ஜியோ, ஏர்டெல் யூஸ் பண்றீங்களா? Netflix, Prime மற்றும் Hotstar இலவசமாக பார்க்கலாம்!

ஜியோ மற்றும் ஏர்டெல் போன்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வாடிக்கைகையாளர்களுக்கு ரீசார்ஜ் திட்டத்தில் நெட்ப்ளிக்ஸ், பிரைம் வீடியோ மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் போன்ற ஓடிடி தளத்திற்கு இலவச சந்தாவை வழங்குகிறது.  

Written by - RK Spark | Last Updated : Feb 25, 2023, 10:20 AM IST
  • ஏர்டெல் மற்றும் ஜியோ போஸ்ட்பெய்டு திட்டங்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது.
  • ஏர்டெல் ரூ.1499 மற்றும் ரூ.1199 விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்குகிறது.
  • ஜியோ ரூ.799 மற்றும் ரூ.999 விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்குகிறது.
ஜியோ, ஏர்டெல் யூஸ் பண்றீங்களா? Netflix, Prime மற்றும் Hotstar இலவசமாக பார்க்கலாம்! title=

நாட்டின் மிகப்பெரிய மற்றும் மிகவும் பிரபலமான தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஏர்டெல் மற்றும் ஜியோ ஆகியவை தனது வாடிக்கையாளர்களுக்கு இரண்டு புதிய ரீசார்ஜ் திட்டங்களைக் கொண்டு வந்துள்ளது, இந்த இரண்டு ரீசார்ஜ் திட்டங்களும் ஒரு வருட காலத்திற்கு பிரைம் வீடியோக்கள், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மற்றும் நெட்ப்ளிக்ஸ் போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட ஓடிடி இயங்குதள நன்மைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது.  இந்த தொலைதொடர்பு நிறுவனங்கள் தங்களது ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் ரீசார்ஜ் திட்டங்களின் விலைகளை ஏற்றியுள்ளது.  அதேபோல நெட்ப்ளிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் போன்ற பிரபலமான ஓடிடி தளங்களும் அதன் சந்தா விலையை உயர்த்தி இருக்கிறது.  தற்போது ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய இரண்டு தொலைத்தொடர்பு நிறுவனங்களும் அதன் வாடிக்கையாளர்களுக்கு எந்தவிதமான ஓடிடி நன்மைகளையும், வேறு சலுகைகளையும் வழங்குகிறது என்று பார்ப்போம்.

மேலும் படிக்க | சாட்ஜிபிடி -ஐ வாட்ஸ்அப் உடன் இணைப்பது எப்படி? இதோ ஈஸி வழி...

ஏர்டெல் ரீசார்ஜ் திட்டம்:

ஏர்டெல் தனது வாடிக்கையாளர்களுக்கு ரூ.1499 மதிப்புள்ள போஸ்ட்பெய்டு திட்டத்தினை வழங்குகிறது.  இந்த ரீசார்ஜ் திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு மொத்தமாக 200 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.  மேலும் இதில் நீங்கள் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் வரை இலவசமாக செய்து கொள்ளலாம் மற்றும் இதில் உங்களுக்கு அன்லிமிடெட் அழைப்புகள் வழங்கப்படுகிறது.  இதுதவிர இந்த போஸ்ட்பெய்டு திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு அமேசான் ப்ரைம் வீடியோ, நெட்ப்ளிக்ஸ் மற்றும் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஆகியவற்றுக்கான இலவச சந்தாவும் வழங்கப்படுகிறது.  அடுத்ததாக ஏர்டெல் தனது வாடிக்கையாளர்களுக்கு ரூ.1199 மதிப்புள்ள போஸ்ட்பெய்டு திட்டத்தினை வழங்குகிறது.  இதில் உங்களுக்கு 150 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் நன்மைகளும் வழங்கப்படுகிறது.  மேலும் நெட்ப்ளிக்ஸ், அமேசான் ப்ரைம் வீடியோ மற்றும் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் போன்றவற்றிற்கான இலவச சந்தாவையும் வழங்குகிறது.

ஜியோ ரீசார்ஜ் திட்டம்:

ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு ரூ.799 மதிப்புள்ள போஸ்ட்பெய்டு திட்டத்தினை வழங்குகிறது.  இந்த திட்டத்தினை பெறுவதன் மூலம் உங்களுக்கு 150 ஜிபி டேட்டா கிடைக்கிறது மற்றும் இந்த திட்டத்தில் நீங்கள் கூடுதலாக இரண்டு நபர்களை சேர்க்கலாம்.  இது உங்களுக்கு அன்லிமிடெட் அழைப்புகள் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் நன்மைகளை வழங்குகிறது.  மேலும் இது உங்களுக்கு அமேசான் ப்ரைம் வீடியோ மற்றும் நெட்ப்ளிக்ஸ் ஆகியவற்றுக்கான ஒரு வருட இலவச சந்தாவை வழங்குகிறது.  அடுத்ததாக ஜியோ ரூ.999 மதிப்புள்ள போஸ்ட்பெய்டு திட்டத்தினை வழங்குகிறது.  இதில் அன்லிமிடெட் அழைப்புகள், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ், 200 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது மற்றும் இதில் நீங்கள் 3 குடும்ப உறுப்பினர்களை சேர்க்கலாம்.  மேலும் இந்த திட்டத்தில் நெட்ப்ளிக்ஸ், அமேசான் பிரைம் ஆகியவற்றுக்கான இலவச சந்தா வழங்கப்படுகிறது.

மேலும் படிக்க | ChatGPT-க்கு தடைபோட்ட சீனா! அமெரிக்கா மீது குற்றச்சாட்டு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News