ஏர்டெல் தேங்க்ஸ் ஆப் மூலம் இலவச அமேசான் பிரைம் மெம்பர்ஷிப்
ஏர்டெல் தேங்க்ஸ் ஆப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் இலவசமாக ஒரு ஆண்டுக்கான அமேசான் பிரைம் மெம்பர்ஷிப் சந்தாவை பெறலாம். அதனை எப்படி பெறுவது என்பதை பார்க்கலாம்.
இந்தியாவின் முன்னணி டெலிகாம் ஆபரேட்டர்களில் ஒன்றான ஏர்டெல், அதன் ஏர்டெல் தேங்க்ஸ் ஆப் மூலம் அதன் வாடிக்கையாளர்களுக்கு ஒரு கவர்ச்சியான சலுகையை வழங்குகிறது. ஏர்டெல் பயனர்கள் இப்போது ஒரு வருட இலவச அமேசான் பிரைம் உறுப்பினர் ஆப்சனைப் பெறலாம். இந்த சலுகை ஏர்டெல் ப்ரீபெய்டு, போஸ்ட்பெய்டு மற்றும் பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும். போஸ்ட்பெய்டு பயனர்கள் ரூ.499 அல்லது அதற்கு மேற்பட்ட திட்டத்தில் இருந்தால், ப்ரீபெய்டு பயனர்கள் ரூ.349 அல்லது அதற்கு மேல் ரீசார்ஜ் செய்தால், பிராட்பேண்ட் பயனர்கள் ரூ.999 அல்லது அதற்கு மேற்பட்ட திட்டத்திற்கு மாறினால் இந்த சலுகை கிடைக்கும்.
மேலும் படிக்க | ஜியோ vs ஏர்டெல்: 84 நாட்கள் 3ஜிபி டேட்டா, இலவச நெட்பிளிக்ஸ் - எது பெஸ்ட்
உங்கள் இலவச அமேசான் பிரைம் மெம்பர்ஷிப்பைப் பெற, பின்வரும் எளிய வழிமுறைகளைப் பின்பற்றவும்:
- உங்கள் ஆப் ஸ்டோரில் இருந்து Airtel செயலியை டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்யவும்.
- உங்கள் ஃபோன் எண்ணைப் பயன்படுத்தி செயலியை ஓபன் செய்து, மேல் வலது மூலையில் உள்ள "டிஸ்கவர் ஏர்டெல் தேங்ஸ்" என்பதை கிளிக் செய்யவும்.
- கீழே ஸ்க்ரோல் செய்து அமேசான் பிரைம் மெம்பர்ஷிப் ஆப்ஷனைக் கண்டறிந்து, "கிளைம்" பட்டனைத் தட்டவும்.
- நீங்கள் Amazon Prime Login பக்கத்திற்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள். உங்கள் Reward- ஐ பெற, உங்கள் login விவரங்களை உள்ளிடவும்.
- இந்த சலுகை 2024 ஆகஸ்ட் 31 வரை மட்டுமே செல்லுபடியாகும். எனவே, நீங்கள் இந்த சலுகையைப் பெற விரும்பினால், உடனடியாக உங்கள் ஏர்டெல் தேங்க்ஸ் ஆப்பில் கிளைம் செய்யவும்.
இந்த சலுகை ஏர்டெல் பயனர்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பாகும். அமேசான் பிரைம் உறுப்பினர்களுக்கு 1 நாள் டெலிவரி, பிரைம் டே விற்பனைக்கான முன்கூட்டிய அணுகல் மற்றும் சிறப்பு தயாரிப்பு சலுகைகள் போன்ற பல நன்மைகள் கிடைக்கும். இந்த சலுகையைப் பயன்படுத்தி, நீங்கள் இந்த நன்மைகளை அனுபவித்து, உங்கள் டிஜிட்டல் அனுபவத்தை மேம்படுத்தலாம்.
மேலும் படிக்க | இந்திய ரயில்வேயின் சூப்பர் ஆப்: இனி ரயில் பயணம் ஈஸி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ