Netflix Mobile Plan: பெரும்பாலான மக்கள் ஓடிடி தளங்களில், குறிப்பாக நெட்பிளிக்ஸில் திரைப்படங்களைப் பார்க்க விரும்புகிறார்கள். நெட்பிளிக்ஸ் பயனர்களுக்கு சிறந்த தரமான உள்ளடக்கத்தை வழங்குவதோடு மட்டுமல்லாமல், பயனர்கள் தங்களுக்கு பிடித்தமான நிகழ்ச்சிகளைத் தேர்வுசெய்யக்கூடிய நல்ல வகைகளையும் வழங்குகிறது. இதில், பயனர்கள் தங்களுக்குப் பிடித்த மொழியின் திரைப்படங்கள் மற்றும் இணையத் தொடர்களைப் பார்க்கலாம். இது தவிர பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் இதில் கிடைக்கின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நெட்பிளிக்சின் சந்தா விலை அதிகமாக உள்ளதாக சிலர் கருதினாலும், அந்த தொகையை தாண்டிய பல பலன்கள் கிடைப்பதை பயனர்கள் புரிந்துகொள்கிறார்கள். உங்களுக்கும் இதன் சந்தா அதிகமாக இருப்பதாக தவறான எண்ணம் இருந்தால், இந்த பதிவு நீங்கள் சில விஷயங்களை புரிந்துகொள்ள உதவியாக இருக்கும். 


பெரும்பாலான நெட்பிளிக்ஸ் பயனர்களால் விரும்பப்படும் ஒரு நெட்பிளிக்ஸ் திட்டத்தைப் பற்றி இந்த பதிவில் காணலாம். மேலும் இதன் விலை உங்களால் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவுக்கு குறைவு. இந்த திட்டத்தின் விலை என்ன? இதன் சிறப்பம்சங்கள் என்ன? இவை அனைத்தையும் இங்கே காணலாம். 


மேலும் படிக்க | சாட்ஜிபிடி-க்கு போட்டியாக எலான் மஸ்க் உருவாக்கும் புதிய ஏஐ - நாளுக்கு நாள் எகிறும் போட்டி 


Netflix: அசத்தலான ரீசார்ஜ் திட்டம்:


இந்த நெட்பிளிக்ஸ் திட்டத்தின் விலை வெறும் 149 ரூபாய்தான். இதே ரீசார்ஜ் திட்டம் சில மாதங்களுக்கு முன்பு வரை ரூ.199 ஆக இருந்தது. ஆனால் இந்த திட்டம் அனைவரின் பட்ஜெட்டிலும் எளிதில் பொருந்தக்கூடிய வகையில் அதிக வாடிக்கையாளர்களை சென்றடைய நிறுவனம் இந்த நடவடிக்கையை எடுத்து, விலையை குறைத்துள்ளது. இந்த ரீசார்ஜ் திட்டத்தின் விலை குறைவாக உள்ளதால், இதில் கிடைக்கும் அம்சங்களும் குறைவாக இருக்கும் என்று இல்லை. இதன் விலை குறைவாக இருந்தாலும், இதில் பயனர்கள் பல நன்மைகளைப் பெறுவார்கள்.


நெட்பிளிக்சின் இந்த ரீசார்ஜ் திட்டத்தில், பயனர்களின் விருப்பத்திற்கு ஏற்ப பல அம்சங்கள் கிடைக்கின்றன. இந்த அம்சங்களில் ஒரு மாதம் செல்லுபடி காலம் (வேலிடிட்டி) அடங்கும். இதனுடன், நெட்பிளிக்ஸின் இந்த ரீசார்ஜ் திட்டத்தில், வாடிக்கையாளர்கள் இரண்டு ஸ்க்ரீன்களைப் பெறுகிறார்கள். இதில் ஒரு ஸ்க்ரீன் டேப்லெட்டுக்கானது, மற்றொன்று தொலைபேசிக்கானது.


இரண்டு பயனர்கள் இந்த இரண்டு ஸ்க்ரீன்கள் மூலம் ஒரே நேரத்தில் நெட்பிளிக்சில் நிகழ்ச்சிகளை கண்டு களிக்கலாம். இதுமட்டுமின்றி இந்த ரீசார்ஜ் திட்டத்தில் நல்ல தரமான காட்சி அனுபவம் (விஷுவல் எக்ஸ்பீரியன்ஸ்) கிடைக்கும். இதனுடன் இந்த ரீசார்ஜ் திட்டத்தில் 480 பிக்சல் ரெசல்யூஷனை காணலாம். ஒட்டுமொத்தமாக, இந்த மலிவான திட்டம் மூலம் பயனர்கள் அதிக பணம் செலவழிக்காமல் உயர்மட்ட அனுபவத்தைப் பெறுகிறார்கள்.


மேலும் படிக்க | வெறும் ரூ.399க்கு ரீசார்ஜ் திட்டம், இலவச OTT..ஜியோ அசத்தல் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ