ஸ்மார்ட்போன் பிரியர்களுக்கு நல்ல செய்தி!! Mi இன் கிளியரன்ஸ் சேலில் மிகச்சிறந்த ஸ்மார்ட்போன்களை வெறும் ரூ.3999க்கு வாங்க அட்டகாசமான வாய்ப்பு கிடைக்கிறது.  இந்தியாவில் ரூ.6000க்கு கீழ் உள்ள பெரும்பாலான போன்கள் இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளன. இருப்பினும், சமீபத்தில் வெளியிடப்பட்ட ரெட்மி போன்கள் தள்ளுபடியில் சேர்க்கப்படவில்லை. நிறுவனத்தின் பட்ஜெட் போன், Redmi 6A, இதுவரை இல்லாத குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த போனின் விலை தற்போது 4 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாக உள்ளது. Mi கிளியரன்ஸ் விற்பனையில் எந்தெந்த போன்கள் பட்டியலிடப்பட்டுள்ளன என்பதை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.  


Redmi 6A: தள்ளுபடி விலை


நிறுவனத்தின் பட்ஜெட் போனான ரெட்மி 6ஏ, இதுவரை இல்லாத மிகக்குறைந்த விலையில் வழங்கப்பட்டுள்ளது. 6999 ரூபாய் ஆரம்ப விலையில் இருந்த Redmi 6A, தற்போது 3,999 ரூபாய்க்கு விற்பனைக்கு கிடைக்கிறது. Mi கிளியரன்ஸ் விற்பனையில் மட்டுமே தள்ளுபடி விலையில் இந்த போன் கிடைக்கும். 


மேலும் படிக்க | சாம்சங் கேலக்ஸி S22 ஸ்மார்ட்போன்: 36% தள்ளுபடியில்! இலவசமாக ஸ்மார்ட் வாட்ச்


ரெட்மி ஏ போன், மிகவும் எளிமையான அம்சங்களைக் கொண்ட ஒரு நுழைவு-நிலை தொலைபேசி என்பதை நினைவில் கொள்ள வேண்டியது அவசியமாகும். இந்த போன் ரூ. 3999 விலையில் ஒரு சிறந்த மற்றும் ஆற்றல்மிக்க கேமரா விவரக்குறிப்புகளைக் கொண்டுள்ளது. மறுபுறம், தள்ளுபடி செய்யப்பட்ட தொலைபேசிகள் உத்தரவாதத்துடன் வரவில்லை. விற்பனைக்குப் பிந்தைய வரையறுக்கப்பட்ட சேவையும் பயனர்களுக்கு வழங்கப்படும். Redmi 6A-ஐ தள்ளுபடியில் வாங்கும் முன் மனதில் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயமாகும் இது. 


இந்த போன்களுக்கும் தள்ளுபடிகள்


Mi கிளியரன்ஸ் விற்பனையில் உங்கள் ஆர்வத்தை தூண்டக்கூடும் பிற பொருட்கள் உள்ளன. முந்தைய நோட் சீரிஸின் இரண்டு மாடல்களான ரெட்மி நோட் 7 ப்ரோ மற்றும் ரெட்மி நோட் 7 ஆகியவற்றின் விலை ரூ.6000க்கும் குறைவாக இருக்கும். Redmi Note 4, Redmi Y1 Lite மற்றும் Redmi Y2 ஆகிய மூன்று ரெட்மி சாதனங்களும் ரூ. 5000-க்குள் இருக்கும்.


Redmi Note 12 தொடர்: விரைவில் அறிமுகப்படுத்தப்படும்


ரெட்மி நோட் 12 தொடரை இந்தியாவில் அறிமுகப்படுத்த ரெட்மி தயாராகி வருகிறது. நிறுவனம் ஏற்கனவே நோட் 12 தொடரை சீனாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்துள்ளது. மேலும் தற்போது இந்தியாவில் நோட் 12 ப்ரோ பிளஸை அறிமுகம் செய்ய மும்முரமான பணிகளில் ஈடுபட்டுள்ளது. Redmi Note 12, Redmi Note 12 Pro மற்றும் Redmi Note 12 Explorer பதிப்பு அனைத்தும் Note 12 தொடரின் ஒரு பகுதியாகும்.


Xiaomi ஒரே நேரத்தில் சீனாவில் Redmi Note 12 5G ஐ வெளியிட்டது. போனில் 6.6 இன்ச் பிளாட் டிஸ்ப்ளே உள்ளது. இது 120Hz புதுப்பிப்பு வீதம் மற்றும் FHD+ தெளிவுத்திறனுடன் பஞ்ச்-ஹோல் AMOLED டிஸ்ப்ளே கொண்டுள்ளது. திரையில் டச் சேம்ப்ளிங் ரேட் 240Hz ஆகும்.


மேலும் படிக்க | BSNL பயனார்களே..அருமையான 2 பிளான்கள்; உடனே ரீசார்ஜ் செய்யுங்க 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ