நாளை ஆகஸ்ட் 15 அன்று அறிமுகம் ஆகும் ஓலா எலெக்ட்ரிக் கார்
Wheels of Revolution: ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி தனது புதிய காரை அறிமுகப்படுத்துகிறது
ஓலா புதிய எலக்ட்ரிக் கார் அறிமுகம்: ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி தனது புதிய காரை அறிமுகப்படுத்தப் போவதாக சமீபத்தில் அறிவித்தது. எனினும், இது ஒரு மின்சார காரா அல்லது மின்சார ஸ்கூட்டரா என்ற குழப்பம் மக்களிடையே இருந்தது. ஆனால் இந்த குழப்பத்தை அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பவிஷ் அகர்வால் தற்போது தெளிவுபடுத்தியுள்ளார். இது குறித்த ஒரு வீடியோவை ட்வீட் செய்து அவர், நிறுவனம் புதிய கார் அறிமுகம் செய்யப்படும் என்பதை சூசகமாக தெரிவித்துள்ளார்.
ஆகஸ்ட் 15, 2022 அன்று பிற்பகல் 2 மணிக்கு நிறுவனம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிடும் என்று அகர்வால் எழுதினார். சிவப்பு நிற காரைக் காட்டும் ஒரு சிறிய வீடியோ உள்ளது.
ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் தனது எஸ்1 ப்ரோ இ-ஸ்கூட்டரை அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்து சரியாக ஒரு ஆண்டு ஆகியுள்ள நிலையில், ஆகஸ்ட் 15 அன்று ஒரு புதிய தயாரிப்பை அறிமுகம் செய்யவுள்ளது. அதனுடன் எலக்ட்ரிக் காரும் அறிமுகமாக இருப்பதாக புரிந்துக் கொள்ளப்படுகிறது.
மேலும் படிக்க | சிவப்பு நிறத்தில் மாஸ் காட்டுமா ஓலாவின் புதிய அறிமுகம்?
"புரட்சியின் சக்கரங்கள்" என்ற பதிவில் ஓலாவின் வரவிருக்கும் மின்சார காரின் பின்புறம் எப்படி இருக்கிறது என்பதற்கான ஒரு சிறிய வீடியோவையும் அவர் பதிவிட்டுள்ளார்.
இந்த வார தொடக்கத்தில் ஒரு தனி டீஸர் வீடியோவில், Ola Electric CEO எழுதினார் - “இந்த ஆண்டு நாங்கள் பணியாற்றிய அனைத்து விஷயங்களையும் பகிர்ந்து கொள்ள காத்திருக்க முடியாது! ஆகஸ்ட் 15 ஆம் தேதி மதியம் 2 மணிக்கு சந்திப்போம்!!” என்று ஒரு புதிய மின்சார வாகனம் அறிமுகம் செய்யப்படுவதைக் குறிக்கிறது.
ஓலா எலெக்ட்ரிக் தலைமை நிர்வாக அதிகாரி, இந்தியாவில் விரைவில் எலக்ட்ரிக் காரை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளதாகக் கூறுவது இது முதல் முறை அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.
நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார் பற்றிய விவரங்கள் தற்போதைக்கு பெரிய அளவில் தெரியவில்லை. ஆனால் ஓலா தனது முதல் எலக்ட்ரிக் காரை சிவப்பு நிறத்தில் வெளியிடும் என்று தெரிகிரது. ஸ்போர்ட் ஓலா லோகோவில் இருபுறமும் கிடைக்கும் என்று ஏற்கனவே வெளிப்படுத்தியுள்ளது.
வரவிருக்கும் மின்சார கார் 4 கதவுகள் கொண்ட கூபே பாணியில் ரூஃப்லைனைக் கொண்டிருக்கும் என்று லைவ்மிண்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் படிக்க | Best Mid Size Sedan: மிகக்குறைந்த விலையில் கிடைக்கும் அசத்தல் கார்களின் பட்டியல் இதோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ