New SUV Launch in India: நீங்கள் புதிய SUV வாங்கும் எண்ணத்தில் உள்ளீர்களா? அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்கு உதவியாக இருக்கும். புதிய எஸ்யுவி வாங்க எண்ணம் கொண்டுள்ளவர்கள் சிறிது நேரம் காத்திருக்கலாம். ஏனெனில் மிக விரைவில் 5 புதிய SUV மாடல்கள் இந்திய சந்தையில் அறிமுகம் ஆகவுள்ளன. இந்த மாடல்களின் அறிமுகத்துக்காக நீங்கள் காத்திருந்தால் உங்களுக்கு தேர்வு செய்ய இன்னும் அதிக, நேர்த்தியான கார்கள் கிடைக்கும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த புதிய மாடல்கள் அனைத்தும் இந்த ஆண்டு பண்டிகை காலத்துக்கு முன்னதாகவே இந்திய சாலைகளில் காணப்படும். மாருதி சுசுகி ஜிம்னி முதல் ஹூண்டாய் எக்ஸ்டோர் வரை, இந்த அனைத்து எஸ்யூவி மாடல்களின் அறிமுக தேதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. மஹிந்திரா அதன் தார் 5-டோர் வகையுடன் ஜிம்னியை எதிர்கொள்ள தயாராகி வருகிறது. டாடா மோட்டார்ஸ் தனது போர்ட்ஃபோலியோவை பன்ச் சிஎன்ஜி எஸ்யூவி மூலம் விரிவுபடுத்த ஆயத்தமாகி வருகிறது. வாடிக்கையாளர்கள் இந்த 5 புதிய SUV மாடல்களை கவனமாக ஆராய்ந்து, அவரவர் தேவைகள் மற்றும் பட்ஜெட்டுக்கு ஏற்ப சிறந்த SUV -ஐத் தேர்வு செய்யலாம். 


Maruti Suzuki Jimny


மாருதி சுசுகி தனது SUV ஜிம்னியை அறிமுகப்படுத்த தயாராக உள்ளது. இது மஹிந்திரா தாருக்கு போட்டியாக இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் களமிறங்கும். 5 கதவுகள் கொண்ட இந்த ஆஃப்-ரோடு எஸ்யூவி முதலில் ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டது. ஜிம்னிக்கான முன்பதிவுகள் ஜனவரியில் தொடங்கியுள்ளன. டோக்கன் தொகையாக ரூ. 25,000 செலுத்தி எளிதாக இதை முன்பதிவு செய்யலாம். 4X4 உடன் வரும் நிறுவனத்தின் முதல் கார் இதுவாக இருக்கும் என அறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Hyundai Exter 


ஹுண்டாய் மோட்டார் தனது புதிய எஸ்யுவி எக்ஸ்டரின் தோற்றம் பற்றிய விவரங்களை வெளியிட்டுள்ளது. இது டாடா பஞ்ச், நிசான் மேக்னைட் போன்ற சிறிய எஸ்யுவி -களுடன் போட்டியிடும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஹூண்டாய் கார் வரிசையின் ஐந்தாவது எஸ்யூவி ஆகும் எக்ஸ்டர். ஹூண்டாய் எக்ஸ்டர் எஸ்யூவிக்கான முன்பதிவு ரூ.11,000 டோக்கன் தொகையுடன் துவங்கப்பட்டுள்ளது. எக்ஸ்டர் எஸ்யூவி EX, S, SX, SX(O) மற்றும் SX(O) ஆகிய ஐந்து வகைகளில் கிடைக்கும்.


மேலும் படிக்க | வரும் மாதங்களில் இந்திய சந்தையை கலக்க வரவிருக்கும் கார்கள்


Honda Elevate


ஜூன் 6ஆம் தேதி ஹோண்டா எலிவேட் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சிறிய எஸ்யூவி, மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா மற்றும் டொயோட்டா அர்பன் குரூஸர் ஹைரைடருடன் இந்திய எஸ்யுவி சந்தையில் போட்டியிடும். புதிய தலைமுறை சிட்டி செடானின் பிளாட்ஃபார்ம் அடிப்படையில் எலிவேட் இருக்கும். ADAS அம்சத்துடன், இந்த காம்பாக்ட் எஸ்யூவியின் டாப் வேரியண்ட் சிட்டி செடானில் இருந்து முதல்முறையாக பார்க்கப்படும்.


Mahindra Thar 5-door


மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம், தார் எஸ்யூவியின் 5-டோர் மாறுபாட்டை விரைவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. 3-டோர் தார், ஸ்கார்பியோ-N மற்றும் XUV700 ஆகியவற்றில் காணப்படும் அதே 2.0-லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மற்றும் 2.2-லிட்டர் டீசல் எஞ்சினுடன் 5-டோர் தார் வரும். இந்த ஆண்டு பண்டிகை காலத்தை ஒட்டி இந்த எஸ்யூவி அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Tata Punch CNG


டாடா மோட்டார்ஸ் தனது நான்காவது சிஎன்ஜி காராக டாடா பஞ்சை கொண்டு வரவுள்ளது. இந்த கார் iCNG பேட்ஜிங்குடன் வரும். இது ஆட்டோ எக்ஸ்போவில் முதல் முறையாக காட்சிப்படுத்தப்பட்டது. இது டாடா மோட்டார்ஸின் இரட்டை சிலிண்டர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. இதை Altroz ​​iCNG மாடலிலும் காணலாம். இந்த கார் இரண்டு சிறிய சிஎன்ஜி சிலிண்டர்களுடன் வரும். இது பூட் இடத்தை பராமரிக்க உதவுகிறது.


மேலும் படிக்க | Second Hand வாகனம் வாங்கும் போது இந்த தவறை மட்டும் செய்துவிடாதீர்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ