சமூக ஊடகங்கள் பயன்பாடு


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இப்போது சமூக ஊடகங்கள் பயன்பாடு குழந்தைகளிடத்தில் அதிகரித்துவிட்டது. கட்டுப்பாடற்ற சுதந்திரத்தைக் கொண்டிருக்கும் அதில் அவர்கள் திசைமாறிச் சென்று ஆபத்தான விஷயங்களில் சிக்கிக் கொள்ள வாய்ப்பிருக்கிறது. வயது வித்தியாசம் இல்லாமல் கிடைக்கும் கன்டென்ட் உள்ளடக்கங்கள் குழந்தைகளுக்கு கவனச் சிதறலை ஏற்படுத்தி வருகின்றன. இது அவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் என்பதால் பெற்றோர்கள் மத்தியில் இது தொடர்பான கவலை மிக அதிகமாக இருக்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரை சமூக ஊடகங்களின்பயன்பாட்டுக்கு வயது வரம்பு வேண்டும் என்று பரவலாக குரல் எழுப்பப்பட்டு வருகிறது.


மேலும் படிக்க | ரூ. 21 ஆயிரத்தில் ஆப்பிள் ஐபோன் 13... ஆப்பர்களை அள்ளிவீசும் பிளிப்கார்ட்!


கர்நாடக உயர்நீதிமன்றம் கருத்து


இது குறித்து கவலை தெரிவித்திருக்கும் கர்நாடக உயர்நீதிமன்றம், குழந்தைகளுக்கு சமூக ஊடகங்களை கையாளும்போது நல்லது எது? கெட்டது எது? என்று பிரித்து பார்க்கும் பக்குவம் இருக்கிறதா? என கேட்டுள்ளது. இதனால் மது அருந்துவதற்கு நாடு முழுவதும் இருக்கும் வயது வரம்பு சட்டத்தைப்போலவே சமூக ஊடகங்களின் பயன்பாட்டுக்கும் சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என வாய்மொழியாக தெரிவித்துள்ளது. 


தடை செய்வதே சிறந்தது


அப்போது டிவிட்டர், இப்போது எக்ஸ் என பெயர்மாற்றப்பட்டிருக்கும் சமூக ஊடக நிறுவனம் சில டிவிட்டர் கணக்குகளை தங்களுக்கு தெரியாமல் முடக்கியது தொடர்பாக கர்நாடக உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்திருக்கிறது. இந்த வழக்கு நீதிபதி ஜி. நரேந்தர் மற்றும் நீதிபதி விஜயகுமார் ஏ. பாட்டீல் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச்சில் விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய நீதிபதி நரேந்தர், " குழந்தைகளுக்கு சமூக ஊடகங்களை தடை செய்வதே சிறந்தது. நிறைய நல்லது வரும்னு சொல்வேன்... இன்று பள்ளிக் குழந்தைகள் சமூக ஊடகங்களுக்கு அடிமையாகிவிட்டனர். குறைந்தபட்சம் நீங்கள் பயனர் வயது வரம்பை கொண்டு வர வேண்டும். 17-18 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு தேசத்தின் நலன் எது, எது இல்லை என்பதை தீர்மானிக்க என்ன முதிர்ச்சி உள்ளது? சமூக ஊடகங்களைப் பயன்படுத்துபவருக்கு குறைந்தபட்சம் 21 வயது இருக்க வேண்டும்...” என்று கூறினார்.


மத்திய அரசுக்கு அறிவுறுத்தல்


சில ஆன்லைன் கேம்களை அணுகுவதற்கு பயனர் KYC ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று தற்போது சட்டத்தின்படி மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறியபோது, சமூக ஊடகங்களை அணுகுவதற்கு ஏன் அதே நடவடிக்கைகளை நீட்டிக்கக் கூடாது என்று நீதிபதி நரேந்தர் வாய்மொழியாகக் கேட்டார். கலால் விதிகளைப் போல வயது வரம்பு இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன் என்றும் அவர் கூறினார். மேலும், சமூக வலைதளங்களில் மட்டுமின்றி இணையத்திலும் மனதை கெடுக்கும் விஷயங்களை அகற்ற வேண்டும். சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு வயது வரம்பு கொண்டுவருவது குறித்து அரசு சிந்திக்க வேண்டும் என அறிவுறுத்தினார். இதனையடுத்து எக்ஸ் நிறுவனத்தின் வழக்கு அடுத்தக்கட்ட விசாரணைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | 6 மாதம் அன்லிமிடேட் கால்... தினமும் 3 ஜிபி டேட்டா - ஜியோவின் இந்த இலவசத்தை பெற என்ன செய்ய வேண்டும்?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ