ஜியோவின் இந்த மூன்று ப்ரீபெய்டு திட்டங்களுக்கும் அதிரடி கேஷ்பேக் ஆஃபர்!

கடந்த சில தினங்களுக்கு முன்னர் ரிலையன்ஸ் ஜியோ ரீசார்ஜ் திட்டங்களின் கட்டணங்களை உயர்த்தி பயனாளர்களுக்கு அதிர்ச்சியினை அளித்தது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 3, 2021, 04:45 PM IST
ஜியோவின் இந்த மூன்று ப்ரீபெய்டு திட்டங்களுக்கும் அதிரடி கேஷ்பேக் ஆஃபர்! title=

கடந்த சில தினங்களுக்கு முன்னர் ரிலையன்ஸ் ஜியோ ரீசார்ஜ் திட்டங்களின் கட்டணங்களை உயர்த்தி பயனாளர்களுக்கு அதிர்ச்சியினை அளித்தது.  தற்போது பயனாளர்களை மகிழ்விக்கும் விதமாக ஜியோ நிறுவனம் அதன் மூன்று ப்ரீபெய்ட் திட்டங்களிலும் 20 சதவீத ஜியோமார்ட் கேஷ்பேக்கை வழங்குவதாக அறிவித்துள்ளது.  இந்தியாவில் ஜியோவின் இந்த ப்ரீபெய்ட் திட்டங்களின் விலைகள் முறையே ரூ. 719, ரூ. 666, மற்றும் ரூ.299.  இந்த திட்டங்களின் வேலிடிட்டி 28 நாட்கள் முதல் 84 நாட்கள் வரையிலும் செயல்படும்.  ஜியோ வழங்கும் இந்த கேஷ்பேக் ஆஃபரை அனைத்து ரிலையன்ஸ் ரீடெய்ல் கடைகள் மற்றும் ஆன்லைன் சேனல் இருந்து பொருட்கள் மற்றும் சேவைகளை பெற்றுக்கொள்ளலாம்.  

ALSO READ Jio அளித்த அதிர்ச்சி: அடுத்தடுத்து ரீசார்ஜ் திட்டங்களின் கட்டணங்களில் அதிகரிப்பு

மேலும் இதில் ஜியோ ரீசார்ஜ், ஜியோமார்ட், ரிலையன்ஸ் ஸ்மார்ட், அஜியோ, ரிலையன்ஸ் டிரெண்ட்ஸ், ரிலையன்ஸ் டிஜிட்டல், நெட்மெட்ஸ் போன்றவை அடங்கும்.  மேலும் வாடிக்கையாளர் ஒவ்வொரு நாளும் நிச்சயம் ரூ.200 கேஷ்பேக்கை பெறுவார்கள் என்று ரிலையன்ஸ் தெரிவித்துள்ளது.  ஜியோவின் ரூ. 719 ப்ரீபெய்ட் திட்டமானது தினசரி 2 GB அதிவேக டேட்டாவுடன் கிடைக்கிறது, அவற்றை குறிப்பிட்ட அளவு பயன்படுத்தியதும், வேகம் 64Kbps ஆக குறைகிறது. இந்த திட்டம் அன்லிமிடெட் அழைப்புகள் மற்றும் 100 SMS-களையும் வழங்குகிறது. மேலும் இந்த திட்டமானது 20 சதவீத ஜியோமார்ட் கேஷ்பேக் மற்றும் ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ செக்யூரிட்டி மற்றும் ஜியோ கிளவுட் போன்ற பயன்பாடுகளை வழங்குகிறது.

jio

அதனையடுத்து ஜியோவின் ரூ. 666 ப்ரீபெய்ட் திட்டமானது 84 நாட்கள் வேலிடிட்டியுடன் தினசரி 1.5 GB அதிவேக டேட்டா,  100 SMS , அன்லிமிடெட் அழைப்புகள் போன்றவற்றை வழங்குகிறது.  அடுத்ததாக ரூ. 299 ப்ரீபெய்ட் திட்டமானது 28 நாட்கள் வேலிடிட்டியுடன், தினசரி 2 GB அதிவேக டேட்டா,  அன்லிமிடெட் அழைப்புகள் மற்றும் 100 SMS-களையும் வழங்குகிறது.   இந்த இரண்டு திட்டங்களும் 20 சதவீத ஜியோமார்ட் கேஷ்பேக் மற்றும் ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ செக்யூரிட்டி மற்றும் ஜியோ கிளவுட் போன்ற பயன்பாடுகளை வழங்குகிறது.  ரீசார்ஜ் செய்த மூன்று நாட்களுக்குள் கேஷ்பேக் ஆஃபர் பயனர்கள் கணக்கில் வரவு வைக்கப்படும்.  அதனை  ரிலையன்ஸ் ரீடெய்ல் சேனல்கள் மூலம் எடுத்துக்கொள்ளலாம் என்றும் ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

ALSO READ 2021-ல் அதிகம் பயன்படுத்தப்பட்ட எமோஜிகள்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News