மோட்டோரோலா நிறுவனம் தனது புதிய பிளாக்‌ஷிப் போனான, மோட்டோரோலா எட்ஜ் 30 ஸ்மார்ட்போனை இந்தியாவில் நாளை அறிமுகம் செய்யவுள்ளது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போன் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் பிரீமியம் ஸ்மார்ட்போன்களுக்கு போட்டியாக வெளிவரும் என மோட்டோரோலா தெரிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தற்போது இந்த ஸ்மார்ட்போன் குறித்து சில தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளது. அதன்படி இந்த ஸ்மார்ட்போன் அதிரடி அம்சங்களைக் கொண்டு வெளியாகும் என்ற நம்பிக்கை பிறந்திருக்கிறது. இந்த சாதனம் 5ஜி இணைப்பு, 144 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம் மற்றும் POLED டிஸ்ப்ளே அம்சத்தைக் கொண்டிருக்கிறது. வரவிருக்கும் இந்த மோட்டோரோலா ஸ்மார்ட்போனானது 155 கிராம் எடையுடன் வரும் என கூறப்படுகிறது.


மேலும் படிக்க | Flipkart Sale: ஸ்மார்ட்போன், ஸ்மார்ட் டிவிகளுக்கு சிறப்பு தள்ளுபடி


புதிய மோட்டோ ஸ்மார்ட்போனானது இரட்டை நானோ சிம் உடன் இயங்குகிறது. மோட்டோரோலா எட்ஜ் 30 ஸ்மார்ட்போனானது 144 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் 6.7 இன்ச் முழு எச்டி ப்ளஸ் (1,080x2,400) பிக்சல்கள் ஓஎல்இடி டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கிறது. மேலும் ஆக்டோ கோர் ஸ்னாப்டிராகன் 778ஜி ப்ளஸ் செயலி ஆதரவோடு 8 ஜிபி ரேம் அம்சத்தைக் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.மேலும், ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான மை யூஎக்ஸ் உடன் இயங்குகிறது. 


மோட்டோரோலா எட்ஜ் 30 ஸ்மார்ட்போன் கேமராவை பொருத்தவரை, இது 50 எம்பி பிரைமரி கேமரா உட்பட டிரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் 50 எம்பி அல்ட்ரா வைட் ஆங்கிள் சென்சார் மற்றும் 2 எம்பி டெப்த் சென்சார் அம்சத்தைக் கொண்டிருக்கிறது. செல்பி ஆதரவுக்கு என மோட்டோரோலா எட்ஜ் 30 ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 32 எம்பி கேமரா பொருத்தப்பட்டிருக்கும், வீடியோ அழைப்புகளை தெளிவாகப் பேசவும் கொடுக்கப்பட்டுள்ளது. 


இந்த புதிய ஸ்மார்ட்போனில் 8ஜிபி/12ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி / 256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இருக்கும் என்று தெரிகிறது. இந்த ஸ்மார்ட்போன், 4020எம்ஏஎச் பேட்டரி கொண்டு மின்னூட்டப்படுகிறது. இதற்கு ஊக்கமளிக்க 33வாட் டர்போ பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொடுக்கப்பட்டுள்ளது. 


இந்த போனின் விலை பற்றி பேசுகையில் இந்த போன் ரூ.27,999 விலையில் வழங்கப்படும் என்றும், வங்கி சலுகையின் கீழ் ரூ.2,000 தள்ளுபடி / கேஷ்பேக் கிடைக்கலாம். அதன் பிறகு இந்த போனின் விலை ரூ.25,999 ஆக ஆகும். மேலும் இந்த போன் உலகின் மிக மெல்லிய 5ஜி ஸ்மார்ட்ஃபோனாக இருக்கும் என்று நிறுவனம் கூறுகிறது. 


மேலும் படிக்க | மிக குறைந்த விலையில் iPhone 12, iPhone 12 Mini வாங்க அரிய வாய்ப்பு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR