மோட்ரோலா நிறுவனம் மோட்ரோலா 5ஜி 2022 மாடல் ஸ்மார்ட்போனை சந்தையில் விரைவில் சந்தைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆஸ்டின் என்ற புதிய மிட்ரேஞ் ஸ்மார்ட்போனை அந்த நிறுவனம் உருவாக்கி வருதாக தகவல் வெளியானது. இதுகுறித்த புதிய அம்சங்கள் தொடர்பான தகவல்கள் கூடுதலாக கசிந்துள்ளன.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மோட்டோரோலா 5ஜி (2022)


மோட்டோரோலா மோட்டோ ஜி 5ஜி (2022) பெரிய டிஸ்ப்ளே கொண்டிருக்கும். XT2213 என்ற மாடல் எண்ணுடன் வர உள்ளது. இப்போது லீக்காகியிருக்கும் தகவலின்படி, 165.4 x 75.8 x 9.3 மிமீ அளவைக் கொண்டுள்ளது. 6.6 இன்ச் டிஸ்ப்ளே பெற்றிருக்கும்.


மேலும் படிக்க | BSNL இன் பிரம்மாண்டமான சலுகை, முழு விவரம் இதோ


மோட்டோ ஜி 5ஜி (2022) கேமரா


போனின் பின்புறம் 50 மெகாபிக்சல் டிரிபிள் கேமரா யூனிட் மற்றும் நிறுவனத்தின் லோகோ உள்ளது. ஒரு மைக்ரோஃபோன் செட் இருக்கும். வலது பக்கத்தில் ஒரு வால்யூம் ராக்கர் மற்றும் ஒரு பவர் கீ உள்ளது, இது கைரேகை ஸ்கேனருடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. Moto G 5G (2022) இன் அடிப்பகுதியில், 3.5mm ஹெட்ஃபோன் ஜாக், மைக்ரோஃபோன், USB-C போர்ட் மற்றும் ஸ்பீக்கர் கிரில் ஆகியவை உள்ளன. மொபைலின் இடது பக்கத்தில் சிம் ஸ்லாட் உள்ளது.


மேலும் படிக்க | அட்டகாசமான Poco 5G போன் வெறும் ரூ. 1249: அசத்தும் பிளிப்கார்ட்


Moto G 5G (2022) டிஸ்பிளே


Moto G 5G (2022) பற்றி தகவல்களை வெளியிட்டுள்ள நில்ஸ் அஹ்ரென்ஸ்மியர், ஸ்மார்ட்போன் 6.6-இன்ச் டிஸ்ப்ளே HD+ தெளிவுத்திறனுடன் இருக்கும். இது MediaTek சிப் மூலம் இயக்கப்படும். 4GB RAM உடன் வரும். போனின் பின்புறம் 50 மெகாபிக்சல் (S5KN1SQ03) முதன்மை கேமரா, 2 மெகாபிக்சல் மேக்ரோ ஸ்னாப்பர் மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் ஹெல்பர் (GC02M1) ஆகியவற்றைக் கொண்டிருக்கலாம். செல்ஃபிக்களுக்கு, இது 13 மெகாபிக்சல் (Hi-1336) கேமரா இருக்க வாய்ப்புள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR