Maruti Suzuki Celerio CNG launched:மாருதி சுஸுகி நிறுவனம் செலிரியோ சிஎன்ஜி காரை இந்தியாவில் அறிமுகப்படுத்திவிட்டது. பெட்ரோல் மாடலில் இருக்கும் அதே டிசைன் மற்றும் சிறப்பம்சங்கள் கொண்ட இந்த காருக்காக மக்கள் காத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த கார் அறிமுகம் செய்யப்பட்டதன் மூலம் பெட்ரோல், டீசல் விலை உயர்வில் இருந்து மக்களுக்கு நிவாரணம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரின் உதவியுடன், பெட்ரோலை விட மிக மலிவான விலையில் மக்களால் பயணிக்க முடியும் என்பதில் சந்தேகமில்லை. 


கடந்த ஐந்து ஆண்டுகளில், மாருதியின் (Maruti Suzuki) விற்பனையில் அபரிதமான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. வாகன விற்பனையில் 22 சதவீதம் உயர்வு ஏற்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 


சிஎன்ஜி அதிகமாகவும், எளிதாகவும் கிடைக்கும் வகையிலும் உள்ள இடங்களில் உள்ள வாடிக்கையாளர்களை கவர மாருதி செலிரியோ இப்போது முயற்சிக்கும். 


இந்த காரின் அளவைப் பற்றி பேசுகையில், அதன் நீளம் 3,695 மிமீ, அகலம் 1,655 மிமீ, உயரம் 1,555 மிமீ மற்றும் வீல்பேஸ் 2,435 மிமீ ஆக உள்ளது. இந்த கார் பார்ப்பதற்கு மிகவும் கவர்ச்சிகரமாக உள்ளது என்பது கூடுதல் தகவல். 


ALSO READ | பைக்-ஸ்கூட்டி வாங்க திட்டமா; பட்ஜெட்டுக்கு முன் இதையெல்லாம் தெரிந்து கொள்ளுங்கள்


இந்த கார் 53 ரூபாயில் 36 கிமீ மைலேஜ் தரும்


டெல்லியில் மாருதி சுஸுகி செலிரியோ (Maruti Suzuki Celerio) எஸ்-சிஎன்ஜியின் க்ஸ்ஷோரூம் விலை ரூ.6.58 லட்சம் எஆகும். மாருதி சுசுகி செலிரியோ எஸ் சிஎன்ஜியின் மைலேஜ் பற்றி பேசுகையில், இந்த கார் ஒரு கில்கிராமுக்கு 36.60 கிமீ மைலேஜ் தரும் என்று நிறுவனம் கூறுகிறது. 


டெல்லியில் சிஎன்ஜியின் விலை ரூ.53 ஆகும். நிறுவனம் இந்த காரில் ஒரே ஒரு மாற்றத்தை மட்டுமே செய்துள்ளது. இதில் சிஎன்ஜி டேங்க் பொருத்தப்பட்டுள்ளது.


நிறுவனத்தின் விற்பனை 22 சதவீதம் அதிகரித்துள்ளது


செய்தி நிறுவனமான PTயின் படி, மாருதி சுஸுகியின் சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனையின் மூத்த நிர்வாக இயக்குனர் ஷஷாங்க் ஸ்ரீவஸ்தவா கூறுகையில், 'எங்களிடம் எட்டு கிரீன மாடல்களின் மிகப்பெரிய போர்ட்ஃபோலியோ உள்ளது. மேலும் நாங்கள் சுமார் 9,50,000 S-CNG வாகனங்களை விற்பனை செய்துள்ளோம். புதிய செலிரியோ S-CNG அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம், நாட்டில் கிரீன் வாகனங்களை பரவலாக ஏற்றுக்கொள்வதில் ஒரு படி மேலே சென்றுள்ளோம். இந்திய சந்தைகளில் (Auto Market) மாருதியின் பிராண்ட் மதிப்பு அதிகமாக உள்ளது.' என்றார்.


ALSO READ | Tata இன் CNG கார்கள் இன்று அறிமுகம், சிக்கலில் Hyundai மற்றும் Maruti


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR