Important Alert: இந்த 5 விஷயங்கள் டிசம்பர் 31-க்குள் முடித்து விடுங்கள்

இந்த பணிகள் அனைத்தையும் முடிக்க அவருக்கு டிசம்பர் 31 வரை மட்டுமே அவகாசம் உள்ளது. என்ன விஷயங்களைக் கவனிக்க வேண்டும் என்பதை அறிந்துக்கொள்ளுங்கள்.

Written by - Shiva Murugesan | Last Updated : Dec 23, 2021, 07:08 PM IST
Important Alert:  இந்த 5 விஷயங்கள் டிசம்பர் 31-க்குள் முடித்து விடுங்கள் title=

இன்னும் ஒரு வாரம் மட்டும் தான் இருக்கிறது. ஒருவர் ITR இ-ஃபைலிங் செய்ய வேண்டும் என்றால், Epf இல் இ-நாமினேஷன் (E-Nomination) தாக்கல் செய்ய வேண்டும் அல்லது கீழே உள்ள பட்டியலில் உள்ள விஷயங்களை டிசம்பர் 31-க்கு முன் முடித்திருக்க வேண்டும். இந்த பணிகள் அனைத்தையும் முடிக்க அவருக்கு டிசம்பர் 31 வரை மட்டுமே அவகாசம் உள்ளது. என்ன விஷயங்களைக் கவனிக்க வேண்டும் என்பதை அறிந்துக்கொள்ளுங்கள்.

வருமான வரி கணக்கு (Income Tax Return E-filing)
ஐடிஆர் தாக்கல் செய்பவர்களுக்கு டிசம்பர் 31 வரை அவகாசம் உள்ளது. ஒரு பக்கம் கொரோனா வைரஸ் ஊரடங்கு மற்றும் ஐடிஆர் போர்ட்டலில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக காலக்கெடுவை நீட்டித்துக்கொண்டே மத்திய அரசு வந்தது. தற்போது வரி செலுத்துவோர் சரியான நேரத்தில் ஐடிஆர் தாக்கல் செய்ய முடியும். அவர்களுக்கு இந்த மாதம் 31 வரை காலக்கெடு உள்ளது. 

வாழ்வுச் சான்றிதழை (Life Certificate)
நீங்களும் ஓய்வூதியத்தைத் தொடர்ந்து பயன் படுத்திக்கொள்ள நினைத்தால், உங்கள் வாழ்வுச் சான்றிதழை டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். நீங்கள் அப்படி செய்யவில்லை என்றால், உங்களுக்கு ஓய்வூதியம் வருவது நின்றுவிடும். அதாவது ஒவ்வொரு ஆண்டும், அத்தகைய ஓய்வூதியம் பெறுவோர் நவம்பர் 30 ஆம் தேதிக்குள் தங்கள் வாழ்வுச் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். ஆனால் தற்போது மத்திய அரசாங்கம் அதன் தேதியை நீட்டித்துள்ளது. வாழ்வுச் சான்றிதழைச் சமர்ப்பிப்பதற்கான காரணம் ஓய்வூதியம் பெறுபவர் உயிருடன் இருப்பதைக் குறிக்கிறது.

ALSO READ |  ஆதார்-வாக்காளர் அட்டை இணைப்பு; இந்த மகத்தான பலனை நீங்கள் பெறலாம்

டிமேட்- வர்த்தகக் கணக்கின் KYC
முன்னதாக டிமேட் மற்றும் டிரேடிங் கணக்குகளின் KYC-க்கான கடைசித் தேதியாக 2021 செப்டம்பர் 30 என SEBI அறிவித்தது ஆனால் அந்த காலக்கெடு டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்டது. அதாவது, KYC தொடர்பான வேலைகளை டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் செய்து முடிக்க வேண்டும். இதற்கு, KYC செய்து முடிக்க, பெயர், முகவரி, பான் அட்டை, உங்கள் மொபைல் எண், வயது, சரியான மின்னஞ்சல் ஐடி ஆகியவற்றைப் புதுப்பிக்க வேண்டும்.

UAN - Aadhaar இணைப்பு அவசியம்
இது தவிர, EPFO ​​சந்தாதாரர்கள் UAN எண்ணை ஆதாருடன் இணைப்பது கட்டாயமாகும். இதற்கான கடைசி நாள் டிசம்பர் 31-ம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது. சந்தாதாரர்கள் தங்கள் யுஏஎன் எண்ணை ஆதாருடன் இணைக்கவில்லை என்றால், டிசம்பர் 31க்குப் பிறகு அவர்கள் சிக்கலைச் சந்திக்க நேரிடும். மேலும், உங்கள் PF கணக்கையும் மூடலாம்.

வீட்டுக் கடனுக்கான குறைந்த வட்டி விகிதம்
பாங்க் ஆஃப் பரோடாவில் கணக்கு வைத்திருந்தால், டிசம்பர் 31 வரை மலிவான வீட்டுக் கடன்களைப் பெறலாம். பண்டிகைக் காலத்தில், BOB வீட்டுக் கடன் வட்டி விகிதத்தை 6.50 சதவீதமாகக் குறைத்துள்ளது. ஆனால் இந்தச் சலுகையை டிசம்பர் 31ஆம் தேதி வரை மட்டுமே பெற முடியும் என்பதை நினைவில் கொள்ளுக. 

ALSO READ |  EPFO Alert: டிசம்பர் 31க்குள் இந்த வேலையை முடித்தால் நஷ்டத்தை தவிர்க்கலாம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News