பைக்கைவிட குறைவான விலையில் மாருதி கார்கள் - விலை விவரம்
மாருதி நிறுவனத்தின் பயன்படுத்தப்பட்ட கார்கள் பைக்குகளின் விலையை விட குறைவான விலையில் கிடைக்கின்றன
கடந்த சில ஆண்டுகளாக, பயன்படுத்திய கார்கள் அல்லது செகண்ட் ஹேண்ட் கார்களுக்கான மார்க்கெட் இந்தியாவில் உயர்ந்துள்ளது. பல பெரிய வாகன உற்பத்தியாளர்களும்கூட இந்த வணிகத்தில் பிரதானமாக இறங்கியுள்ளனர். புதிய கார்கள் வாங்குவதை விட பழைய கார்கள் விலை குறைவாக கிடைப்பதால், பெரும்பாலானோர் இதனை விரும்புகின்றனர்.
இதனால், செகண்ட் ஹேண்ட் கார்களுக்கான விளம்பரங்களை பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் நீங்கள் அதிகம் பார்க்க இயலும். மாருதி நிறுவனம் மற்றும் மகேந்திரா நிறுவனங்கள் கூட செகண்ட்ஹேண்ட் கார்களை விற்பனை செய்கின்றன. மாருதி ட்ரூ வேல்யூ, மஹிந்திரா ஃபர்ஸ்ட் சாய்ஸ், கார்ஸ்24 உள்ளிட்ட தளங்களில் செகண்ட் ஹேண்ட் கார்களின் விலையை நீங்கள் தெரிந்து கொள்ளலாம். ஹோலி அன்று செகண்ட் ஹேண்ட் கார்களை நீங்கள் வாங்க விரும்பினால், மார்க்கெட்டில் இருக்கும் சிறந்த டீல்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
மேலும் படிக்க | ஹோலி பண்டிகையில் ஹுண்டை கார்களுக்கு கலர் கலரா கலக்கல் தள்ளுபடிகள்
மாருதி ஆல்டோ
செகண்ட் ஹேண்ட் கார் சந்தையில் வாடிக்கையாளர்கள் நிறைய வேரியண்டுகள் இருக்கின்றன. பயன்படுத்திய கார்களின் மாடல்கள் மிக குறைந்த விலையிலேயே நீங்கள் வாங்க முடியும். மாருதி ஆல்டோ காரை நீங்கள் வாங்க விரும்பினால், 2007 மாடலில் 90,000 கிலோ மீட்டர் ஓடியிருக்கக்கூடிய கார் அதிகபட்சம் 49 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. உரிமையாளர்களுடன் நேரடியாக பேசும்போது இந்த விலை மேலும் குறைக்க வாய்ப்புகள் உள்ளன. மாருதி செகண்ட்ஹேண்ட் கார்களைப் பொறுத்தவரை ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் நிறுவனத்தை தொடர்பு கொண்டு கேட்கலாம்.
மாருதி ஆல்டோ எஸ்டிடி
மாருதி ஆல்டோவின் எஸ்டிடி மாடல் ட்ரூ வேல்யூவில் விற்பனை இருக்கிறது. வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்பும் இந்தக் கார் 2007 மாடலாக இருந்து 85,800 கிலோ மீட்டர் ஓடியிருந்தால் அதிகபட்சம் 85 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், காரின் முழுமையான நிலையை அறிய சிறந்த மெக்கானிக்கை அழைத்துச் சென்று உங்களுக்கான சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்வது அவசியம்.
மேலும் படிக்க | 3ஜி, 4ஜிக்கு டாடா, இந்தியா விரைவில் 6G அறிமுகம்
வாங்குவதற்கு முன்பு கவனிக்க
பயன்படுத்திய காரை வாங்குவதற்கு முன்பும், வாங்கும் போதும் வாடிக்கையாளர்கள் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள் உள்ளன. முதலில், காரின் அனைத்து ஆவணங்களையும் நீங்களே சரிபார்க்கவும். இது தவிர, கடந்த ஆண்டுகளின் வாகன உரிமை மற்றும் ஆவணங்கள் உள்ளிட்டவை உண்மையானவையா? என்பதை முழுமையாக ஆராய்ந்த பின்னரே கார் வாங்க முடிவு செய்ய வேண்டும். டெஸ்ட் டிரைவ் அவசியம்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR