’கார் வாங்க சரியான நேரம்’ இதுவரை இல்லாத தள்ளுபடி விலையில் மாருதி கார்கள்..!
மாருதி நிறுவனத்தின் கார்களுக்கு இதுவரை இல்லாத அளவுக்கு சலுகைகளும், தள்ளுபடிகளும் அறிவிக்கப்பட்டுள்ளதால், கார் வாங்குவதற்கு இது சரியான நேரமாக பார்க்கப்படுகிறது.
மாருதி நிறுவனத்தின் பெட்ரோல் கார்களுக்கான மிகப்பெரிய தள்ளுபடியை அறிவித்துள்ளது. பணத்தள்ளுப்படி மற்றும் சலுகைகள் உட்பட அதிகபட்சம் 41 ஆயிரம் ரூபாய் வரை தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சிஎன்ஜி கார்களுக்கு தள்ளுபடி இல்லை. வேகன்ஆர், ஆல்டோ, எஸ்-பிரஸ்ஸோ, ஈகோ, ஸ்விஃப்ட், டிசையர், செலிரியோ மற்றும் விட்டாரா பிரெஸ்ஸா ஆகிய கார்களுக்கு இந்த தள்ளுப்படி பொருந்தும்.
மாருதி சுஸுகி வேகன்ஆர்
அண்மையில் வேகன்ஆரின் 2022 மாடலை அறிமுகப்படுத்திய மாருதி நிறுவனம், புதிய அம்சங்கள் மற்றும் புதிய வண்ணங்களின் விருப்பத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. இருப்பினும், காரின் பழைய மாடலில் இருப்பை விற்பனை செய்யும் வகையில் ரூ.41,000 வரை சலுகைகளை வழங்கியுள்ளது. காரின் 1.2 லிட்டர் எஞ்சின் மாடலுக்கு ரூ.41,000 வரையும், 1.0 லிட்டர் எஞ்சின் மாடலுக்கு ரூ.31,000 வரையும் பலன்கள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும் படிக்க | Tata SUV PUNCH காரை அறிமுகப்படுத்துகிறது டாடா… இதன் சிறப்பம்சங்கள்
மாருதி சுஸுகி ஆல்டோ
இது நீண்ட காலமாக நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் கார்களில் ஒன்று மாருதி சுஸூகி ஆல்டோ. மலிவு விலையில் உள்ள ஹேட்ச்பேக் காரை கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக மாருதி நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. வாடிக்கையாளர்கள் இப்போது அறிவிக்கப்பட்டுள்ள சலுகையில் ரூ.31,000 வரை பணத் தள்ளுபடிகளை பெற முடியும். மேலும், ஆல்டோவின் அடிப்படை எஸ்டிடி மாடலுக்கு ரூ.11,000 வரை தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளன
மாருதி சுசுகி எஸ்-பிரஸ்ஸோ
மாருதி நிறுவனத்தின் பெஸ்ட் மற்றும் வாடிக்கையாளர்களின் விருப்பத் தேர்வாக இருக்கும் பிரஸ்ஸோ காருக்கு அதிகபட்சம் 31 ஆயிரம் வரை தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வேரியண்டுக்கு ஏற்ப தள்ளுபடிகளை அறிவித்துள்ள மாருதி, இந்த பிரஸ்ஸோவில் இருக்கும் AMT வேரியண்டுக்கு ரூ.16,000 வரை சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மாருதி சுசுகி ஈகோ
இந்தியாவில் 7 இருக்கைகள் கொண்ட மலிவான விலையில் கிடைக்கக்கூடிய கார்களில் ஒன்று மாருதி சுஸூகி ஈகோ. பல்வேறு லேட்டஸ்ட் அம்சங்களைக் கொண்ட இந்தக் காருக்கு இப்போது 29 ஆயிரம் ரூபாய் வரை மாருதி நிறுவனம் தள்ளுபடி அறிவித்துள்ளது.
ஸ்விஃப்ட்
வாடிக்கையாளர்களின் விருப்பமான கார்களில் ஒன்று மாருதி சுஸுகி ஸ்விஃப்ட். ஏராளமான அம்சங்களுடன் கொண்ட இந்தக் காரை அனைத்து தரப்பு மக்களும் விரும்பி வாங்குகின்றனர். இந்த தள்ளுபடி விற்பனையையொட்டி மாதம் ரூ.27,000 வரை சலுகைகளை வாரி வழங்கியுள்ளது மாருதி நிறுவனம்.
இதேபோல், மாருதி சுஸுகி டிசையர் காருக்கு அதிகபட்சம் 27 ஆயிரம் ரூபாய் வரையும், செலிரியோ மாடலுக்கு 26 ஆயிரம் ரூபாய் வரையிலும் தள்ளுபடிகள் கிடைக்கும். விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி கார்களுக்கு 22 ஆயிரம் ரூபாய் வரை தள்ளுபடி அறிவித்துள்ளது மாருதி நிறுவனம்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR