மைக்ரோசாஃப்ட் நிறுவனம் கடந்த 25 வருடங்களாக இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் சேவையை வழங்கிவந்த நிலையில், தற்போது இந்த சேவையை நிறுத்துவதாக கூறியுள்ளது.  1995ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த பிரவுசர் விண்டோஸ் 95 உடன் வந்தது.  இதற்கு பின்னர் வந்த பல வெர்ஷன்கள் இலவசமாக அல்லது சர்விஸ் பேக்குகளாக கிடைத்தது, 2003ல் இது நல்ல முன்னேற்றத்தை கண்டது. பின்னர் பல புதிய பிரவுசர்களின் வரவால் இது வீழ்ச்சியடைய தொடங்கிவிட்டது.  ஆனால் இந்நிறுவனம் புதிய அப்டேட்டையோ அல்லது எவ்வித மாறுப்பட்டையோ இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரில் கொண்டுவரவில்லை.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | Smartphone Hacking: ஹேக்கர்களை அழைப்பது நீங்கள் தான் - ஸ்மார்ட்போன் எச்சரிக்கை


அடுத்ததாக 2013-ல் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் இறுதியாக இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 11 ஐ மட்டும் கொண்டுவந்தது.  தற்போது மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் அறிவிப்புப்படி, பழமையான இந்த பிரவுசர் ஜூன்-15, 2022 முதல் செயல்படாது என்று தெரிவித்துள்ளது.  மைக்ரோசாஃப்ட் எட்ஜில், விண்டோஸ் 10 செயல்படுவதாகவும் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் சேவை நிறுத்தப்படுவதாகவும் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.  இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரை காட்டிலும் மைக்ரோசாஃப்ட் எட்ஜ் வேகமாக செயல்படுவதுடன், பாதுகாப்பகவும் இருக்கிறது.  மேலும் இது பழைய வெப்சைட்டுகள் மற்றும் அப்ளிகேஷன்களை இயக்க அனுமதிப்பதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.


மைக்ரோசாஃப்ட் எட்ஜில், இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் மோட் இருப்பதால் பயனர்கள் இதனை முன்பு போலவே எளிமையாக பயன்படுத்திக்கொள்ளலாம்.  மேலும் நிறுவனம் கூறுகையில், பல வருடங்களாக எங்களுக்கு ஆதரவு கொடுத்த மக்களுக்கு நன்றி, பல மக்களும், நிறுவனங்களும் இதனை சார்ந்து இருந்து அவர்களை மேம்படுத்தி இருக்கின்றனர் என்று தெரிவித்துள்ளது.  இந்நிலையில் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் சேவை நிறுத்துவது குறித்து ட்விட்டரில் பல மீம்ஸ்கள் ட்ரெண்டாகி வருகின்றது.


 



 



மேலும் படிக்க | ஒரே போனில் 2-2 WhatsApp மற்றும் Instagram பயன்படுத்த டிப்ஸ்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR