OPPO பட்ஜெட் போனின் அட்டகாச அறிமுகம்: குறைந்த விலையில் லேட்டஸ்ட் அம்சங்கள்!!
சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான ஒப்போ விரைவில் தனது புதிய ஸ்மார்ட்போன் Oppo A16 ஐ இந்தியாவில் அறிமுகப்படுத்தவுள்ளது. இந்தியா உட்பட பல நாடுகளில் இந்த தொலைபேசி பட்டியலிடப்பட்டுள்ளது.
புது டெல்லி: சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான ஒப்போ விரைவில் தனது புதிய ஸ்மார்ட்போன் Oppo A16 ஐ இந்தியாவில் அறிமுகப்படுத்தவுள்ளது. இந்தியா உட்பட பல நாடுகளில் இந்த தொலைபேசி பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த தொலைபேசியின் விலை சுமார் 15000 ரூபாய்க்கு அருகில் இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த தொலைபேசியில் 5000 எம்ஏஎச் பேட்டரி தவிர, டிரிபிள் ரியர் கேமரா அமைப்பும் இருக்கக்குடும். இந்த தொலைபேசியில் இருக்கக்கூடிய பிற முக்கிய அம்சங்கள் பற்றி இங்கே காணலாம்.
சாத்தியமான விவரக்குறிப்புகள்
Oppo A16 அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்னர் இதைப் பற்றிய சில விவரக்குறிப்புகள் கசிந்துள்ளன. இவற்றின் படி, இந்த தொலைபேசியில் 6.5 இன்ச் எல்சிடி டிஸ்ப்ளே இருக்கக்கூடும். அண்ட்ராய்டு 11 அடிப்படையிலான கலர் ஓஎஸ் 11.1 இயக்க முறைமையில் இந்த தொலைபேசி செயல்படும். தொலைபேசியில் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் வழங்கப்படலாம். மேலும் இதில் 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 10W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் அறிமுகலாகலாம்.
கேமரா
Oppo A16 ஸ்மார்ட்போனில் (Smartphone) புகைப்படம் எடுப்பதற்கு டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு வழங்கப்படலாம். இதன் முதன்மை கேமரா 16 மெகாபிக்சல்களைக் கொண்டிருக்கும். இதனுடன் 2 மெகாபிக்சல் செகண்டரி கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ் ஆகியவையும் இருக்கும். செல்பி மற்றும் வீடியோ அழைப்புக்கு 5 மெகாபிக்சல் கொண்ட முன் கேமரா அமைப்பு இந்த தொலைபேசியில் கொடுக்கப்படலாம்.
ALSO READ: Oppo அறிமுகம் செய்கிறது Oppo A53s: நம்ப முடியாத விலை, அட்டகாச அம்சங்கள்
Realme C25s-க்கு போட்டியாக வரும்
Oppo A16 இந்தியாவில் ரியல்மீயின் (Realme) புதிய C25s ஸ்மார்ட்போனுடன் போட்டியிடும். இந்த தொலைபேசியில் 6.5 இன்ச் எச்டி + டிஸ்ப்ளே கிடைக்கும். இது 720x1600 பிக்சல்கள் கொண்ட ரெசல்யூஷனை கொண்டிருக்கும். செயல்திறனுக்கு, இந்த தொலைபேசியில் மீடியாடெக் ஹீலியோ ஜி 85 பிராசசர் இருக்கும். இந்த தொலைபேசி ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான ரியல்மி யுஐ 2.0 இல் வேலை செய்யும். மீடியா டெக் ஹீலியோ ஜி 70 பிராசசர் ரியல்மி சி 25 இல் கிடைக்கிறது.
இந்த இரண்டு பிராசசர்களும் வழக்கமான பயன்பாட்டிற்கு மிகவும் நல்லதாக கருதப்படுகின்றன. இந்த தொலைபேசியில் மூன்று பின்புற கேமரா அமைப்பு இருக்கும். இதில் முதல் லென்ஸ் 48 மெகாபிக்சல்கள், இரண்டாவது லென்ஸ் 2 மெகாபிக்சல் மோனோக்ரோம் சென்சார் மற்றும் மூன்றாவது 2 மெகாபிக்சல் மேக்ரோ சென்சார் என்ற வகையில் இருக்கும்.
ALSO READ: Oppo A53 5G பம்பர் செய்தி: 2000 ரூபாய்க்கும் மேல் குறைந்தது விலை
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR