Ola Electric Scooter-ஐ புக் செய்து ‘டன்’ என ட்வீட் செய்த கோடீஸ்வர வி.ஐ.பி. யார் தெரியுமா?

மின்சார ஸ்கூட்டர்களில் ஓலா மின்சார ஸ்கூட்டர் அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. ஜூலை 15 ஆம் தேதி இதற்கான முன்பதிவு தொடங்கியது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 24, 2021, 02:59 PM IST
  • வாகன ஓட்டிகளின் சமீபத்திய தேர்வாக மின்சார வாகனங்கள் மாறி வருகின்றன.
  • ஓலா மின்சார ஸ்கூட்டர் அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
  • ஸ்கூட்டருக்கு Series S என்று பெயரிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Ola Electric Scooter-ஐ புக் செய்து ‘டன்’ என ட்வீட் செய்த கோடீஸ்வர வி.ஐ.பி. யார் தெரியுமா? title=

வாகன ஓட்டிகளின் சமீபத்திய தேர்வாக மின்சார வாகனங்கள் மாறி வருகின்றன. பெட்ரோல் டீசல் விலையில் அதிக அளவு அதிகரிப்பு ஏற்பட்டு வரும் நிலையில், மின்சார வாகனங்கள் ஒரு நல்ல மாற்றாக இருந்து வருகின்றன.

மின்சார ஸ்கூட்டர்களில் ஓலா மின்சார ஸ்கூட்டர் அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. ஜூலை 15 ஆம் தேதி இதற்கான முன்பதிவு தொடங்கியது. முதல் நாலே ஒரு லட்சம் முன்பதிவுகளைப் பெற்று சாதனை படைத்தது ஓலா எலெக்ட்ரிக் (Ola Electric) நிறுவனம்.

சுவாரஸ்யமாக, மிக சிறிய வயதில் கோடீஸ்வரரான, இந்தியாவின் இளைய கோடீஸ்வரர்களில் ஒருவர் ஓலா ஸ்கூட்டரை வாங்க ஆர்வம் காட்டியுள்ளார். இதை தனது ஒரு ட்வீட்டின் மூலம் உறுதிபடுத்திய Paytm இன் நிறுவனர் விஜய் சேகர் சர்மா ஒரு ட்வீட்டில் அதை தெரிவித்து அதற்கு “டன்” என தலைப்பிட்டுள்ளார்.

ALSO READ: Ola Electric Scooter: 10 அழகிய வண்ணங்களில் கலக்க வருகின்றன ஓலா ஸ்கூட்டர்கள்!! 

வண்ணத்தை தேர்வு செய்ய 10 வண்ண விருப்பங்களைப் பகிர்ந்து கொண்டபோது ஷர்மாவின் ட்வீட் வந்தது. பவேஷ் அனைவரையும் ஓலா ஸ்கூட்டரை வாங்குமாறு கேட்டுக்கொண்டிருந்தார்.

ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்படும் போது வண்ணங்களின் சரியான பெயர்கள் அறிவிக்கப்படும் என்று நிறுவனம் முன்பு கூறியிருந்தது, நீலம் மற்றும் கருப்பு நிறங்களில் இருந்து மேட் மற்றும் பளபளப்பான ஷேட்களில் நிறத்தை தேர்ந்தெடுத்துக்கொள்ள வாடிக்கையாளர்களுக்கு ஆப்ஷன்கள் கிடைக்கும். மேலும், சிவப்பு, இளஞ்சிவப்பு, மஞ்சள், வெள்ளை மற்றும் வெள்ளி நிறங்களிலும் துடிப்பான ஷேட்களையும் வாடிக்கையாளர்கள் பெற முடியும் என நிறுவனம் கூறியுள்ளது.

ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் (Electric Scooter) முழு சார்ஜில் சுமார் 150 கி.மீ தூரத்தை கடக்கும் என்று கூறப்படுகிறது. 18 நிமிடங்கள் சார்ஜ் செய்யப்பட்டால், இந்த ஸ்கூட்டரால் 75 கி.மீ வரை செல்ல முடியும். எனினும், இந்த ஸ்கூட்டர் சாலைகளில் ஓடத் துவங்கியவுடன்தான் முழுமையான தகவல்கள் கிடைக்கும்.

ஸ்கூட்டருக்கு Series S என்று பெயரிடப்படும் என்றும், இதன் விலை ரூ .1.2 லட்சம் மற்றும் ரூ .1.4 லட்சம் ஆக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ALSO READ: Ola Electric Scooter முன்பதிவு தொடங்கியது: ரூ.499-க்கு முன்பதிவு செய்யும் முறை இதோ

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News