இருசக்கர வாகனத் துறையிலும் ஜியோ! ஜியோவின் டிஜிட்டல் கிளஸ்டர் ஸ்மார்ட் மாட்யூல்!
Jio Collaboration With MediaTek : மீடியா டெக் உடன் இணைந்து பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்களுக்கான `மேட் இன் இந்தியா` ஸ்மார்ட் டிஜிட்டல் கிளஸ்டர் மற்றும் ஸ்மார்ட் மாட்யூலை அறிமுகப்படுத்தியுள்ளது ஜியோ...
ஆட்டோமொபைல் துறையின் மேம்பாடு, உலகமே கிராமமானதற்கு முக்கியமான காரணம் என்று சொல்வதுண்டு. அதிலும், இந்தத்துறையில் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் ஆய்வுகள், கண்டுபிடிப்புகளும், புத்தாக்கங்களும் மனித வாழ்க்கையை மேலும் சுலபமாக்குகிறது. தற்போது வாகனத்துறையில் மின்சார வாகனங்கள் தொடர்பாக புத்தாக்கங்கள் அதிக அளவில் இருக்கிறது. தொழில்நுட்ப ஜாம்பவானான ரிலையன்ஸ் ஜியோ தற்போது பைக் வைத்திருப்பவர்களுக்கு ஒரு ஆடி பரிசை வழங்கியுள்ளது.
முகேஷ் அம்பானியின் ஜியோ குழுமத்தின் நிறுவனமான ’ஜியோ திங்ஸ் லிமிடெட்’ (JioThings Limited) பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்களுக்கான 'மேட் இன் இந்தியா' ஸ்மார்ட் டிஜிட்டல் கிளஸ்டர் மற்றும் ஸ்மார்ட் மாட்யூலை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவின் முக்கிய சிப் தயாரிப்பாளரான மீடியா டெக் மற்றும் ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் லிமிடெட்டின் துணை நிறுவனமான ஜியோ திங்ஸ் லிமிடெட் இணைந்து இந்த தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியிருக்கின்றன.
பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்களுக்கான 'மேட் இன் இந்தியா' ஸ்மார்ட் டிஜிட்டல் கிளஸ்டர் மற்றும் ஸ்மார்ட் மாட்யூல் வாகன ஓட்டிகளுக்கு மிகவும் வசதியானதாக இருக்கும். இந்த இரண்டு நிறுவனங்களும் இணைந்து பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர் துறையில் தங்கள் பிடியை வலுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.
மீடியா டெக் மற்றும் ஜியோ திங்ஸ் லிமிடெட் இணைந்து மின்சார வாகனப் பிரிவில் புதிய தொடக்கத்தை உருவாக்க விரும்புகின்றன.
ஸ்மார்ட் டிஜிட்டல் கிளஸ்டர் & ஸ்மார்ட் மாட்யூல்
இந்த புதிய தொழில்நுட்பமானது, நிகழ்நேர தரவு பகுப்பாய்வு, தனிப்பயனாக்கப்பட்ட இடைமுகம் மற்றும் குரல் கட்டுப்பாடு ஆகியவற்றைக் கொண்டுள்ளது. வாகனத்தின் கட்டுப்பாட்டு அமைப்பு, இணையத்துடன் இணைக்கப்பட்ட சார்ஜிங் நிலையங்கள் மற்றும் மின்சார வாகனங்களுக்காக வடிவமைக்கப்பட்ட ஸ்மார்ட் பேட்டரி மேலாண்மை அமைப்புகளை இந்த புதிய தொழில்நுட்பம் ஒருங்கிணைக்கும்.
Jio Automotive App Suite வசதியானது, Jio Voice Assistant, JioSaavn, JioPages மற்றும் JioXploR போன்ற சேவைகளையும் கொண்டுள்ளது, இது பைக் அல்லது ஸ்கூட்டர் ஓட்டும் வாகனஓட்டிகளுக்கு சிறந்த அனுபவத்தை வழங்கும்.
இரு சக்கர வாகன ஸ்மார்ட் டிஜிட்டல் கிளஸ்டரில் IoT மற்றும் ஆட்டோமோட்டிவ் ஆகிய இரண்டிலும் புதுமைக்கான உறுதிப்பாட்டை பிரதிபலிக்கும் இந்த அம்சம், கிளஸ்டர் 2-வீலர் ஸ்மார்ட் டேஷ்போர்டுகளின் எதிர்காலத்தை மேலும் மேம்படுத்தும். துரிதமாக வளர்ந்து வரும் 2-வீலர் எலக்ட்ரிக் வாகன (Two wheeler electric vehicle) சந்தையை ஆதரிக்கிறது.
MediaTek இன் சமீபத்திய தொழில்நுட்பங்கள் மற்றும் இயக்க முறைமை மட்டத்தில் முக்கிய மென்பொருள் அம்சங்களுக்கான ஆரம்ப அணுகலை வழங்கும் இந்த அம்சம் எதிர்காலத்தில் மேலும் மேம்படுத்தப்படும். இந்தியாவில் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்படும் இரு சக்கர வாகன பொருட்களுக்கான சந்தையில் ஜியோதிங்ஸுடன் மீடியா டெக் இணைந்து செயல்படுவது, மேட் இன் இந்தியா திட்டத்திற்கான முக்கியமான முன்முயற்சியாகும்.
மீடியா டெக்கின் மேம்பட்ட சிப்செட் தொழில்நுட்பம் மற்றும் ஜியோதிங்ஸின் தொலைநோக்கு டிஜிட்டல் தீர்வுகளைப் பயன்படுத்தி அடுத்த தலைமுறை ஸ்மார்ட் கிளஸ்டரை வழங்க உதவும் இந்த நுட்பம், சர்வதேச அளவில் மாறி வரும் இரு சக்கர வாகன சந்தையின் தேவைகளைப் பூர்த்தி செய்கிறது.
மேலும் படிக்க | பைக்கையே காராக மாற்றி சாலையில் ஓட்டும் விஞ்ஞானி! மாத்தி யோசி மாமு மோமெண்ட்ஸ்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ