சென்டிமென்ட் பார்க்கும் ரெட்மீ
ரெட்மி நிறுவனம் Redmi Note 11 சீரிஸில் அடுத்து அறிமுகப்படுத்த இருக்கும் மொபைல் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. ஆண்டு தோறும், அந்த ஆண்டின் அடிப்படையில் புதிய போனை வெளியிட்டு வரும் ரெட்மீ நிறுவனம், அடுத்தாண்டு ரெட்மி 11 ப்ரோ 2023-ல் மொபைலை மார்க்கெட்டுக்கு கொண்டு வர தீவிரமாக செயல்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. சியோமி நிறுவனம் கடந்த ஆண்டும் இதேபோல் நிறுவனம் ரெட்மி 10 2022 மாடலை கொண்டு வந்தது. இதில் வெற்றியும் கிடைப்பதால் சென்டிமென்டாக ஆண்டு அடிப்படையில் புதிய மொபலை களமிறக்குவதை வாடிக்கையாக்கிக் கொண்டுள்ளது. இந்த மொபைல் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் மார்க்கெட்டுக்கு வரும் என எதிர்பார்க்கலாம்.
மேலும் படிக்க | இனி ஸ்டோரேஜ் GBயில் இல்லை TBயில்....புதிய ஸ்மார்ட்ஃபோன் அறிமுகம்
விவரக்குறிப்புகள்
கீ பெஞ்ச் தகவலின்படி, ரெட்மியின் Redmi Note 11 Pro 2023 ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 732ஜி செயலி இருக்கும். இந்த ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம்-ல் இருக்கும். இது வாடிக்கையாளர்களுக்கு நல்ல அனுபவத்தையும் கொடுக்கும். இது மட்டுமல்லாமல், ஸ்மார்ட்போனில் 6.67 பெரிய டிஸ்ப்ளே வழங்கப்படலாம். இந்தக் காட்சியில் வாடிக்கையாளர்களுக்கு 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம் இருக்கும்.
விலை
ரெட்மி நோட் 11 ப்ரோ 2023-ன் விலை மிகவும் மலிவாக இருக்க வாய்ப்பு இருக்கிறது. வாடிக்கையாளர்களின் பட்ஜெட்டுக்கு ஏற்ப நிறுவனத்தின் பழைய ஸ்மார்ட்போன்களும் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டதால், இந்த ஸ்மார்ட்போனிலும் இதையே எதிர்பார்க்கலாம். எனவே Redmi Note 11 Pro 2023 ரூ.15,000 விலைப்பிரிவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதன் விலை மிகக் குறைவாக இருக்கும் என்பது தற்போதைக்கு வெளியாகியிருக்கும் தகவல் என்பதால் Redmi Note 11 Pro 2023 அறிமுகமான பிறகுதான் தெரியும். வடிவமைப்பை பொறுத்தவரையில் பழைய ஸ்மார்ட்போனிலிருந்து வடிவமைப்பில் பெரிய மாற்றங்களைக் காண மாட்டார்கள். அத்தகைய சூழ்நிலையில், வடிவமைப்பு பெரும்பாலும் முன்பு போலவே இருக்கும். ஆனால் அம்சங்களில் நிறைய மாற்றங்களைக் காணலாம். நம்பப்படுகிறது.
அம்சங்கள்
108எம்பி கேமரா+ 2எம்பி மேக்ரோ கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் மற்றும் 16எம்பி செல்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. அதேபோல் இதில் 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 67 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி இதில் இருக்கிறது. அறிமுகம் குறித்த அறிவிப்பு இன்னும் ஒருசில வாரங்களில் எதிர்பார்க்கலாம்.
மேலும் படிக்க | வாட்ஸ் அப்பில் அறிமுகமாகியுள்ள 5 புதிய அம்சங்கள் பற்றி தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ