ஆகஸ்ட் 15 அன்று அறிமுகம் ஆகிறது ஓலாவின் புதிய மின்சார ஸ்கூட்டர்

Ola New Electric Scooter:  ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் தனது எஸ்1 ப்ரோ இ-ஸ்கூட்டரை அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்து சரியாக ஒரு ஆண்டு ஆகியுள்ள நிலையில், ஆகஸ்ட் 15 அன்று ஒரு புதிய தயாரிப்பை அறிமுகம் செய்யவுள்ளது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Aug 9, 2022, 05:04 PM IST
  • ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் சமீபத்திய அப்டேட்.
  • ஒரு புதிய ஸ்கூட்டரை அறிமுகம் செய்யவுள்ளது நிறுவனம்.
  • டீஸரில் மின்சார ஸ்கூட்டரின் வடிவமைப்பைப் பற்றிய ஒரு கண்ணோட்டம் கிடைக்கிறது.
ஆகஸ்ட் 15 அன்று அறிமுகம் ஆகிறது ஓலாவின் புதிய மின்சார ஸ்கூட்டர் title=

ஓலா புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வெளியீடு: ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி ஒரு புதிய தயாரிப்பை அறிமுகப்படுத்தப் போவதாக சமீபத்தில் அறிவித்தது. எனினும், இது ஒரு மின்சார காரா அல்லது மின்சார ஸ்கூட்டரா என்ற குழப்பம் மக்களிடையே இருந்தது. ஆனால் இந்த குழப்பத்தை அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பவிஷ் அகர்வால் தற்போது தெளிவுபடுத்தியுள்ளார். இது குறித்த ஒரு வீடியோவை ட்வீட் செய்து அவர், ​​​​நிறுவனம் புதிய ஸ்கூட்டரை அறிமுகம் செய்யவுள்ளதாகக் கூறினார். 

ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் தனது எஸ்1 ப்ரோ இ-ஸ்கூட்டரை அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்து சரியாக ஒரு ஆண்டு ஆகியுள்ள நிலையில், ஆகஸ்ட் 15 அன்று ஒரு புதிய தயாரிப்பை அறிமுகம் செய்யவுள்ளது. 

மேலும் படிக்க | சிவப்பு நிறத்தில் மாஸ் காட்டுமா ஓலாவின் புதிய அறிமுகம்? 

டீஸர் வீடியோவை வெளியிட்டு, ​​நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பவிஷ் அகர்வால், "எங்கள் கிரீனஸ்ட் EV-ஐ ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியிடுவோம்” என்று எழுதினார். டீஸரில் மின்சார ஸ்கூட்டரின் வடிவமைப்பைப் பற்றிய ஒரு கண்ணோட்டமும் கிடைக்கிறது. இதன் வடிவமைப்பு ஓலா எஸ்1 ப்ரோ போன்றே உள்ளது. ஆகையால் தற்போது வெளிவரவுள்ள இந்த புதிய ஸ்கூட்டர் ஓலா எஸ்1-ன் புதுப்பிக்கப்பட்ட பதிப்பாகவும் இருக்கலம, அல்லது புதிய ஸ்கூட்டரை புதிய நிறத்திலும் நிறுவனம் அறிமுகம் செய்யலாம். 

இருப்பினும், 15 ஆம் தேதி அறிமுகம் ஆகவுள்ள ஸ்கூட்டர் எது என்பது குறித்து எந்த விவரங்களும் தற்போது இல்லை. ஓலா எஸ்1 ப்ரோவின் மலிவு பதிப்பையும் நிறுவனம் அறிமுகம் செய்யக்கூடும். ஓலா எஸ்1 ப்ரோவில் உள்ள சில அம்சங்களை குறைத்து, அதற்கு ஈடாக ஸ்கூட்டரின் விலையை நிறுவனம் மலிவாக்கலாம் என்றும் சிலர் கருதுகிறார்கள். 

ஓலாவின் மிகப்பெரிய போட்டியாளரான ஏதர் எனர்ஜி ரூ. 1 லட்சத்தில் இ-ஸ்கூட்டரை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. இதுபோன்ற சூழ்நிலையில் ஓலாவுக்கு சவால் மேலும் அதிகரிக்கப் போகிறது. நிறுவனம் சமீபத்தில் அதன் எஸ்1 ப்ரோ விலையை உயர்த்தியது. இதன் விலை இப்போது ரூ.1.20 லட்சம் ஆகும் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி, அனைத்து மானியங்களுக்கும் பிறகு).

மேலும் படிக்க | Best Mid Size Sedan: மிகக்குறைந்த விலையில் கிடைக்கும் அசத்தல் கார்களின் பட்டியல் இதோ 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News