புது டெல்லி: நாட்டின் முன்னணி தனியார் டெலிகாம் நிறுவனங்கள், ஜியோ ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா அவ்வப்போது பல அற்புதமான திட்டங்களை அறிவித்து வருகிறது. வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் மிகவும் மலிவான மற்றும் அதிக நன்மைகளை கொண்ட அற்புதமான திட்டங்களை வழங்கி வருகின்றது. இன்று நாம் இந்த மூன்று நிறுவனங்களின் மிகவும் மலிவான போஸ்ட்பேட் திட்டங்களைப் பற்றி காண உள்ளோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜியோவின் ரூ.199 திட்டம்: நிறுவனத்தின் (Reliance Jio) இந்த ரூ.199 திட்டத்தில், உங்களுக்கு ஒரு மாதத்திற்கு மொத்தம் 25ஜிபி டேட்டா வழங்கப்படும், அதன் பிறகு ஒரு ஜிபிக்கு ரூ.20 செலவழிக்க வேண்டும். இந்தத் திட்டத்தில், எந்த நெட்வொர்க்கிலும் அன்லிமிடெட் காலிங் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் நன்மைகளையும் பெறுவீர்கள்.


ALSO READ | ப்ரீபெய்டு திட்டங்களின் காலத்தை 30 நாட்களாக உயர்த்த வேண்டும் -  டிராய் அதிரடி உத்தரவு!


ஜியோவின் ரூ 399 திட்டம்: இந்த திட்டத்தில் நீங்கள் ஒரு மாதத்திற்கு 75 ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் காலிங் மற்றும் எந்த நெட்வொர்க்கிலும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் வசதிகளையும் பெறுவீர்கள். இந்த ரீசார்ஜ் திட்டத்தில் அமேசான் பிரைம் வீடியோ, ஹாட்ஸ்டார் மற்றும் நெட்ஃபிக்ஸ் ஆகியவற்றுடன் ஜியோ கிளவுட், ஜியோ சினிமா மற்றும் ஜியோ டிவி போன்ற அனைத்து ஜியோ பயன்பாடுகளுக்கான சந்தாவையும் பெறுவீர்கள்.


இந்த ஏர்டெல் (Airtel Recharge Plan) குடும்பத் திட்டமானது மாதத்திற்கு 40ஜிபி டேட்டா, 200ஜிபி வரை ரோல்ஓவர் டேட்டா, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் எந்த நெட்வொர்க்குக்கும் அன்லிமிடெட் காலிங் போன்ற பலன்களுடன் வருகிறது. இந்த திட்டத்தில் வின்க் மியூசிக், ஷா அகாடமி, ஏர்டெல் எக்ஸ்-ஸ்ட்ரீம் ஆப்ஸின் பிரீமியம் பதிப்பு மற்றும் ஜக்கர்நாட் புத்தகங்களுக்கான ஒரு வருட சந்தாவையும் பெறுவீர்கள். இந்த திட்டத்தில் ஒரு சிம் மட்டுமே வழங்கப்படும் மற்றும் அதன் விலை ரூ.399 ஆகும்.


Vi இன் ரூ.399 திட்டம்: நிறுவனத்தின் (Vodafone Idea) இந்த ரூ.399 திட்டத்தில், ஒரு மாதத்திற்கு 40ஜிபி டேட்டா, 200ஜிபி வரையிலான ரோல்ஓவர் டேட்டா, எந்த நெட்வொர்க்கிலும் அன்லிமிடெட் காலிங் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் போன்ற பலன்களைப் பெறுவீர்கள். கூடுதலாக, நீங்கள் Vi Movies & TV பயன்பாட்டிற்கான அணுகலைப் பெறுவீர்கள்.


Vi இன் ரூ 699 திட்டம்: Vi இன் இந்த குடும்பத் திட்டம் இரண்டு இணைப்புகளை வழங்குகிறது. இந்தத் திட்டத்தில், உங்களுக்கு மொத்தம் 80ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது, இது முதன்மை மற்றும் இரண்டாம் நிலை பயனர்களுக்கு இடையே பாதி மற்றும் பாதியாக பிரிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, நீங்கள் மாதத்திற்கு 300 SMS மற்றும் Vi Movies & TV பயன்பாட்டிற்கான அணுகலைப் பெறுவீர்கள்.


LSO READ | Jio அசத்தல்; ரூ. 150-க்குள் கிடைக்கும் அட்டகாசமான ரீசார்ஜ் திட்டம்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR