குறைந்த விலையில் Jio சூப்பர் பிளான்; பொறாமைப்படும் Vi பயனர்கள்
ஜியோ (Jio) மற்றும் வோடபோன்-ஐடியா (Vodafone-Idea) ரூ.300க்கு குறைவான விலையில் இருக்கும் திட்டங்களைப் பற்றி இன்று நாம் காண உள்ளோம்.
புதுடெல்லி: ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன்-ஐடியா ஆகியவை தங்களது திட்டங்களின் விலையை உயர்த்தியுள்ளன. அத்தகைய சூழ்நிலையில், எந்த திட்டம் சிறந்தது என்று பயனர்கள் குழப்பமடைகிறார்கள். ஜியோ மற்றும் வோடபோன்-ஐடியா ரூ.300க்கு குறைவான விலையில் இருக்கும் திட்டங்களைப் பற்றி இன்று நாம் காண உள்ளோம். ஜியோவில் ரூ.239 திட்டம் உள்ளது, அதேபோல் விஐயில் ரூ.299 திட்டம் உள்ளது. குறைந்த விலையில் அதிக சலுகைகளை ஜியோ வழங்கி வருகிறது. இரண்டு திட்டங்களையும் பற்றி விரிவாக தெரிந்து கொள்வோம்..
வோடபோன்-ஐடியாவின் ரூ.299 திட்டம்
வோடபோன் ஐடியாவின் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டத்தில் (Prepaid Plans), பயனர்கள் ஒரு நாளைக்கு 1.5 ஜிபி டேட்டாவைப் பெறுகிறார்கள். இதனுடன், அன்லிமிடெட் காலிங் மற்றும் 100 எஸ்எம்எஸ்/நாள் திட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இதில் அனைத்து Vi Hero அன்லிமிடெட் நன்மைகளும் அடங்கும். இந்த கூடுதல் நன்மைகளில் Binge All Night, Weekend Data Rollover மற்றும் Data Delights போன்ற சலுகைகள் அடங்கும்.
ALSO READ | Prepaid Recharge Plan: 130க்குள் அசத்தலான ரீசார்ஜ் பிளான் அறிமுகம்; என்ன சலுகைகள்
Binge All Night சலுகையின் மூலம், பயனர்கள் எந்த கவலையும் இல்லாமல் தினமும் 12 am முதல் 6 am வரை அன்லிமிடெட் டேட்டாவைப் பயன்படுத்தலாம். இந்த திட்டம் Vi Movies மற்றும் TV கிளாசிக்கின் ஓவர்-தி-டாப் (OTT) நன்மைகளுடன் வருகிறது. விலை உயர்வுக்கு முன், இந்த திட்டத்தின் விலை 249 ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜியோவின் ரூ.239 திட்டம்
ஜியோவின் (Jio) ரூ.239 திட்டத்தில், பயனர் 28 நாட்கள் வேலிடிட்டியைப் பெறுகிறார். இதில், பயனர் ஒரு நாளைக்கு 1.5 ஜிபி டேட்டாவைப் பெறுகிறார். அதாவது மொத்தம் 42 ஜிபி டேட்டா ஆகும். இந்த திட்டத்தில் உள்ள எந்த நெட்வொர்க்கிலும் அன்லிமிடெட் காலிங் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் கிடைக்கும். ஜியோ பயன்பாடுகளுக்கான அணுகல் திட்டத்துடன் கிடைக்கிறது.
ஏர்டெல் ரூ.299 திட்டம்
ஏர்டெலிலும் (Airtel) ரூ.299 திட்டத்தம் உள்ளது. இந்த திட்டத்தில் 28 நாட்கள் செல்லுபடியாகும் மற்றும் தினசரி 1.5 ஜிபி டேட்டா கிடைக்கும். இது தவிர, அன்லிமிடெட் காலிங் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் கிடைக்கும். கூடுதல் நன்மைகளைப் பற்றி பேசுகையில், Amazon Prime வீடியோ மொபைல் பதிப்பின் இலவச சோதனை, இலவச HelloTune மற்றும் Wink Musicக்கான இலவச சந்தா உள்ளது.
ALSO READ: இந்த திட்டத்தில் ஜியோ-ஏர்டெல் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளிய வோடஃபோன் ஐடியா
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR