ஹீரோ (Hero) நிறுவனத்தின் இருச்சக்கர வாகனங்களில் எந்த மாடல் பைக்குகள் கடந்த ஏப்ரல் மாதத்தில் அதிகமாக விற்பனயைாகி உள்ளது என்பது குறித்து இதில் காணலாம்.
ஹீரோ (Hero) நிறுவனம் இந்திய இருச்சக்கர வாகனத் தயாரிப்பில் முன்னணியில் உள்ள நிறுவனமாகும்.
இந்தாண்டு ஏப்ரலில் மட்டும் அந்நிறுவனம் மொத்தம் 5 லட்சத்து 12 ஆயிரத்து 124 பைக்குகளை விற்பனை செய்துள்ளது. கடந்தாண்டு ஏப்ரல் மாதம் 3 லட்சத்து 86 ஆயிரத்து 173 யூனிட்களை மட்டுமே விற்பனை செய்தது. சுமார் 1 லட்சத்து 25 ஆயிரத்து 951 பைக்குகளை இந்தாண்டு அதிகம் விற்பனை செய்துள்ளது.
7. Hero Pleasure: ஏப்ரல் 2024 - 11,820 யூனிட்கள்; ஏப்ரல் 2023 - 5,826 யூனிட்கள். 5,994 யூனிட்கள் அதிகம்
6. Hero Xtreme 125R: ஏப்ரல் 2024 - 12,532 யூனிட்கள். இந்த பைக் இந்தாண்டு பிப்ரவரி மாதம்தான் அறிமுகப்படுத்தப்பட்டது. மார்ச் மாதத்தில் 12,010 யூனிட்கள் விற்பனயானது.
5. Hero Destini 125: ஏப்ரல் 2024 - 12,596 யூனிட்கள்; ஏப்ரல் 2023 - 6,039 யூனிட்கள். 6,557 யூனிட்கள் அதிகம்
4. Hero Glamour: ஏப்ரல் 2024 - 18,747 யூனிட்கள்; ஏப்ரல் 2023 - 12,042 யூனிட்கள். 6,705 யூனிட்கள் அதிகம்
3. Hero Passion: ஏப்ரல் 2024 - 25,751 யூனிட்கள்; ஏப்ரல் 2023 - 3,620 யூனிட்கள். 22,131 யூனிட்கள் அதிகம்
2. Hero HF Deluxe: ஏப்ரல் 2024 - 97,048 யூனிட்கள்; ஏப்ரல் 2023 - 78,700 யூனிட்கள். 18,348 யூனிட்கள் அதிகம்
1. Hero Splendor: ஏப்ரல் 2024 - 3,20,959 யூனிட்கள்; ஏப்ரல் 2023 - 2,65,225 யூனிட்கள். 55,734 யூனிட்கள் அதிகம்