இந்தியாவில் பல Gmail பயனர்களுக்கு Gmail-ல் பல கோளாறுகளை சந்திக்க வெண்டியிருந்தது. லாக்-இன் செய்வதிலும், அடேச்மெண்டுகளை அப்லோட் செய்வதிலும், பல பிரச்சனைகள் வந்தன. Google-ன் Gmail மற்றும் கூகிள் ட்ரைவ் என இரண்டிலும் வழக்கத்தைப் போல செயல்பட முடியவில்லை.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியாவில் மட்டும் Gmail மற்றும் கூகிளின் பிற அம்சங்களில் பிரச்சனை இல்லை என்றும், ஜப்பான், ஆஸ்திரேலியா, கனடா மற்றும் பல நாடுகளிலும் இப்படி நிகழ்ந்துள்ளதாகவும் வட்டாரங்கள் கூறுகின்றன. Google Drive-ஐ பயன்படுத்தும் பலரால் கோப்புகளைப் பதிவிறக்கவோ பதிவேற்றவோ முடியவில்லை.



கூகிள், அதன் நிலை பக்கத்தில் இந்த சிக்கலை ஒப்புக் கொண்டு, "Gmail –லில் ஒரு சிக்கல் குறித்த அறிக்கைகளை நாங்கள் ஆராய்ந்து கொண்டிருக்கிறோம். விரைவில் கூடுதல் தகவல்களை வழங்குவோம்." என்று கூறியுள்ளது.


தொழில்நுட்ப நிறுவனமான கூகிள் "நாங்கள் தொடர்ந்து இந்த பிரச்சினையை விசாரித்து வருகிறோம். கூடிய விரைவில் இது குறித்த புதுப்பிப்பை வழங்குவோம்." என்றும் கூறியுள்ளது.



தங்களால் மின்னஞ்சல்களை (Email) அனுப்ப முடியவில்லை என்று சிலர் கூறினர். சிலருக்கு, ஃபைல்களை இணைக்க முயற்சித்தபோது, ​​இது மிகவும் மெதுவாகவே நிகழ்ந்ததாகத் தெரிகிறது. அப்படியே ஃபைல்கள் இணைக்கப்பட்டாலும், “உங்கள் கனெக்ஷனை நீங்கள் சரிபார்க்க வேண்டும்" என்ற செய்தியே அதன் பிறகு வந்தது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உலகெங்கிலும் பலர் வீட்டிலிருந்த படி பணிபுரிந்து கொண்டிருக்கும் இவ்வேளையில், மின் அஞ்சல் சேவை என்பது மிகவும் முக்கியமானதாக உள்ளது. இப்போது Gmail –ல் இப்படி ஒரு பிரச்சனை வந்திருப்பது அனைவரையும் சிக்கலில் ஆழ்த்தியுள்ளது. எனினும் இது விரைவில் சரி செய்யப்பட்ம் என Google நிறுவனம் அறிவித்துள்ளது. 


ALSO READ: இணைய உலகில் வியப்பூட்டும் சில websites... புகைப்பட பதிவிறக்கம் இலவசம்...