ஒன்பிளஸ் நிறுவனம் மொபைல் விற்பனையில் கோலோச்சிக் கொண்டிருக்கிறது. தீபாவளி முதல் புத்தாண்டு வரை என எந்த விழாக் கால பண்டிகை வந்தாலும் அதிரடி ஆஃபர்களை அறிவித்து வாடிக்கையாளர்களை கவர்ந்துவிடுகிறது. குறிப்பாக, அந்த நிறுவனம் பட்ஜெட் விலையில் இறக்கும் தரமான ஸ்மார்ட்போன்கள் வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்கு மற்றொரு காரணமாக கூறப்படுகிறது. அந்தவகையில், அமேசான் ஆன்லைன் விற்பனையில் அதிகம் விற்பனையான மொபைல்கள் பட்டியலிலும் ஒன்பிளஸ் நிறுவனத்தின் மொபைலே இடம்பிடித்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க: வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி குடுத்த BSNL! இனி இந்த திட்டம் இல்லை!


ஒன்பிளஸ் நிறுவனத்தின் OnePlus 10R மொபைல் அமேசான் தளத்தில் அதிகம் விற்பனையான மொபைல்கள் பட்டியலில் முதல் இடம் பிடித்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல் இந்தியாவில் அதிகம் விற்பனையான மொபைல்கள் பட்டியலிலும் OnePlus 10R மொபைல் இடம்பிடித்திருக்கிறது. அண்மையில் வெளியான தரவுகளின்படி, இந்தியாவில் அதிகம் விற்பனையான டாப் 5 மொபைல்கள் பட்டியலில் Samsung M33 5G ஸ்மார்ட்போன் இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறது. Redmi A1 ஸ்மார்ட்போன் 5வது இடத்தை பிடித்துள்ளது. 


அண்மையில் அமேசான் நிறுவனம் தி கிரேட் ரிபப்ளிக் டே விற்பனையை தொடங்கியது. அதாவது குடியரசு தினத்தையொட்டி வெளியிடப்பட்ட ஆஃபர் விற்பனையில், அமேசான் தளத்தில் ஒன்பிளஸ் மொபைல்களுக்கு அதிக தள்ளுபடிகள் கொடுக்கப்பட்டன. குறிப்பாக, OnePlus 10R மொபைல் ரூ.29,999க்கு மட்டுமே விற்பனை செய்யப்பட்டது. இது அதன் திறன் கொண்ட தொலைபேசிகளில் மிக குறைவான விலையில் கிடைக்கும் மொபைல் என்பதால் வாடிக்கையாளர்கள் தேடி தேடி வாங்கியுள்ளனர். Dimensity 8100 Max, 120Hz AMOLED டிஸ்ப்ளே, 50MP கேமரா நல்ல பேட்டரி ஆகியவற்றை கொண்ட தரமான ஸ்மார்ட்போன் என விமர்சனங்கள் கூறுகின்றன.


மேலும் படிக்க: BSNL: ரூ.397-க்கு ரீச்சார்ஜ் செய்தால் வருஷம் முழுவதும் டேட்டா, அழைப்புகள் இலவசம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ