போர்ட்டபிள் வாஷிங் மெஷின்: ஒவ்வொரு வீட்டிலும் துணி துவைக்க வாஷிங் மெஷின் என்னும் ஒரு சலவை இயந்திரம் உள்ளது. துணிகளை நிமிடங்களில் பளிச்சென்று துவைக்க வாஷிங் மெஷின் சிறந்தது. ஆனால் தனியாக வசிப்பவர்கள் அல்லது பிற நகரங்களில் வேலைக்காக செய்பவர்கள்,  பெரிய அளவிலான வாஷிங் மெஷின் வாங்குவதை விரும்புவதில்லை. அதனால் கையால் துணிகளை துவைத்து சமாளித்துக் கொள்கிறார்கள். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பெரிய அளவிலான வாஷிங் மெஷின் தேவையில்லை; மிக சிறிய அளவிலான வாஷிங் மெஷின் போதும் என் நினைப்பவர்களுக்காக ஒரு சிறந்த தயாரிப்பு எங்களிடம் உள்ளது. இது உங்கள் வேலையை எளிதாக்கும். இன்று  ஒரு வாளி அளவுள்ள, வாளி வடிவிலான போர்ட்டபிள் வாஷிங் மெஷின் பற்றி அறிந்து கொள்ளலாம். இந்த வாஷிங் மெஷின்கள் மலிவானவை மற்றும் எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்லக்கூடியவை. அளவிலும் சிறியவை.


போர்ட்டபிள் வாஷிங் மெஷின்


பக்கெட் அளவிலான சலவை இயந்திரமமான ஹில்டன் 3 கிலோ செமி-ஆட்டோமேட்டிக் டாப் லோடிங் வாஷிங் மெஷின் (Hilton 3 kg Semi-Automatic Top Loading Washing Machine) ஒரு வாளி அளவுக்கு சிறியது. அதை வீட்டின் எந்த மூலையிலும் வைக்கலாம். இந்த செமி ஆட்டோமேட்டிக் வாஷிங் மெஷின் 3 கிலோ கொள்ளளவு கொண்டது. இதில் ஒரே நேரத்தில் ஐந்து முதல் ஆறு துணிகளை துவைக்கலாம்.


மேலும் படிக்க | 8GB ரேம் அல்லது 4GB ரேம்? எது பெஸ்ட்


விலையும் மிகவும் குறைவு


இதில், நீங்கள் துணிகளை உலர்த்துவதற்குப் பயன்படுத்தக்கூடிய சிறப்பு ஸ்பின்னர் இணைப்பும் கொடுக்கப்பட்டுள்ளது. மிகவும் இலகுரக  மெஷினான இது, தானியங்கி பவர் ஆஃப் அம்சத்தையும் கொண்டுள்ளது. இதன் மூலம் மின்சாரமும் சேமிக்கப்படுகிறது. டிரையர் பேஸ்கெட்டுடன் வரும் வாஷிங் மெஷின் விலை ரூ.5,999, ஆனால் அமேசானில் இருந்து தள்ளுபடி மற்றும் எக்ஸ்சேஞ்ச் சலுகைகள் உட்பட ரூ.4,590க்கு வாங்கலாம்.


டிபன் போல சிறியதாக மடிக்கக்கூடிய வாஷிங் மெஷின்  


அமேசானில் நீங்கள் மற்றொரு தனித்துவமான வாஷிங் மெஷினையும் காணலாம், அதைப் பயன்படுத்திய பிறகு நீங்கள் மடித்து வைத்துக் கொள்ளலாம். Openja Mini Foldable Portable Washing Machine என்பது ஒரு சலவை இயந்திரம், அதைப் பயன்படுத்திய பிறகு அதை டிபன் போல சிறியதாக செய்து அலமாரியில் வைக்கலாம். இது யூ.எஸ்.பி மூலம் இயங்கும், டாப் லோட் தானியங்கி வாஷிங் மெஷின் ஆகும், இது 10 நிமிடங்களில் துணிகளை துவைக்கும். இது மின்சாரம் மற்றும் தண்ணீர் இரண்டையும் சேமிக்கிறது. அமேசானில் நீங்கள் இன்னும் பல போர்ட்டபிள் வாஷிங் மெஷின் ஆப்ஷன்களைக் காணலாம்.



மேலும் படிக்க | Google Pay: பண பரிவர்த்தனை விவரங்களை நிரந்தரமாக நீக்க சுலபமான வழிகள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR