Flipkart Sale: ஸ்மார்ட்போன், ஸ்மார்ட் டிவிகளுக்கு சிறப்பு தள்ளுபடி

Flipkart Sale: பிளிப்கார்ட்டில் தற்போது இன்பினிக்ஸ் டேஸ் நடந்து வருகிறது, இந்த விற்பனையில் டிவிகள், ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்டாப்கள் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்களில் தள்ளுபடியில் வழங்கப்படுகிறது. 

Written by - Vijaya Lakshmi | Last Updated : May 11, 2022, 08:46 AM IST
  • மே 10 முதல் பிளிப்கார்ட்டில் விற்பனை தொடங்கியது
  • இந்த விற்பனையில் சிட்டி பேங்க் கார்டில் தள்ளுபடி கிடைக்கும்
  • நீங்கள் இன்பினிக்ஸ் தயாரிப்புகளை மலிவாக வாங்கலாம்
Flipkart Sale: ஸ்மார்ட்போன், ஸ்மார்ட் டிவிகளுக்கு சிறப்பு தள்ளுபடி title=

புதிய ஸ்மார்ட்ஃபோன் அல்லது லேப்டாப் அல்லது டிவி வாங்க பிளான் இருந்தா, பிளிப்கார்ட்டில் நடக்கும் விற்பனையில் நீங்கள் இந்த பொருட்களை தள்ளுபடி விலையில் வாங்கலாம். இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்ட்டில் இன்பினிக்ஸ் டேஸ் விற்பனை தற்போது நடந்து வருகிறது. இந்த விற்பனையானது மே 10 ஆம் தேதி முதல் தொடங்கி மே 14 ஆம் தேதி வரை நீடிக்கும், இதில் நீங்கள் பல எலக்ட்ரானிக் பொருட்களை தள்ளுபடியில் வாங்கலாம்.

பிளிப்கார்ட்டில் நடக்கும் இந்த விற்பனையில் நீங்கள் சிட்டி பேங்க் கார்டைப் பயன்படுத்துவதன் மூலம் கூடுதல் பலன்களைப் பெறுவீர்கள். அதன்படி பிளிப்கார்ட்டில் இன்பினிக்ஸ் டேஸ் விற்பனையில் சிட்டி பேங்க் கார்டைப் பயன்படுத்துவதற்கு 10 சதவீத உடனடி தள்ளுபடி வழங்கப்படும். இந்த விற்பனையில் கிடைக்கும் தள்ளுபடிகள் மற்றும் பிற சலுகைகள் பற்றிய விவரங்களை இங்கே விரிவாக தெரிந்துக்கொள்வோம்.

மேலும் படிக்க | ரூ. 1,649க்கு Xiaomi 5G ஸ்மார்ட்போனை வாங்கலாம்

ஸ்மார்ட்போனில் வழங்கப்படும் சலுகை விவரங்கள்
பிளிப்கார்ட்டில் நடந்து வரும் இந்த விற்பனையில் நீங்கள் இன்பினிக்ஸ் ஹாட் 11எஸ் ஐ 9,799 ரூபாய்க்கு வாங்கலாம். இந்த ஸ்மார்ட்போனில் 128ஜிபி ஸ்டோரேஜ், ஹீலியோ ஜி88 ப்ரோசசர் மற்றும் ஃபுல் எச்டி+ டிஸ்ப்ளே உள்ளது. மறுபுறம், நீங்கள் இன்பினிக்ஸ் நோட் 11 ஐ 10,499 ரூபாய்க்கு வாங்கலாம். இந்த ஸ்மார்ட்போனில் அமோல்ட் டிஸ்ப்ளே மற்றும் 33வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளது.

இது தவிர, இன்பினிக்ஸ் நோட் 11எஸ் ஐ 13,499 ரூபாய்க்கு வாங்கலாம். இந்த போனில் ஹீலியோ ஜி96 ப்ரோசசர், 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 120ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு விகிதம் கொண்ட டிஸ்ப்ளே உள்ளது. அதேபோல் நீங்கள் மலிவான 5ஜி போனைத் தேடுகிறீர்கள் என்றால், நீங்கள் இன்ஃபினிக்ஸ் ஜீரோ 5ஜி ஐ வாங்கலாம். அதன்படி ரூ.15,999 தள்ளுபடியில் இந்த போனை வாங்கலாம். இந்த விலை 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜின் வகையாகும். இந்த போன் டைமென்சிட்டி 900 சிப்செட் உடன் வருகிறது.

டிவியிலும் சலுகை உண்டு
நீங்கள் மலிவான டிவியைத் தேடுகிறீர்கள் என்றால், நீங்கள் இன்ஃபினிக்ஸ் எக்ஸ்3 ஆண்ட்ராய்டு டிவியை வாங்கலாம். 32 இன்ச் ஸ்கீர்ன் அளவு கொண்ட இந்த டிவியை பிளிப்கார்ட்டில் இருந்து ரூ.12,499க்கு வாங்கலாம். இந்த டிவி ஆண்ட்ராய்டு ஓஎஸ்ஸில் வேலை செய்கிறது. இந்த டிவியில் 20வாட் சவுண்ட் அவுட்புட் மற்றும் 60 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் கூடிய டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. அத்துடன் இதில் சிட்டி பேங்க் கார்டை பயன்படுத்தினால் கூடுதலாக 10 சதவீதம் தள்ளுபடி கிடைக்கும்.

அதே நேரத்தில், இன்ஃபினிக்ஸ் எக்ஸ்1 ஆண்ட்ராய்டு டிவியை ரூ.15,990 ஆரம்ப விலையில் வாங்கலாம். இதில் 24வாட் சவுண்ட் அவுட்புட்டைக் கொண்டுள்ளது. இந்த விலை டிவியின் 40 இன்ச் ஸ்க்ரீன் சைஸ் மாடலுக்கானது. இதற்கு வங்கி தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.

லேப்டாப் மற்றும் சார்ஜர்களிலும் சலுகை உள்ளது
இந்த விற்பனையில் இருந்து இன்பினிக்ஸ் இன்புக் எக்ஸ்1 தொடரை நீங்கள் வாங்கலாம். இந்த பட்ஜெட் லேப்டாப் ரூ.29,990 முதல் தொடங்குகிறது. இதில் நீங்கள் கோர் ஐ3 ப்ரோசசர், 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி எஸ்எஸ்டி ஸ்டோரேஜ் ஆகியவற்றைப் பெறுவீர்கள்.

இந்த தொடரில் கோர் i5 ப்ரோசசர் விருப்பமும் உள்ளது, இது 8ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி எஸ்.எஸ்.டி ஸ்டோரேஜுடன் வருகிறது. அதே நேரத்தில், கோர் ஐ7 ப்ரோசசர் கொண்ட வேரியண்டின் விலை ரூ.50,990 ஆகும். அத்துடன் இந்த விற்பனையில் இருந்து இன்பினிக்ஸ் இன் 10வாட் சார்ஜரையும் வாங்கலாம். இதன் விலை 449 ரூபாய் ஆகும்.

மேலும் படிக்க | ரூ.35,990 லேட்டஸ்ட் Oppo Reno6 5G போனின் விலை வெறும் ரூ. 13,040

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News