Oppo அறிமுகம் செய்கிறது Oppo A53s: நம்ப முடியாத விலை, அட்டகாச அம்சங்கள்

சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான ஒப்போ இந்தியாவில் மலிவான 5G ஸ்மார்ட்போன் Oppo A53s-ஐ பல நவீன அம்சங்களுடன் அறிமுகப்படுத்தியுள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 27, 2021, 03:01 PM IST
  • Oppo A53s 5G தொலைபேசியில் பவருக்கு 5000 எம்ஏஎச் பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது.
  • Oppo A53s 5G 6.5 இன்ச் எச்டி + டிஸ்ப்ளே கொண்டுள்ளது.
  • Oppo A53s 5G, இந்திய சந்தையில் Realme 8 5G-க்கு போட்டியாக சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
Oppo அறிமுகம் செய்கிறது Oppo A53s: நம்ப முடியாத விலை, அட்டகாச அம்சங்கள் title=

Oppo A53s 5G Launch: சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான ஒப்போ இந்தியாவில் மலிவான 5G ஸ்மார்ட்போன் Oppo A53s-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த தொலைபேசியின் விலை 15000 ரூபாய்க்கும் குறைவானதாக உள்ளது. இந்த தொலைபேசியில் மீடியாடெக் டைமென்சிடி 700 SoC பிராசசர் பொருத்தப்பட்டுள்ளது. இதனுடன், டிரிபிள் ரியர் கேமரா அமைப்பும் தொலைபேசியில் வழங்கப்பட்டுள்ளது. தொலைபேசியில் இடம்பெற்றுள்ள மற்ற அம்சங்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.

இதுதான் விலை

Oppo A53s 5G-யின் 6GB ரேம் மற்றும் 128 GB ஸ்டோரேஜ் வகையின் விலை ரூ .14,990 ஆகவும், அதன் 8 GB ரேம் மற்றும் 128 GB மாடலின் விலை ரூ .16,990 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

விவரக்குறிப்பு

Oppo A53s 5G 6.5 இன்ச் எச்டி + டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இதன் ரெஃப்ரெஷ் ரேட் 60 ஹெர்ட்ஸ் ஆகும். இந்த தொலைபேசி ஆண்ட்ராய்டு 11 (Android) அடிப்படையிலான ColorOS 11.1 இல் இயங்குகிறது. ஒப்போவின் இந்த தொலைபேசியில் மீடியாடெக் டைமன்சிட்டி 700 SoC பிராசசர் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 8 GB ரேம் மற்றும் 128GB இன்டர்னல் ஸ்டோரேஜ் கொடுக்கப்பட்டுள்ளது.

ALSO READ: ரூ .790க்கு பெறுங்கள் ரூ .12,990 Smartphone! முந்துங்கள்! Offer இன்று மட்டுமே!

கேமரா

கேமராவைப் பற்றி பேசினால், Oppo A53s 5G-ல் டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் முதன்மை கேமரா 13 மெகாபிக்சல்களைக் கொண்டுள்ளது. இது தவிர, 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் கேமரா சென்சார் வழங்கப்பட்டுள்ளன. தொலைபேசியில் செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்பிற்காக 8 மெகாபிக்சல் முன் கேமரா உள்ளது.

பேட்டரி மற்றும் இணைப்பு

Oppo A53s 5G தொலைபேசியில் பவருக்கு 5000 எம்ஏஎச் பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இது 10W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வருகிறது. தொலைபேசியில் பக்கவாட்டில் கைரேகை சென்சார் பொருத்தப்பட்டுள்ளது. இணைப்பிற்காக, புளூடூத் பதிப்பு 5.1, என்எப்சி, டூயல்-பேண்ட் வைஃபை, யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் மற்றும் 3.5 மிமீ ஹெட்ஃபோன் ஜேக் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

Realme 8 5G-க்கு போட்டியாக சந்தையில் இறங்குகிறது

Oppo A53s 5G, இந்திய சந்தையில் Realme 8 5G-க்கு போட்டியாக சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே உள்ளது. இது 1080x2400 பிக்சல்கள் ரெசல்யூஷன் கொண்டது. இதன் புதுப்பிப்பு வீதம் 90 ஹெர்ட்ஸ் ஆகும். தொலைபேசி டைமென்சிடி 700 பிராசசரைக் கொண்டுள்ளன. இந்த தொலைபேசி அண்ட்ராய்டு 11 ஐ அடிப்படையாகக் கொண்ட Realme UI 2.0 இல் செயல்படுகிறது. இந்த தொலைபேசி 4GB + 128GB மற்றும் 8GB + 256GB ஆகிய இரண்டு வகைகளில் கிடைக்கிறது. தொலைபேசியின் விலை ரூ .14,999 முதல் தொடங்குகிறது.

ALSO READ: தனது அட்டகாசமான ECG வாட்ச்-யை அறிமுகம் செய்த Oppo.. சிறப்பம்சம் என்ன?

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News