வெறும் ரூ.11 ஆயிரத்தில் புதிய மாருதி எர்டிகாவை உங்களுக்கு சொந்தமாக்குங்கள்

வெறும் 11 ஆயிரம் ரூபாயில் மாருதி சுசூகி எர்டிகாவை உங்களுக்கு சொந்தமாகிக் கொள்ளும் வாய்ப்பு கிடைத்துள்ளது. 

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 9, 2022, 10:13 AM IST
  • அடுத்த வாரம் விற்பனைக்கு வரும் மாருதி எர்டிகா
  • வெறும் 11 ஆயிரம் செலுத்தி முன்பதிவை தொடங்குங்கள்
  • உங்களின் கார் கனவை நனவாக்க அருமையான வாய்ப்பு
வெறும் ரூ.11 ஆயிரத்தில் புதிய மாருதி எர்டிகாவை உங்களுக்கு சொந்தமாக்குங்கள் title=

கார் சந்தையில் மக்களின் மனதை கொள்ளையடிப்பதில் முதன்மையான இடத்தில் உள்ளது மாருதி சுசூகி எர்டிகா. இதுவரை சுமார் 7.5 லட்சத்துக்கும் மேலான மக்களின் சாய்ஸாக மாருதியின் எர்டிகா MPV உள்ளது.  2012 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட எர்டிகா எம்பிவி வெறும் 10 ஆண்டுகளில் இத்தனை லட்சம் வாடிக்கையாளர்களை சொந்தமாக்கி சாதனை படைத்துள்ளது. இந்த நிறுவனம் இப்போது வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்க | பலரின் கார் கனவுகளை நிறைவேற்றிய Maruti Alto - புதிய அம்சங்களுடன் விரைவில் அறிமுகம்

ரூ. 11 ஆயிரத்தில் முன்பதிவு 

எர்டிகா எம்பிவி காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலை மாருதி சுசூகி நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. இதற்கான முன்பதிவை தொடங்கியுள்ள அந்த நிறுவனம், வெறும் 11 ஆயிரம் ரூபாய் முன்பதிவுக்கு செலுத்தி உங்களின் கார் கனவை நனவாக்கிக் கொள்ள முடியும். விற்பனையில் முன்னணியில் இருக்கும் இந்தக் கார் மூன்று வகைகளில் கிடைக்கிறது. பெட்ரோல், டீசல் மற்றும் சிஎன்ஜி என எந்த மாடலில் வேண்டுமோ, வாடிக்கையாளர்கள் வாங்கிக் கொள்ளலாம். 

சிஎன்ஜி கொண்ட ஒரே எம்பிவி

BS6 விதிமுறைகள் வந்த பிறகு, இந்த பிரிவில் சிஎன்ஜி வேரியண்ட் பெற்ற ஒரே MPV மாருதி சுசூகி எர்டிகா மட்டும் தான். கடந்த நான்கு ஆண்டுகளாக MPV எர்டிகா விற்பனையில் தொடர்ச்சியான ஏற்றத்தை சந்தித்து வருகிறது. வாடிக்கையாளர்களின் ஏகோபித்த ஆதரவால் ஆண்டுதோறும் இந்தக் காரின் விற்பனை சீராக அதிகிரித்து வருகிறது. 

இந்த ஆண்டு விற்பனையில் ஏற்கனவே சாதனையை படைத்துள்ள இந்தக் கார், மார்க்கெட்டில் ​​ரெனால்ட் ட்ரைபர், மஹிந்திரா மராஸ்ஸோ மற்றும் கியா கேரன்ஸ் போன்ற வாகனங்களுக்கு கடும் போட்டியை அளித்து வருகிறது.

மார்க்கெட்டில் எப்போது அறிமுகம்?

புதிய எர்டிகா அடுத்த வாரம் மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அடுத்த தலைமுறை எர்டிகா ஸ்மார்ட் ஹைப்ரிட் தொழில்நுட்பம், 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின், மேம்படுத்தப்பட்ட பவர்டிரெய்ன், மேம்பட்ட 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் மற்றும் பல புதிய அம்சங்களை கொண்டிருக்கும். 

மேலும் படிக்க | 400 கி.மீ செல்லும் டாடா நெக்ஸான் இந்தியாவில் எப்போது அறிமுகம்?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News