்சங்கள் இவற்றில் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதும் இவற்றின் தனிச்சிறப்பாகும். Infinix Note 10 சீரிஸின் இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் 5000 எம்ஏஎச் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. Infinix Note 10 ஸ்மார்ட்போனில் 48 எம்பி டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு உள்ளது. Infinix Note 10 ப்ரோவில் 64 எம்பி குவாட் கேமரா அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. 

Note 10 விவரக்குறிப்புகள்

Infinix Note 10 ஸ்மார்ட்போனில் (Smartphone)  6.95 இன்ச் எஃப்.எச்.டி + எல்சிடி ஐபிஎஸ் டிஸ்ப்ளே உள்ளது. டிஸ்பிளேவின் டச் சாம்பிள் விகிதம் 180 ஹெர்ட்ஸ் ஆகும். திரை ரெசல்யூஷன் 2460 × 1080 பிக்சல்கள் இருக்கும். இந்த தொலைபேசியில் டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதன் முதன்மை கேமரா 48 எம்.பி. -ஐக் கொண்டுள்ளது. இது தவிர, போனில் 2MP டெப்த் சென்சார் மற்றும் 2MP மேக்ரோ லென்ஸ் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. 

செல்பி மற்றும் வீடியோ அழைப்புக்கு 16 எம்.பி முன் கேமரா வழங்கப்பட்டுள்ளது. தொலைபேசி மீடியாடெக் ஹீலியோ ஜி 85 செயலியில் இயங்குகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 ஐ அடிப்படையாகக் கொண்ட எக்ஸ்ஓஎஸ் 7.6 இல் இயங்குகிறது. பவர்பேக்குக்கு இந்த தொலைபேசியில் 5000 எம்ஏஎச் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இது 18W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வருகிறது.

ALSO READ: Redmi Note 10S vs Moto G40 Fusion: இரண்டுமே ரூ.15,000-க்குள்; ஆனால் எது பெஸ்ட்?

Note 10 Pro விவரக்குறிப்புகள்

Infinix Note 10 Pro 6.95 இன்ச் எஃப்.எச்.டி + எல்சிடி ஐபிஎஸ் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. திரை ரெசல்யூஷன் 2460 × 1080 பிக்சல்கள். ஆஸ்பெக்ட் விகிதம் 90 ஹெர்ட்ஸ் ஆகவுள்ளது. குவாட் பின்புற கேமரா அமைப்பு தொலைபேசியில் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் முதன்மை கேமரா 64 எம்.பி. கொண்டுள்ளது. இது தவிர, 8 எம்பி அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்ஸ், 2 எம்பி டெப்த் சென்சார் மற்றும் 2 எம்பி லென்ஸ் ஆகியவை தொலைபேசியில் வழங்கப்பட்டுள்ளன. 

இந்த ஸ்மார்ட்போனில் 16MP-யின் AI ஃப்ரண்ட் கொடுக்கப்பட்டுள்ளது. மீடியா டெக் ஹீலியோ ஜி 95 சிப்செட் தொலைபேசியில் செயலி ஆதரவாக வழங்கப்பட்டுள்ளது. அண்ட்ராய்டு 11 ஐ அடிப்படையாகக் கொண்ட இந்த தொலைபேசி XOS 7.6 இல் இயங்குகிறது. இந்த தொலைபேசியில் பக்கவாட்டில் பொறுத்தப்பட்டுள்ள கைரேகை சென்சார் உள்ளது. பவர் பேக்கப்பிற்கு 5000 எம்ஏஎச் பேட்டரி இந்த தொலைபேசியில் வழங்கப்படுகிறது. இது 33W வேகமான சார்ஜிங்குக்கான ஆதரவுடன் வருகிறது.

Infinix Note 10, Note 10 Pro: விலை மற்றும் அறிமுக தேதி 

Infinix Note 10 இந்தியாவில் (India Launch) இரண்டு வகைகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் 4 ஜிபி + 64 ஜிபி சேமிப்பு மாடலின் விலை ரூ .10,999 ஆகும். 6 ஜிபி + 128 ஜிபி சேமிப்பு மாடல் ரூ .11,999 க்கு கிடைக்கும். Note 10 Pro ஒற்றை சேமிப்பகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் 8 ஜிபி + 256 ஜிபி சேமிப்பு உள்ளது. இதன் விலை ரூ .16,999 ஆகும். Note 10 ஜூன் 13 அன்று வாடிக்கையாளர்களுக்கு விற்பனைக்கு கிடைக்கும். Note 10 Pro-வின் முன்பதிவு ஜூன் 13 ஆம் தேதி தொடங்கும்.

ALSO READ: Smartphones List: இந்த வாரம் அறிமுகமாகும் TOP ஸ்மார்ட்போன்களின் லிஸ்ட் இதோ

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News