Ola Electric Scooter இந்த தேதியில் அறிமுகம் ஆகும்: விரைவில் துவங்கும் ஓலா உலா!!
ஓலா மின்சார ஸ்கூட்டருக்கான காத்திருப்பு முடிந்தது. இந்த ஸ்கூட்டர் அறிமுகமாகவுள்ள தேதியை நிறுவனம் அறிவித்துள்ளது.
Ola Electric Scooter Latest Update: ஓலா மின்சார ஸ்கூட்டருக்கான காத்திருப்பு முடிந்தது. இந்த ஸ்கூட்டர் அறிமுகமாகவுள்ள தேதியை நிறுவனம் அறிவித்துள்ளது. நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பவிஷ் அகர்வால் தனது ட்விட்டர் பதிவு மூலம் ஸ்கூட்டர் அறிமுகத்துக்கான தேதியை உறுதி செய்துள்ளார்.
ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவில் 15 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும்
ஓலா தலைமை நிர்வாக அதிகாரி பவிஷ் அகர்வால் தனது ட்வீட்டில், ’எங்கள் ஸ்கூட்டரை முன்பதிவு செய்தவர்களுக்கு நன்றி! ஆகஸ்ட் 15 ஆம் தேதி ஓலா ஸ்கூட்டர் அறிமுக விழாவை நடத்த திட்டமிட்டுள்ளேன். ஸ்கூட்டரின் முழு விவரக்குறிப்பு, விவரங்கள் மற்றும் கிடைக்கும் தேதிகள் அனைத்தும் விரைவில் பகிரப்படும்.’ என எழுதியுள்ளார்.
முன்பதிவு ஜூலை மாதம் தொடங்கியது
ஓலா (Ola) ஸ்கூட்டர்களுக்காக ஆவலுடன் காத்திருந்த மக்களுக்காக, நிறுவனம் ஜூலை மாதம் முன்பதிவை தொடங்கியது. முன்பதிவு தொடங்கி சில நாட்களிலேயே முன்பதிவுகளின் எண்ணிக்கை லட்சங்களை எட்டியது. இந்த ஸ்கூட்டரின் முன்பதிவு ஆன்லைனில் வெறும் 499 ரூபாய்க்கு தொடங்கியது. முன்பதிவு தொடங்கிய 24 மணி நேரத்தில், நிறுவனம் 1 லட்சத்திற்கும் அதிகமான முன்பதிவுகளைப் பெற்றது.
ALSO READ: Ola Electric Scooter: அதிகப்பட்சமாக எந்த வேகத்தில் செல்ல ஆசை; கருத்தை கேட்ட ஓலா
ஓலா ஸ்கூட்டர் வீட்டிலேயே டெலிவரி செய்யப்படும்
ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் வீடுகளில் நேரடியாக வழங்கப்படும். ஓலா எலக்ட்ரிக் அதன் Series-S ஸ்கூட்டரை 'டைரக்ட்-2 கன்ஸ்யூமர்’ வழியில் விநியோகிக்கும். ஓலா ஸ்கூட்டரை (Electric Scooter) வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கே சென்று டெலிவரி செய்ய ஓலா எலக்ட்ரிக் ஒரு தனி தளவாடத் துறையையும் அமைக்கும். இது வாடிக்கையாளர்களுக்கு ஸ்கூட்டரை வாங்குவது முதல் ஆவண பணிகள், கடன் மற்றும் பிற வசதிகளை வழங்கும்.
ஒருமுறை சார்ஜ் செய்தால் 150 கி.மீ வரை செல்லலாம்
இந்த ஸ்கூட்டர் 10 வண்ணங்களில் அறிமுகப்படுத்தப்படும். இந்த ஸ்கூட்டரின் டாப் ஸ்பீட் மணிக்கு 100 கி.மீ ஆக இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு வகையான முன்னணி அம்சங்களும் வழங்கப்படும். இது தவிர, ஒரு முறை சார்ஜ் செய்தால் இந்த ஸ்கூட்டரில் 150 கி.மீ செல்லலாம்.
இந்த ஸ்கூட்டர் தமிழ்நாட்டில் உள்ள தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும்
ஓலாவின் மின்சார ஸ்கூட்டர் (Ola Electric Scooter) தமிழ்நாட்டில் உள்ள ஓலா எலக்ட்ரிக் தொழிற்சாலையில் உற்பத்தி ஆகி வருகிறது. ஓலாவின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகத்தோடு, நாட்டில் மின்சார வாகனங்களுக்கான தேவை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மின்சார இரு சக்கர வாகனங்களுக்கு பல்வேறு மாநிலங்கள் வழங்கும் மானியங்களும் அதன் தேவையை அதிகரிக்க உதவும்.
யாருடன் போட்டி?
ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, இது TVS iQube, Bajaj Chetak Electric, Ather 450X, Okinawa scooters மற்றும் Hero electric ஆகியவற்றுடன் போட்டியிடும்.
ALSO READ: Ola Electric Scooter: அட்டகாசமான டீசர் ரிலீஸ், சாலைகளில் பறக்கும் ஓலா ஸ்கூட்டர்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR