டாடா நெக்ஸான் எலக்ட்ரிக் கார் டிரெய்லரே சும்மா அசத்துதில்ல: ஆனா விலையும் சூப்பர் தான்

நீண்ட தூர நெக்ஸான் EVயான எலக்ட்ரிக் கார், Tata Nexon EV Max என அழைக்கப்படும் என Tata Motors அறிவித்துள்ளது.

Written by - Malathi Tamilselvan | Last Updated : May 6, 2022, 04:07 PM IST
  • டாடா நெக்ஸான் எலக்ட்ரிக் காரின் பெயர் என்ன தெரியுமா?
  • டாடா நெக்ஸான் எலக்ட்ரிக் கார் டிரெய்லர் வெளியீடு
  • ஒருமுறை சார்ஜ் செய்தால் சுமார் 400 கிமீ வரை செல்லும் பவர்ஃபுல் பேட்டரி
டாடா நெக்ஸான் எலக்ட்ரிக் கார் டிரெய்லரே சும்மா அசத்துதில்ல: ஆனா விலையும் சூப்பர் தான் title=

Tata Motors தனது நீண்ட தூர நெக்ஸான் EVயான எலக்ட்ரிக் கார், Tata Nexon EV Max என அழைக்கப்படும் என அறிவித்துள்ளது. இந்த மின்சார கார் மே 11, 2022 அன்று அறிமுகப்படுத்தப்பட உள்ளது. 

பயணக் கட்டுப்பாடு, காற்றோட்ட இருக்கைகள், பார்க் மோட், ஏர் ப்யூரிஃபையர், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல் (ESC) போன்ற பல சிறந்த அம்சங்கள் டாடா நெக்ஸான் EVயின் நீண்ட தூர மாறுபாட்டில் கொடுக்கப்படலாம் என்று நிறுவனம் வெளியிட்ட டீஸரில் தெரிகிறது. 

புதிய Nexon EV Max ஆனது பெரிய பேட்டரி பேக் மற்றும் புதிய அம்சங்களைக் கொண்டிருக்கும். இந்த புதிய காருக்கான முன்பதிவுகள் தொடங்கிவிட்டன.  

40kWh பேட்டரி பேக்குடன் வரும் Tata Nexon EV Max வேரியண்ட் கார், அதனுடைய ​​தற்போதைய மாடலை (Nexon EV) விட அதிக சக்தி வாய்ந்தது. தற்போதைய கார், 30.2kWh லித்தியம்-அயன் பேட்டரி பேக் பொருத்தப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | Amazon விற்பனை: வீட்டு உபயோகப் பொருட்களுக்கு 45% வரை தள்ளுபடி

இந்த பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 312 கிமீ வரை செல்லும் என டாடா மோட்டர்ஸ் தெரிவித்துள்ளது. 

ஆனால், இதைவிட அதிக சக்தி வாய்ந்த புதிய நீண்ட தூர மாடலை ஒருமுறை சார்ஜ் செய்தால் சுமார் 400 கிமீ வரை செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Tata Nexon EV Max இல் என்ன சிறப்பு இருக்கும்

டாடா மோட்டார்ஸ் நெக்ஸானின் EV திட்டத்தில் பெரிய பேட்டரி பேக்கிற்கு இடமளிக்கும் வகையில் சில மாற்றங்களைச் செய்யும். மேலும், கால் வைக்கும் இடமும் குறைவாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மின்சார மோட்டார் அதிக சக்தி மற்றும் முறுக்கு வெளியீட்டை (torque output) வழங்க முடியும். டாடா நெக்ஸான் EV மேக்ஸ் மிகவும் சக்திவாய்ந்த 6.6kW AC சார்ஜருடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் படிக்க | ஜியோவின் லேட்டஸ்ட் ஹாட்ஸ்டார் இலவச பிளான்

அதன் தற்போதைய மாடல் 3.3kW AC சார்ஜருடன் வருகிறது, இது பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்ய சுமார் 10 மணிநேரம் ஆகும். தேவையென்றால் 6.6kW AC சார்ஜரையும் வாங்கிக்கொள்ளலாம். இதற்கு, வாகனத்தில் விலையை விட கூடுதல் பணம் கொடுக்க வேண்டியிருக்கலாம்.  

Tata Nexon EV Max சில தேர்ந்தெடுக்கப்பட்ட பிராந்தியங்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது. இது தவிர, காரில் ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் ஆதரவும் வழங்கப்படலாம்.

டாடா மோட்டார்ஸின் புதிய நீண்ட தூர நெக்ஸான் EV, தற்போதைய மாடலைவிட அதிக வசதி மற்றும் புதிய அம்சங்களைக் கொண்டிருக்கலாம். 

க்ரூஸ் கன்ட்ரோல், காற்றோட்ட இருக்கைகள், பார்க் மோட், ஏர் ப்யூரிஃபையர், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல் (ESC) மற்றும் பல சிறந்த அம்சங்களைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய மாடலில் பின்புற டிஸ்க் பிரேக் கிடைக்க வாய்ப்புள்ளது.

Tata Nexon EV மேக்ஸ் விலை
நிலையான Nexon EV ரூ.14.54 லட்சம் முதல் ரூ.17.15 லட்சம் வரையில் வருகிறது. புதிய அம்சங்கள் மற்றும் பெரிய பேட்டரியுடன், Nexon EV Max ஸ்டாண்டர்ட் டாப்-எண்ட் மாறுபாட்டை விட சுமார் ரூ.3 லட்சம் முதல் ரூ.4 லட்சம் வரை விலை அதிகமாக இருக்கும். இதன் ஷோரூம் விலை சுமார் ரூ.20 லட்சம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த நெக்ஸான் எலக்ட்ரிக் கார் இன்னும் சில நாட்களில் இந்திய சாலைகளில் ஓடிக் கொண்டிருக்கும்.

மேலும் படிக்க | உங்கள் ஸ்மார்ட்போனின் பேட்டரியை நாசமாக்கும் செயலிகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News