புதிய மாருதி ஸ்விஃப்ட் மற்றும் டாடா அல்ட்ராஸ் ஒப்பீடு: புதிய மாருதி சுசுகி ஸ்விஃப்ட் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், அதற்கு மார்க்கெட்டில் போட்டியாக இருக்கும் ஒரு கார் என்றால் அது டாடா அல்ட்ராஸ் தான். இன்னும் சில மாடல்கள் இரண்டுக்கும் போட்டியாக இருந்தாலும், இந்த இரண்டு கார்களுக்கு இடையிலான சிறப்பம்சங்கள், விலை உள்ளிட்ட வித்தியாசங்களை தெரிந்து கொள்வோம். இந்தியாவைப் பொறுத்தவரையில் ஹேட்ச்பேக் பிரிவு கார்கள் அதன் ஈர்ப்பை இழந்து கொண்டிருந்தாலும், ஸ்விஃப்ட் கார்களுக்கான மவுசு இன்னும் குறையவில்லை. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

புதிய மாருதி ஸ்விஃப்ட் அம்சங்கள்


புதிய மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரில் 15-இன்ச் அலாய் வீல்கள், எல்இடி விளக்குகள் (புரொஜெக்டர் ஹெட்லேம்ப்களுடன்), புதிய honeycomb கிரில் உள்ளது. இது மொத்தம் 9 வண்ணங்களில் கிடைக்கிறது. ஸ்விஃப்ட் கேபினில் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட டேஷ்போர்டு மற்றும் ஏர்கான் வென்ட்கள் உள்ளன, ஆனால் மிகப்பெரிய மாற்றம் என்றால் புதிய floating இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் (9-இன்ச் டிஸ்ப்ளே) தான். இது வயர்லெஸ் ஸ்மார்ட்போன் இணைப்பு, நேவிகேஷன் மற்றும் கனெக்டேட் கார் தொழில்நுட்பம் இருக்கிறது.


மேலும் படிக்க | Tata முதல் Mahindra வரை: அதிக பவருடன் வரும் சக்திவாய்ந்த 5 கார்கள்...!


வயர்லெஸ் போன் சார்ஜரும் உள்ளது. பாதுகாப்பைப் பொறுத்தவரை, 2024 ஸ்விஃப்ட்டில் முதல் முறையாக, ஆறு ஏர்பேக்குகள் ஸ்டாண்டர்டாக வழங்கப்பட்டுள்ளன, மேலும் ABS உடன் EBD, ISOFIX இருக்கை ஆங்கர் பாயிண்ட்ஸ், நிலைத்தன்மை கட்டுப்பாடு, ரிவர்ஸ் கேமரா, ஹில் ஹோல்ட் அசிஸ்ட், பார்க்கிங் சென்சார் போன்ற அம்சங்களும் உள்ளன. 


டாடா அல்ட்ராஸ் அம்சங்கள்


இப்போது நாம் Tata Altroz ​​பற்றி பேசினால், இந்த ஹேட்ச்பேக்கில் புரொஜெக்டர் ஹெட்லேம்ப்கள், LED DRLகள் மற்றும் 16 இன்ச் அலாய் வீல்கள் உள்ளன, இது ஒரு ஸ்போர்ட்டி தோற்றத்தை அளிக்கிறது. உண்மையில், Altroz ​​Maruti Suzuki Baleno உடன் போட்டியிடுகிறது. எனவே, இது ஸ்விஃப்ட்டை விட சற்றே பெரியதாகவும், ஸ்போர்டியர் டிசைனிலும் உள்ளது.


Altroz ​​டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், 7-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், கனெக்டேட் கார் தொழில்நுட்பம், ஸ்மார்ட்போன் கனெக்ஷன், க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் வாய்ஸ் ஆக்டிவேஷன் உடன் எலக்டிரிக் சன்ரூஃப் ஆகியவையும் இருக்கிறது. பாதுகாப்பைப் பொறுத்தவரை, Altroz ​​GNCAP இலிருந்து 5 ஸ்டார் மதிப்பீட்டைப் பெற்றுள்ளது.


என்ஜின்


ஸ்விஃப்ட் புதிய 1.2-லிட்டர் 3-சிலிண்டர் பெட்ரோல் எஞ்சினைக் கொண்டுள்ளது, இது 82PS ஆற்றலையும் 112NM முறுக்குவிசையையும் உருவாக்குகிறது. இதில் 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் AMT கியர்பாக்ஸ் ஆப்ஷன் உள்ளது. இந்த கார் கைடின்படி மைலேஜ் லிட்டருக்கு 24.8 கிமீ ஆகும்.அதே சமயம் ஏஎம்டியின் மைலேஜ் லிட்டருக்கு 25.75 கிமீ கிடைக்கும்.


Altroz ​​மூன்று இன்ஜின் விருப்பங்களுடன் வருகிறது - 1.2-லிட்டர் NA (87bhp, 115Nm), 1.2-லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் (108bhp, 140Nm) மற்றும் 1.5-லிட்டர் 4-சிலிண்டர் டீசல் (88.77ps, 200Nm). CNG இன் விருப்பமும் உள்ளது, இது கொஞ்ச நாட்களுக்குப் பிறகு ஸ்விஃப்ட்டிலும் கிடைக்கலாம்.


விலை


ஸ்விஃப்ட்டின் விலை ரூ.6.49 லட்சம் முதல் ரூ.9.65 லட்சம் வரை (அறிமுகம், எக்ஸ்-ஷோரூம் பான்-இந்தியா). அதேசமயம், அல்ட்ராஸின் விலை ரூ.6.65 லட்சம் முதல் ரூ.10.80 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை இருக்கும்.


மேலும் படிக்க | விற்பனையில் கெத்து காட்டும் Hero... எந்த மாடல் பைக் அதிகம் விற்றுள்ளது தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ