இந்தியாவில் சமூக ஊடக தளங்களில் பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் ஆகியவற்றில் சுமார் 113.5 மில்லியன் பயனர்கள் உள்ளனர், OTT இயங்குதளங்களும் 29-30 மில்லியன் பயனர்களைக் கொண்டுள்ளன, டிஜிட்டல் மீடியா  700 மில்லியன் பயனர்களைக் கொண்டுள்ளது. இதற்கான புதிய மற்றும் கடுமையான வழிகாட்டுதல்களை மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இப்போது சமூக ஊடக தளங்களான பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் (WhatsAPP) போன்றவை அரசின் புதிய வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும். சமூக ஊடகங்களுக்கான புதிய விதிகள் அடுத்த 3 மாதங்களில் செயல்படுத்தப்படும், மேலும் OTT மற்றும் டிஜிட்டல் செய்திகளுக்கான சட்டங்கள் நடைமுறைக்கு வரும் அதே நாளில் அரசாங்கம் அதற்கான அறிவிப்புகளை வெளியிடும்.


இதன் முக்கியமான 10 அம்சங்கள்
1 - நாட்டில் கோடிக்கணக்கான சமூக ஊடக பயனர்கள்,  புகார்களை அளிக்க ஒரு மன்றம் ஏற்படுத்தப்படும்


2 - சமூக ஊடகங்களை தவறாகப் பயன்படுத்துவது தொடர்பாக பயனர்கள் தங்கள் புகார்களை இந்த மன்றத்தின் மூலம் தீர்க்க முடியும்


ALSO READ | சமூக ஊடகங்கள், OTT தளங்களுக்கு கடிவாளம்: மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு

3 - நீதிமன்றம் அல்லது அரசாங்கம் எந்தவொரு ஆட்சேபனைக்குரிய, சர்ச்சைக்குரிய ட்வீட் அல்லது செய்தியை முதலில் பரப்பியவரின்  தகவலைக் கேட்டால், சமூக ஊடக தளம் இந்த தகவலை வழங்க வேண்டும், அதாவது யாருக்கும் எதிராக ஆட்சேபனைக்குரிய, சர்ச்சைக்குரிய ட்வீட் செய்வது பிரச்சனையை ஏற்படுத்தும். 


4 - குறைகளை நிவர்த்தி செய்வதற்கான வழிமுறைகளை தளத்தில் உருவாக்க வேண்டும், அதற்காக நிறுவனங்கள் ஒரு அதிகாரியை நியமிக்க வேண்டும், 


5 - சம்பந்தப்பட்ட அதிகாரி 24 மணி நேரத்திற்குள் புகார் அளிக்க வேண்டும், அது 15 நாட்களுக்குள் புகார் மீதான நடவடிக்கையை நிற்றைவு செய்திருக்க வேண்டும்
6 - பெண்களின் ஆட்சேபனைக்குரிய படத்தை பதிவிட்டால், புகாரைப் பெற்ற 24 மணி நேரத்திற்குள் பதிவு அல்லது உள்ளடக்கம் அகற்றப்பட வேண்டும், அதாவது மனதை புண்படுத்து வகையிலான பதிவு அல்லது புகைப்படம் ஊடகத்தில் இருக்கக் கூடாது. இதனால் பெண்ணின் தன்மானம் பாதுகாக்கப்படும்


ALSO READ | போலி செய்திகள், இந்திய எதிர்ப்பு பதிவுகள்; Twitter மத்திய அரசுக்கு SC நோட்டீஸ்


7 - ஒரு சமூக ஊடக பயனரின் உள்ளடக்கம் அகற்றப்பட வேண்டுமென்றால், அவ்வாறு செய்வதற்கு அவர் சரியான காரணத்தைக் கூற வேண்டும். அதாவது, ஒருவரின் புகாரின் பேரில் மட்டுமே அகற்றப்படக் கூடாது, உங்கள் உள்ளடக்கம் விதிகளை மீறாத வரை அது அகற்றப்படாது.


ALSO READ | மத்திய அரசின் எச்சரிக்கை நோட்டீஸ் எதிரொலி... சரி பேசலாம் என்கிறது ட்விட்டர்..!!

8- நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் எத்தனை புகார்கள் வந்தன, அவற்றில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டன என்று தெரிவிக்க வேண்டும்.


9- ஒரு சமூக ஊடக பயனரின் உள்ளடக்கம் அகற்றப்பட வேண்டுமானால், அவர் அவ்வாறு செய்வதற்கான காரணத்தையும், அவருடைய தரப்பின் கருத்தையும் அறிந்து கொள்ள வேண்டும்.


10. OTT மற்றும் டிஜிட்டல் செய்திகளுக்கான 10-வழிகாட்டுதல்கள்
- OTT மற்றும் டிஜிட்டல் செய்திகளுக்கு 3 நிலையிலான வழிமுறை இருக்கும்.
- OTT மற்றும் டிஜிட்டல் செய்திகளுக்கு பதிவு செய்ய வேண்டிய தேவை இல்லை, ஆனால் அவை அனைத்து தகவல்களை வழங்க வேண்டும்
- புகார்களைக் கையாள்வதற்கு ஒரு அமைப்பு ஏற்படுத்தப்பட வேண்டும். அவை ஒரு சுய ஒழுங்குமுறை அமைப்பாக மாற்றப்பட வேண்டும்
- ஒழுங்குமுறை அமைப்பு உச்சநீதிமன்றம் அல்லது உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி அல்லது அதே அந்தஸ்துள்ள ஒருவரால் தலைமை தாங்கப்படும். தேவைக்கு ஏற்ப அரசாங்க மட்டத்தில் ஒரு அமைப்பு உருவாக்கப்படும். 
- திரைப்படங்களைப் போலவே, OTT தளங்களும் விதிகளை பின்பற்ற வேண்டும்.
- உள்ளடக்கத்தைப் பொறுத்தவரை, வயதிற்கு ஏற்ப வகைப்பாடு செய்யப்பட வேண்டும், அதாவது எந்த வயதினருக்கு எந்த உள்ளடக்கம் பொருத்தமானது என குறிப்பிட வேண்டும்
- OTT தளத்தின் உள்ளடக்கம் 13+, 16+ மற்றும் A வகைகளாக பிரிக்கப்படும்
- பெற்றோர் லாக் செய்வதற்கான வசதி வழங்கப்பட வேண்டும், இதனால், பெற்றோர்கள் தங்கள் குழந்தைக்கு தவறான உள்ளடக்கத்தை காணுவதைத் தடுக்க முடியும்.


ALSO READ |அரசு விடுத்த தெளிவான எச்சரிக்கைக்கு பிறகு கணக்குகளை முடக்க நடவடிக்கை எடுத்தது ட்விட்டர்...!!


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR