மாருதி சுசுகி கார் சலுகைகள்: மே 2022 இல், மாருதி சுஸுகி, அரீனா வரிசையில் உள்ள அனைத்து கார்களுக்கும் ரூ.31,000 வரை சலுகைகளை வழங்கியுள்ளது. இந்த சலுகைகளில் ரொக்கத் தள்ளுபடிகள், பெருநிறுவன நன்மைகள் மற்றும் பரிமாற்றச் சலுகைகள் ஆகியவை அடங்கும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மாருதி சுஸுகி பெட்ரோல் மூலம் இயங்கும் கார்களில் இந்த அனைத்து சலுகைகளையும் வழங்கியுள்ளது. சிஎன்ஜி மாடல்களில் வாடிக்கையாளர்களுக்கு எந்த நன்மையும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நிறுவனம் தள்ளுபடி வழங்கிய கார்களில் வேகன்ஆர், ஆல்டோ, எக்ஸ்-பிரஸ்ஸோ, ஸ்விஃப்ட், டிசையர், செலிரியோ மற்றும் விட்டாரா பிரெஸ்ஸா ஆகியவை அடங்கும்.


மாருதி சுஸுகி வேகன்ஆர்
நிறுவனம் சமீபத்தில் வாடிக்கையாளர்களின் விருப்பமான வேகன்ஆரின் 2022 மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. இது புதிய அம்சங்கள் மற்றும் புதிய வண்ணங்களுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. காரின் பழைய மாடலில் ஸ்டாக்குகளை விற்பனை செய்ய ரூ.31,000 வரை நிறுவனம் சலுகைகளை வழங்கியுள்ளது. காரின் 1.2 லிட்டர் எஞ்சின் மாடலுக்கு ரூ.21,000 வரையும், 1.0 லிட்டர் எஞ்சின் மாடலுக்கு ரூ.31,000 வரையும் நன்மைகள் வழங்கப்பட்டுள்ளன. 


மாருதி சுஸுகி ஆல்டோ
இது நீண்ட காலமாக நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் கார்களில் ஒன்றாகும். மேலும் மாருதி சுசுகி இந்த மலிவு விலை ஹேட்ச்பேக்கை கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக விற்பனை செய்து வருகிறது. வாடிக்கையாளர்களுக்கு இந்த காரில் ரூ.24,000 வரை பல நன்மைகள் வழங்கப்படுகின்றது. அதே சமயம் ஆல்டோவின் அடிப்படை எஸ்டிடி வகை ரூ.11,000 வரை பலன்களைப் பெறுகிறது.


மாருதி சுசுகி எஸ்-பிரஸ்ஸோ
நிறுவனம் இந்த காரை சிறந்த அம்சங்களுடன் பொருத்தியுள்ளது. இது வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் விரும்பப்படுகிறது. எஸ்-பிரஸ்ஸோ உடன் அதிகபட்சமாக 31,000 ரூபாய் வரை சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. இது காரின் நிலையான மாறுபாட்டில் வழங்கப்படுகிறது. மாருதி சுஸுகி எஸ்-பிரஸ்ஸோவின் ஏஎம்டி வேரியண்டில் ரூ.16,000 வரை சலுகைகளை வழங்கியுள்ளது.


மேலும் படிக்க | Mahindra Atom: நாட்டின் மிக மலிவான மின்சார கார் விரைவில் அறிமுகம் 


மாருதி சுஸுகி ஸ்விஃப்ட்
வாடிக்கையாளர்களின் விருப்பமான கார்களில் ஒன்றான மாருதி சுஸுகி ஸ்விஃப்ட், ஏராளமான அம்சங்களுடன் வந்துள்ளது. இது வாடிக்கையாளர்களின் பணத்துக்கு முழுமையான மதிப்பளிக்கும் ஒரு காராகும். நிறுவனம் இந்த காரில் மொத்தம் ரூ.25,000 வரை சலுகைகளை வழங்கியுள்ளது. அதே நேரத்தில் அதன் ஏஎம்டி மாறுபாடு ரூ.17,000 வரை தள்ளுபடியுடன் கிடைக்கிறது.


மாருதி சுசுகி டிசையர்
மாருதி சுஸுகி டிசைர் தனி நபர் மற்றும் கார்பரேட் வாடிக்கையாளர்களிடையே அதிகமாக விரும்பப்படுகிறது. மாருதி நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் கார்களில் இதுவும் சேர்க்கப்பட்டுள்ளது. மேனுவல் வேரியண்டில் வழங்கப்பட்டு வரும் இந்த செடான் மீது மாருதி சுஸுகி மொத்தம் ரூ.22,000 வரை தள்ளுபடி வழங்கியுள்ளது. காரின் ஏஎம்டி மாறுபாடு ரூ.17,000 வரையிலான மொத்த நன்மையுடன் கிடைக்கிறது.


மாருதி சுஸுகி செலிரியோ
மாருதி சுஸுகி நிறுவனம், முந்தைய மாடலை விட முற்றிலும் மாற்றப்பட்டு புதிய தலைமுறை செலிரியோவை இந்திய சந்தையில் சமீபத்தில் அறிமுகம் செய்துள்ளது. இதன் விற்பனை தொடங்கி 2 மாதங்களே ஆகியுள்ள நிலையில், தற்போது இந்த காருக்கு ரூ.26,000 வரை சலுகைகளை நிறுவனம் வழங்கியுள்ளது. ஏஎம்டி உள்ளிட்ட அனைத்து வகைகளிலும் இந்த தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன.


மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா
மாருதி சுஸுகி புதிய 2022 விட்டாரா பிரெஸ்ஸாவை மிக விரைவில் சந்தையில் அறிமுகப்படுத்த தயாராக உள்ளது. அதற்கு முன் ஸ்டாக்கை விற்பனை செய்ய, நிறுவனம் அதில் மொத்தம் ரூ.22,000 வரை தள்ளுபடி வழங்கியுள்ளது. இதுவும் மிகவும் விரும்பப்படும் காராக உள்ளது. இது மிகவும் அதிகமாக விற்பனை ஆகும் கார்களில் ஒன்றாகவும் உள்ளது. 


மேலும் படிக்க | டாடா நெக்ஸான் எலக்ட்ரிக் கார் டிரெய்லரே சும்மா அசத்துதில்ல: ஆனா விலையும் சூப்பர் தான் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR