ஹோலி பண்டிகையில் ஹுண்டை கார்களுக்கு கலர் கலரா கலக்கல் தள்ளுபடிகள்

டாடா, மஹிந்திரா மற்றும் பிற கார் உற்பத்தியாளர்களுக்குப் பிறகு, ஹூண்டாய் அதன் பல்வேறு மாடல்களில் தள்ளுபடி சலுகைகளை அறிவித்துள்ளது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 12, 2022, 04:23 PM IST
  • Hyundai Grand i10 Nios அதிகபட்சமாக ரூ.35,000 தள்ளுபடி பெறுகிறது.
  • கார்களின் சிஎன்ஜி வகைகளுக்கு தள்ளுபடி இல்லை.
  • ஹூண்டாய் ஆராவில் ரூ. 35,000 ரொக்க தள்ளுபடி கிடைக்கிறது.
ஹோலி பண்டிகையில் ஹுண்டை கார்களுக்கு கலர் கலரா கலக்கல் தள்ளுபடிகள் title=

ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியா, மார்ச் மாதத்தில் பல்வேறு மாடல்களில் ஹோலி பண்டிகைகளுக்கான தள்ளுபடிகளை அறிவித்துள்ளது. கொரிய வாகன உற்பத்தியாளரான ஹுண்டாய் வழங்கும் தள்ளுபடி விற்பனை, எண்ணிக்கையை அதிகரிக்கும் முயற்சியாக வந்துள்ளது. சமீபத்திய தள்ளுபடி சலுகைகளில் நீங்கள் வாங்கத் தேர்ந்தெடுக்கும் மாடலைப் பொறுத்து ரொக்கத் தள்ளுபடிகள், பரிமாற்ற போனஸ்கள் மற்றும் கார்ப்பரேட் தள்ளுபடிகள் ஆகியவை கிடைக்கும்.

மார்ச் 2022 இல் ஹூண்டாய் தள்ளுபடி சலுகையின் விவரங்கள்

ஹூண்டாயின் மிகவும் விரும்பப்படும் ஹேட்ச்பேக் கார்களில் ஒன்றான சான்ட்ரோ, இரா வேரியன்டில் ரூ.10,000 ரொக்க தள்ளுபடியுடன் கிடைக்கிறது. இருப்பினும், சிஎன்ஜி மாறுபாட்டிற்கு தள்ளுபடி இல்லை. MY 2022 இல் மற்ற அனைத்து வகைகளுக்கும் ரூபாய் 15,000 ரொக்க தள்ளுபடி கிடைக்கும். இதேபோல், MY2021 மாடல்களுக்கு ரூ.25,000 ரொக்க தள்ளுபடி கிடைக்கும்.

மற்றொரு ஹேட்ச்பேக்கான ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் 1.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் வகைக்கு ரூ.35,000 ரொக்க தள்ளுபடி வழங்கப்படுகிறது. இருப்பினும், 1.2 லிட்டர் நேச்சுரல் ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.2 லிட்டர் டர்போ-டீசல் வகைகளில் ரூ.10,000 ரொக்க தள்ளுபடி கிடைக்கிறது. சிஎன்ஜி வகைகளுக்கு தள்ளுபடி சலுகைகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | மார்க்கெட்டில் புயலைக் கிளப்ப வரும் மாருதி XL6 - சிறப்பம்சங்கள் இதோ..! 

ஹூண்டாய் ஆராவின் 1.0லி டர்போ-பெட்ரோல் பதிப்புக்கு ரூ. 35,000 ரொக்க தள்ளுபடி கிடைக்கிறது. ஆனால் சிஎன்ஜி மாறுபாடுக்கு இந்த சலுகை இல்லை. 1.2L NA பெட்ரோல் மற்றும் 1.2L டர்போ-டீசல் மாடல்களில் ரூ.  10,000 ரொக்க தள்ளுபடி கிடைக்கிறது.

ஹூண்டாய் டாப் ஹேட்ச்பேக், i20-யில் ரூ. 25,000 ரொக்க தள்ளுபடி கிடைக்கிறது. எனினும் 1.0L பெட்ரோல் iMT மாடல்களில் மட்டுமே (MY2021 மாடல் மட்டும்) இந்த தள்ளுபடி கிடைக்கும். i20 என் லைன், வெர்னா, எலண்ட்ரா, வென்யூ, க்ரேட்டா, அல்காசார், டஸ்கன் மற்றும் கோனா இவி-க்கு அதிகாரப்பூர்வமான தள்ளுபடிகள் எதுவும் இல்லை.

MY2022 மாடல்களுக்கு சான்ட்ரோ, கிராண்ட் ஐ10 நியாஸ், ஆரா மற்றும் i20 (1.0L iMT மற்றும் 1.5L MT வகைகள் மட்டும்) ஆகியவற்றில் ரூ. 10,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் ரூ. 3,000 கார்ப்பரேட் தள்ளுபடி ஆகியவையும் கிடைக்கின்றன. MY2021 மாடல்களுக்கு ரூ.3,000 கார்ப்பரேட் தள்ளுபடி கிடைக்கிறது. 

மேலும் படிக்க | ஓபன் ரோர் இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் அட்டகாசமான அழகு மோட்டர் சைக்கிள் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News