குறைந்த விலையில் மாஸ் காட்டும் BSNL! அதிர்ந்து போன ஜியோ
பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் அதன் மலிவான பிராட்பேண்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது, இது பல நன்மைகளுடன் வருகிறது.
பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) தனது வாடிக்கையாளர்களுக்கு ரூ.499 புதிய பிராட்பேண்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ஜியோ பைபர், ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ஆகியவற்றுக்குப் போட்டியாக பிஎஸ்என்எல் நெட்வொர்க்கிலும் தடையில்லா இன்டர்நெட் சேவைக்கான பிளான்கள் உள்ளன. அந்த வகையில், தற்போது பிஎஸ்என்எல் நெட்வொர்க்கில் புதிதாக 499 ரூபாய்க்கு ஒரு பிளான் கொண்டு வரப்பட்டுள்ளது. இதே 499 ரூபாய்க்கு ஒரு பிளான் ஏற்கெனவே உள்ளது. அதே பிளானை பெயர் மாற்றம் செய்து புதிய பிளான் என்று பிஎஸ்என்எல் அறிவித்துள்ளது.
பிஎஸ்என்எல் ரூ.499 ஃபைபர் அடிப்படை பிராட்பேண்ட் திட்ட நன்மைகள்
பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு ரூ.499 பிராட்பேண்ட் திட்டத்தை வழங்குவது இது முதல் முறை அல்ல. ரூ.499 திட்டமானது 40 Mbps இணைய வேகத்துடன் 3300 ஜிபி டேட்டா வரை FUP டேட்டாவுடன் அன்லிமிடெட் காலிங் உடன் வழங்குகிறது. FUP தரவைப் பயன்படுத்திய பிறகு, அதன் ஸ்பீட் 4 Mbps ஆகக் குறைக்கப்படுகிறது. இந்த பிளானை பெறுவதற்கு செக்யூரிட்டி டெப்பாசிட்டாக 500 ரூபாய் செலுத்த வேண்டும்.
மேலும் படிக்க | ஏர்டெல், ஜியோ பயனர்கள் எச்சரிக்கை: 5ஜி போன்களை வாங்க வேண்டாம்!
பிஎஸ்என்எல் ரூ.449 ஃபைபர் அடிப்படை NEO பிராட்பேண்ட் திட்ட நன்மைகள்
ஃபைபர் அடிப்படை NEO பிராட்பேண்ட் திட்டமான ரூ. 449 இன் நன்மைகள் முன்பு போலவே உள்ளன. பயனர்கள் 3300 ஜிபி டேட்டா வரை மாதாந்திர FUP டேட்டாவுடன் 30 Mbps இணைய வேகத்தைப் பெறுகிறார்கள் மற்றும் FUP டேட்டா நுகர்வுக்குப் பிறகு வேகம் 4 Mbps ஆகக் குறையும். இந்த பிளானை பெறுவதற்கு செக்யூரிட்டி டெப்பாசிட்டாக 500 ரூபாய் செலுத்த வேண்டும்.
இதற்கிடையில் பிஎஸ்என்எல் விரைவில் ரூ.775 மற்றும் ரூ.275 பிராட்பேண்ட் திட்டங்களை நிறுத்தப் (நவம்பர் 15, 2022) போகிறது. இந்த இரண்டு திட்டங்களும் 75வது சுதந்திர தினத்தின் போது விளம்பர சலுகையாக நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே பிஎஸ்என்எல் ஃபைபர் பிராட்பேண்ட் சேவை குறித்த முழுமையான விவரங்களுக்கு இங்குக் கிளிக் செய்யவும்: http://www.ap.bsnl.co.in/tariff_2022/FTTH_plans.pdf
மேலும் படிக்க | ஜியோ கொடுக்கப்போகும் 5ஜி வேகத்தால் காலியாக போகும் மற்ற டெலிகாம் நிறுவனங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ