நோக்கியா 3210 புதிய மொபைல் இந்தியாவில் அறிமுகம்! யூடியூப் முதல் UPI வரை - விலை ரூ.3999
Nokia 3210 4G : கீபேட் மொபைலில் ஒரு காலத்தில் ஆதிக்கம் செலுத்திய நோக்கிய, இப்போது புதிதாக நோக்கியா 3210 மொபைல் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மொபையில் யுபிஐ பணப்பரிவர்த்தனை மற்றும் யூடியூப் செயலிகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.
நோக்கியா 3210 4ஜி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த 4ஜி மொபைல் என்பது புதிய ஃபீச்சர் போன். தற்போது லேட்டஸ்ட் அப்டேட்டுடன் இந்தியா வந்துள்ளது. அதேநேரத்தில் இது ஒரு கீபேட் ஃபோன். இருந்தாலும், UPI செயலிகளைக் கொண்டுள்ளது. இந்த போன் மூன்று வண்ண மாடல்களில் வருகிறது. இது பின்புறத்தில் ஒரு கேமராவைக் கொண்டுள்ளது, இது LED ஃபிளாஷ் லைட்டுடன் வருகிறது.
இந்த போன் அமேசான் இந்தியாவில் 3,999 ரூபாய்க்கு பட்டியலிடப்பட்டுள்ளது. அதைப் பற்றி விரிவாக அறிந்து கொள்வோம். நோக்கியா 3210 4ஜி இ-காமர்ஸ் தளங்களான Amazon India மற்றும் HMD eStore ஆகியவற்றில் விற்பனைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. இதன் விலை 3,999 ரூபாய். UPI சேவையும் இதில் உள்ளது, இதன் உதவியுடன் பயனர்கள் QR Code ஸ்கேன் செய்தும் பணம் செலுத்தலாம்.
மேலும் படிக்க | அடிக்கடி கார் வாஷிங் செய்கிறீர்களா? அப்போ இந்த செலவு நிச்சயம் செய்ய வேண்டியிருக்கும்
மொபைல் கிடைக்கும் கலர்கள்
Nokia 3210 4G இல் பல சமீபத்திய அம்சங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இது 4G ஆதரவு மற்றும் பின்புற பேனலில் கேமரா சென்சார் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த போன் Scuba Blue, Grunge Black மற்றும் Y2K Gold ஆகிய மூன்று வண்ண வகைகளில் வருகிறது. மேலும், நோக்கியா 3210 4ஜி சில முன் ஏற்றப்பட்ட செயலிகளுடன் வருகிறது. இதில் Youtube, YouTube Shorts, News மற்றும் Games போன்ற ஆப்ஸ் உள்ளது. இதில் கிளாசிக் கேம் பாம்பு விளையாட்டை நிறுவனம் சேர்த்துள்ளது.
நோக்கியா 3210 4ஜி விவரக்குறிப்புகள்
நோக்கியா 3210 4ஜி 2.4 இன்ச் QVGA டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இதில் UniSoC T107 செயலி உள்ளது. இந்த போனில் 64MP ரேம் உள்ளது. இந்த ஃபோன் S30+ மென்பொருளில் வேலை செய்கிறது. இதில் 128MB சேமிப்பு உள்ளது. மைக்ரோ எஸ்டி கார்டின் உதவியுடன், நீங்கள் 32 ஜிபி வரை கார்டைச் செருகலாம்.
நோக்கியா 3210 4ஜி கேமரா
Nokia 3210 4G ஆனது 2MP பின்புற கேமரா சென்சார் கொண்டது, இது LED ஃபிளாஷ் லைட்டுடன் வருகிறது. இது 1,450mAh நீக்க முடியாத பேட்டரியைக் கொண்டுள்ளது. ஒரு முழு சார்ஜில் 9.8 மணிநேர டாக்டைம் பேக்அப்பை தருவதாக நிறுவனம் கூறுகிறது. இந்த போன் 62 கிராம் எடை கொண்டது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ