Ola S1 vs Ather 450X vs Simple one: உங்களுக்கு ஏற்ற மின்சார ஸ்கூட்டர் எது?
ஓலா எஸ்1, ஏதர் 450எக்ஸ் மற்றும் சிம்பிள் ஒன் ஆகியவை தற்போது இ-ஸ்கூட்டர் பிரிவில் அதிகம் பேசப்படும் ஸ்கூட்டர்களாகும். அவற்றின் சிறப்பம்சங்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
Best E-Scooter : இந்தியாவின் இ-ஸ்கூட்டர் சந்தை இன்றைய நாட்களில் போர்க்களமாக மாறியுள்ளது. இந்த செக்மென்ட்டில் பல புதிய நிறுவனங்கள் புதிய அம்சங்களுடன் மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தங்களது ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்தி வருகின்றன. மின்சார வாகனங்களின் வெற்றிக்கு அவற்றின் வரம்பு மற்றும் வடிவமைப்பு மட்டும் முக்கிய காரணிகளாக அமைவதில்லை. மின்சார வாகனங்களின் அம்சங்களும் குறிப்பிட்ட நேரத்திற்கு வாடிக்கையாளர்களுக்கு வினியோகம் செய்வதும் நிறுவனங்களின் கவனத்தில் இருக்கும் முக்கிய விஷயங்கள் ஆகும்.
ஓலா எஸ்1, ஏதர் 450எக்ஸ் மற்றும் சிம்பிள் ஒன் ஆகியவை தற்போது இ-ஸ்கூட்டர் பிரிவில் அதிகம் பேசப்படும் ஸ்கூட்டர்களாகும். அவற்றின் சிறப்பம்சங்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
மூன்று ஸ்கூட்டர்களின் சிறப்பியல்பு
பேட்டரி திறனைப் பொறுத்தவரை, இந்த மூன்றில் சிம்பிள் ஒன் (Simple One) சிறந்தது. இது 4.8kWh பேட்டரியைக் கொண்டுள்ளது. Ola S1 2.98 kWh மற்றும் Ola S1 Pro 3.97 kWh பேட்டரியைக் கொண்டுள்ளன. மறுபுறம், Ather 450X இல், 2.61 kWh பேட்டரி கிடைக்கும்.
பவரைப் பற்றி பேசினால், ஓலாவின் ஸ்கூட்டர் இதில் முன்னிலையில் உள்ளது. ஓலாவில் 11.5bhp ஆற்றல் உருவாக்கப்படுகிறது. இதை ஒப்பிடுகையில், சிம்பிள் ஒன்னில் 9.4 பிஎச்பி மற்றும் ஏதரில் 8 பிஎச்பி பவர் உருவாக்கப்படுகிறது.
ALSO READ:Ola அதிரடி: மின்சார பைக்குகள் மற்றும் மலிவு விலை மின்சார ஸ்கூட்டர்கள் விரைவில் அறிமுகம்
எடையைப் பொறுத்தவரை, இந்த மூன்றில் ஏத்தர் மிகவும் இலகுவானது, அதைத் தொடர்ந்து சிம்பிள் ஒன் மற்றும் ஓலா வருகின்றன. மொத்தத்தில், இந்த மூன்றில் ஓலா தான் அதிக எடை கொண்டது.
இப்போது வரம்பைப் பற்றி பேசினால், ஓலாவின் S1 (Ola S1) ஸ்கூட்டர் 121 கிமீ வரம்பை வழங்குகிறது, அதே நேரத்தில் ஓலா S1 ப்ரோ பதிப்பு 181 கிமீ வரம்பை வழங்குகிறது. சிம்பிள் ஒன் இந்த விஷயத்தில் ஓலாவை பின்னுக்குத் தள்ளுகிறது. அதன் ஸ்கூட்டர் 236 கிமீ வரை செல்லும் என்று நிறுவனம் கூறுகிறது. மறுபுறம், ஏதரின் ஸ்கூட்டர் 116 கிமீ தூரம் வரை செல்லும்.
வேகத்தைப் பொறுத்தவரை, Ola S1 Pro மக்களின் முதல் தேர்வாக இருக்கும். இது மணிக்கு 115 கிமீ வேகத்தில் செல்லும். சிம்பிள் ஒன் அதிகபட்சமாக மணிக்கு 105 கிமீ வேகத்தில் செல்லும். வேகத்தைப் பொறுத்தவரை, ஏத்தர் இரண்டையும் விட 80 கிமீ என்ற வேகத்துடன்
பின்தங்கியுள்ளது.
மூன்றிலும் அற்புதமான அம்சங்கள் உள்ளன
அம்சங்களைப் பற்றி பேசுகையில், இந்த மூன்று மின்சார ஸ்கூட்டர்களிலும் தொடுதிரையுடன் கூடிய TFT திரை உள்ளது. இதில் ப்ளூடூத், எல்இடி விளக்கு மற்றும் வைஃபை வசதியும் கிடைக்கும். மொபைல் அப்ளிகேஷன் ஃபென்சிங் அம்சம் மூன்று ஸ்கூட்டரிலும் கொடுக்கப்பட்டுள்ளது.
டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம் சிம்பிள் ஒன் ஸ்கூட்டரில் மட்டும் கொடுக்கப்பட்டுள்ளது. மறுபுறம், ஓலா எஸ்1 ப்ரோவில் வாய்ஸ் அசிஸ்டெண்ட், பயணக் கட்டுப்பாடு மற்றும் ஹில் ஹோல்ட் போன்ற பல்வேறு அம்சங்கள் உள்ளன. இருக்கைக்கு அடியில் உள்ள சேமிப்புத் திறனைப் பற்றி நாம் பேசினால், மற்ற இரண்டையும் விட ஓலா முன்னணியில் உள்ளது.
இவற்றின் விலை ஒப்பீடு என்ன?
ஏத்தர் (Ather) நீண்ட காலமாக மின்சார ஸ்கூட்டர் பிரிவில் உள்ளது. ஓலா மற்றும் சிம்பிள் ஒன் ஆகியவை சமீபத்தில் இந்த பிரிவில் நுழைந்துள்ளன. இந்த சூழ்நிலையில், ஸ்கூட்டர்களை சரியான நேரத்தில் டெலிவரி செய்வது இரு நிறுவனங்களுக்கும் மிகப்பெரிய சவாலாக இருக்கும்.
விலையைப் பற்றி நாம் பேசினால், ஏதர் ஸ்கூட்டரின் விலை 1.1 லட்சம் முதல் 1.3 லட்சம் ரூபாய் வரை இருக்கும். Ola S1 இன் விலை சுமார் ரூ. 1 லட்சம், ஓலா S1 ப்ரோவின் விலை ரூ.1.3 லட்சமாக வைக்கப்பட்டுள்ளது. சிம்பிள் ஒன் ஸ்கூட்டரின் விலை ரூ.1.10 லட்சம் ஆகும்.
ஒட்டுமொத்தமாக, Ola மற்றும் Ather ஆகியவை அம்சங்களின் அடிப்படையில் நல்ல போட்டியைக் கொண்டுள்ளன. அதே நேரத்தில் சிம்பிள் ஒன் வரம்பில் முன்னணியில் உள்ளது.
ALSO READ:Maruti Suzuki அளிக்கும் சூப்பர் செய்தி: இனி அதிக சி.என்.ஜி கார்களை எதிர்பார்க்கலாம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR