டோக்கியோ:ஜப்பானிய பேராசிரியர் ஒருவர், நாக்கின் மூலம் உணவு சுவைகளை உருவாக்கும் திறன் கொண்ட ஒரு பிரத்யேகமான தொலைக்காட்சித் திரையை உருவாக்கியுள்ளார். பல்வேறு விதமான மின்னணு கண்டுபிடிப்புகளில் புதுவிதமான வசதிகள் புகுத்தப்பட்டு வருகிறது.  குறிப்பாக தொலைக்காட்சி பெட்டிகள் பல்வேறு விதமான அம்சங்களுடன் உருவாகி வருகிறது.  ஆரம்பத்தில் கருப்பு வெள்ளை நிறத்தில் படங்களை காண்பித்த தொலைக்காட்சிகள் தற்போது பல முன்னேற்றங்கள் அடைந்து வண்ணமயமான, கண்ணை கவரும் விதத்தில் தொலைக்காட்சி பெட்டிகள் சந்தைகளில் களமிறங்கியுள்ளன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ | Important Alert: இந்த 5 விஷயங்கள் டிசம்பர் 31-க்குள் முடித்து விடுங்கள்


அந்த வகையில் ஜப்பான் பேராசிரியர் ஒருவர் டிவியின் திரையை நாக்கின் மூலம்  உணவு சுவைகளை உணரும் வகையிலான ஒரு டிவி திரையை வடிவமைத்துள்ளார்.  டோக்கியோவில் உள்ள மெய்ஜி பல்கலைக்கழகத்தின் பேராசிரியராக ஹோமி மியாஷிதா என்பவர் இத்தகைய பிரத்யேகமான டீவியை வடிவமைத்துள்ளார்.  இந்த புதிய அம்சம் கொண்ட டிவியானது 'Taste the TV (TTTV) என்று அழைக்கப்படுகிறது.



அடிப்படை வேதியியலை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இந்த டிவியின் திரையில் 10 வகையான சுவை கொண்ட குப்பிகள் பயன்படுத்தப்படுகின்றன.  சுகாதாரமான முறையில் அந்த சுவை திரைகளில் தெளிக்கப்படுகிறது.  இதன் மூலம் வீட்டிலிருந்தே சமையல் நிகழ்ச்சிகளில் செய்யும் உணவுகளை ருசி பார்த்தும் கொள்ளலாம்.  


இதுகுறித்து பேராசிரியரான ஹோமி மியாஷிதா கூறுகையில், "மக்கள் வீட்டில் இருந்தபடியே உணவகத்தில் பல்வேறு விதமான சுவை கொண்ட உணவுகளை அருந்தும் அனுபவத்தை அளிக்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே இதை உருவாக்கினேன்" என்று கூறியுள்ளார்.  மேலும் இந்த டிவியின் திரையை உருவாக்க  100,000 யென் செலவானதாகவும் கூறியுள்ளார்.  இவர் கிட்டத்தட்ட 30 மாணவர்கள் கொண்ட குழுவை அமைத்து இதுபோன்ற பல அறிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


 



ALSO READ | ஜனவரியில் வருகிறது OnePlus 10 Pro! என்னென்ன சிறப்பம்சங்கள்?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR